வெஞ்சென்ஸ்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அபர்நதி, இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன் ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, டி.எம்.கார்த்திக் ஸ்ரீனிவாசன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆதவன், நோபல் கே. ஜேம்ஸ் , குமாரி சச்சு, மங்கல், சைதன்யா, ரேகா நாயர் ,
சம்யுக்தா, விசித்திரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராகுல் அசோக்.
ஒளிப்பதிவாளர் :- எம்.எஸ். பிரபு.
படத்தொகுப்பாளர் :- இம்ரான்.
இசையமைப்பாளர் :- கார்த்திக் ராஜா, அருண் ராஜ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏசி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- ஏ.பி.அசோக் குமார்.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 3.2./5.
சிறு வயது முதலே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் கதாநாயகி அபர்ணதி, அதற்கான முதல் முயற்சியாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு கிடைக்கும் அந்த பாராட்டும், புகழ்ச்சியும் மூன்று நாட்களில் அடங்கிப் போனதால், தன்னைப் பற்றி தொடர்ந்து மக்கள் அனைவரும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது பிடிவாதமான எண்ணத்தில் அதற்காக கதாநாயகி அபர்ணதி,சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை செய்கிறார்.
தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காகவே மிகப்பெரிய அளவில் படித்து வளர்ந்து மாவட்ட ஆட்சியராகி, தன் பதவியின் மூலமும், தனது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறும் கதாநாயகி அபர்ணத்திக்கு, முதல்வர் இளவரசு மூலமாக அடிக்கடி தடை ஏற்படுகிறது,
தனக்கு ஏற்படும் அனைத்து தடையை தகர்த்தெறிவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் கதாநாயகி அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதலமைச்சர் இளவரசு கதாநாயகி அபர்ணதி சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய இடத்திற்கு முன்னேறுகிறார்.
முதலமைச்சர் இளவரசு கதாநாயகி அபர்ணதி சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய இடத்திற்கு முன்னேறுகிறார்.
முதலமைச்சர் இளவரசு கதாநாயகி அபர்ணதியின் முன்னேற்றத்திற்கு ஏதாவது முதலமைச்சர் இளவரசு மூலம் தடை ஏற்பட்டதா?, தடை ஏற்படவில்லையா?,
கதாநாயகி அபர்ணதியின் முன்னேற்றத்திற்கு இணையாக எதிர்ப்புகளையும், அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு தன்னுடைய புத்திசாலித்தனத்தால் எப்படி எதிர்ப்புகளை முறியடித்தாரா?, முறியடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த, ‘வெஞ்சென்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘வெஞ்சென்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அபர்ணதி, நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, புத்திசாலித்தனமும் தைரியமும், நிறைந்த பலம் வாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்திற்கு சிறப்பான நடிப்பை கொடுத்து சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
மிகவும் தெள்ளத் தெளிவான பேச்சு, மிகவும் தைரியமான செயல் கூர்மையான பார்வை, என தன்னுடைய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களை நினைவுப்படுத்தும் வகையில் பல காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார்.
முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், கதையின் நாயகி அபர்ணதி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா அனைவருடைய கதாபாத்திரங்கள் தமிழக அரசியல் சம்பவங்களையும், அரசியல்வாதிகளையும் நினைவுப்படுத்தும் வகையில் சிறப்பான கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரித்துள்ளார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும், பின்னணி இசை திரைக்கதையின் ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக பயணித்திருக்கிறார்.
மக்கள் அனைவரும் தன்னை பற்றி புகழ்ந்து பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற கதையின் நாயகி அபர்ணதி ஆசையை பற்றிய கதைக்கருவாக வைத்துக் கொண்டு, தமிழக அரசியல் உள்ள தலைவர்கள் மற்றும் அரசியலில் நடந்த சம்பவங்களை வைத்து கொண்டு அதை திரைக்கதையாக எழுதி திரைப்படத்தை வேகாமாகவும், விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.
மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’ அதிர வைக்கும் முன்னாள் அரசியல் தலைவர்கள் பற்றிய திரைப்படம்.











