‘கெணத்த காணோம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுரேஷ் சங்கையா.

ஒளிப்பதிவாளர் :- தியாகராஜன்.

படத்தொகுப்பாளர் :- ராமர்.

இசையமைப்பாளர் :- நிவாஸ் கே பிரசன்னா.

தயாரிப்பு நிறுவனம் :- ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ரமேஷ்பாபு & ஜெகன் பஷீகரன்.

மக்கள் தொடர்பு :- ஸ்ரீ வெங்கடேஷ்.

ரேட்டிங் :-  3.5./5.

இராமநாதபுரம் மாவட்டத்தில்  உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய கிராமத்திற்கு  குடிநீரை இப்படிப்பட்டாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு உள்ள நிலத்தில் தண்ணீரின் ஓட்டம் இருப்பது தெரிகிறது.

தண்ணீரின் ஓட்டம் இருக்கும் அந்த இடம் கதாநாயகன் யோகி பாபுவின் வீடு உள்ளதால் கிராம மக்களின்  நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள்.

கதாநாயகன் யோகி பாபுவின் வீடு உள்ள இடத்தில் குடிநீர் இருப்பதால் கிராம மக்களின்  நன்மைக்காக இந்த இடத்தை கொடுக்க சம்மதம் சொல்லும் கதாநாயகன் யோகி பாபுவின் தாத்தா, போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக கூறுகிறார்.

அதன்படி, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த கதாநாயகன் யோகி பாபு வீடு உள்ள இடத்தில்  கிணறு தோண்டும் நிலையில்  அப்போது அந்த கிணறு  தோண்டும் பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது.

இதையடுத்து அந்த கிணறு தோண்டும் இடத்தில் தொல்லியல் துறை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில்  முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த கிராமம்  முழுவதிலும தொல்லியல் துறை தங்களது பட்டுக்கோட்டையில் கொண்டு வந்து ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறார்கள்.

இதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறும்  சூழல் ஏற்படுகிறது.

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும், தங்களது சொந்த மக்களையும் மண்ணையும் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் கதாநாயகன் யோகி பாபு,

தனது சொந்த கிராமத்தில் உள்ள மக்களையும் மண்ணையும் காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா?,
என்பதுதான் இந்த ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.
 
கோவில் பூசாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் யோகி பாபு, வழக்கமான தனது கேலியான வசனங்களை தவிர்த்து  இந்த கிராமத்தில் உள்ள மக்களை நல்வழிப்படுத்தும் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றும் படியான  காட்சிகளில் வசனங்களை பேசி கதாநாயகனாக ஜொலிக்கிறார்.

சொந்த ஊரை விட்டு செல்வது, உயிர் உடலை விட்டு செல்வதற்கு சமம், என்ற   வசனங்களை பேசி, மக்களையும் மண்ணையும் காப்பாற்ற போராடும் கதாநாயகன் யோகி பாபு அதை நகைச்சுவையோடு  சிரிக்கவும் சிந்திக்கவும்  வைக்கிறார்.

இந்த ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தில்  கதாநாயகியாக லவ்லின் சந்திரசேகர், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்களை மட்டும் பேசி கதாநாயகன் யோகி பாபுவின் காதலி கதாபாத்திரத்தில்  வலம் வருகிறார்.

தொல்லியல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் இருவரும்  கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறது.

மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மூலம் திரைப்படம் முழுவதும் சிரிப்பு சரவெடியாக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், கதாநாயகன் யோகி பாபுவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை, ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அனைவரும் கிராமம் சார்ந்த மக்களை பிரதிபலிக்கும் விதத்தில் மிகவும் இயல்பாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். 

ஒளிப்பதிவாளர் தியாகராஜன், ஒளிப்பதிவு மூலம் கிராமத்து மக்களையும் புழுதி படிந்த மண் மற்றும் குடிநீர் இன்றி வாடி வதங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மக்களை மிக நேர்த்தியாக  காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை குடிநீருக்காக வாடி வதங்கும் கிராம மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் இசை   அமைந்திருக்கிறது.

தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை வன்முறை நிறைந்ததாகவும் சொல்பவர்களுக்கு மத்தியில், கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை வலி மிகுந்த வாழ்க்கையையும்,  நகைச்சுவையாக சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா,

மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’ கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை வலி மிகுந்த வாழ்க்கையையும்,  நகைச்சுவையாக சொல்லும் திரைப்படம்.

error: Content is protected !!