’பைக்கர்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, பிரம்மாஜி, ஷஷாங்க், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அபிலாஷ் ரெட்டி.
ஒளிப்பதிவாளர் :- ஜெ யுவராஜ்.
படத்தொகுப்பாளர் :- அனில் பசாலா.
இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.
தயாரிப்பு நிறுவனம் :- UV கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.75./5.
பல திரைப்படங்கள் தோல்விகளுக்குப் பிறகு, நடிகர் ஷர்வானந்த் ‘நாரி நாரி நடும முராரி’ திரைப்படம் மூலம் வெற்றியை கொடுத்திருக்கிறார்.
தற்போது பைக் ரேஸ் கதையான ‘பைக்கர்’ திரைப்படத்தோட வந்திருக்கார்.
இதுல சீனியர் நடிகர் ராஜசேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார்.
‘எக்ஸ்ட்ராடினரி மேன்” திரைப்படத்துக்குப் பிறகு அவர் ஏற்கும் இரண்டாவது கதாபாத்திரத்தில் ரோல் ‘பைக்கர்’ திரைப்படம்.
இந்திய திரைப்பட பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து விளையாட்டு சார்ந்த திரைப்படங்களையே விரும்புகின்றனர்.
அந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ‘பைக்கர்’ திரைப்படம் தன்னை இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் திரைப்படமாக நிலைநிறுத்திக் கொண்டு, அதன் மூலம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் அடிப்படையிலான திரைப்படம் என்று கூறப்படும் ‘ பைக்கர்’ இந்த 03 ஏப்ரல் 2026 அன்று வெளிவந்துள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள கதாநாயகன் ஷர்வானந்த் ஒரு திறமையான பைக் ரேஸ் சாம்பியன் அவருடைய தந்தை முன்னாள் மோட்டோகிராஸ் இந்திய பைக் ரேஸ் சாம்பியன் ராஜசேகர் தன்னுடைய மகன் கதாநாயகன் ஷர்வானந்தை எப்படியாவது உலக பைக் ரேஸ் சாம்பியனாக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
கதாநாயகன் ஷர்வானந்த் மோட்டோகார்ட் நடத்தி கொண்டு தனது மனைவி கதாநாயகி மாளவிகா நாயர் மகன் இஷான் ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் ஷர்வானந்த், மகன் இஷான் படிக்கும் பள்ளியில் தன் தந்தையை பற்றி தவறாக பேசியதால் தன்னுடன் படிக்கும் சிறுவனை இஷான் அடித்து விடுகிறார்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் சிறுவனை இஷான் அடித்த சம்பவம் மூலம், கதாநாயகன் ஷர்வானந்த் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழ்கிறார்.
கதாநாயகன் ஷர்வானந்த் சொல்லாமல் கொள்ளாமல் கதாநாயகி மாளவிகா நாயரை திருமணம் செய்து கொண்டதால் பல வருடமாக ராஜசேகர் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.
இதற்கிடையில், கதாநாயகன் ஷர்வானந்த்தின் தந்தை தந்தையை ராஜசேகர் ஐஎன்ஜி நிறுவன மோசடி குற்றச்சாட்டில் அவமானப்படுத்தப்படுகிறார்.
தனது தந்தையின் அவமானத்தை மீட்டெடுக்க, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோட்டோகிராஸ் பைக் ரேஸிங் களத்தில் இறங்கும் கதாநாயகன்ஷர்வானந்த், மோட்டோ கிராஸ் பைக் ரேஸிங் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, தனது தந்தை ராஜசேகர் பட்ட அவமானத்தை கதாநாயகன் ஷர்வானந்த் மீட்டெடுத்தாரா?, மீட்டெடுக்க வில்லையா?, தந்தை ராஜசேகர் கதாநாயகன் ஷர்வானந்தை ஏற்றுக்கொண்டாரா? ஏற்றுக்கொள்ளவில்லையா?,
என்பதுதான் இந்த ‘பைக்கர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பைக்கர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஷர்வானந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷர்வானந்த் விகாஸ் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரேஸிங் காட்சிகளில் அவரது உடல் மொழி உழைப்பு மற்றும் அருமையான முகபாவனைகளிலும் அர்ப்பணிப்பு தெளிவாக தெரிகிறது.
கதாநாயகன் ஷர்வானந்த் ஒரு நிஜ மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக நடித்திருக்கிறார் .
இந்த ‘பைக்கர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா நாயர் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா நாயர் எளிமையான கதாபாத்திரத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகன் ஷர்வானந்த் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜசேகர் தனது அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவு மூலம் எத்தனை கேமராக்கள் மூலம் ரேஸிங் காட்சிகளை படமாக்கினார் என்பது நமக்கு தெரியவில்லை, ஆனால், ஒவ்வொரு கேமரா கோணத்திற்கும் அவர் கடினமாக உழைத்திருப்பதை திரைப்படத்தில் காணும் காட்சிகள் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் ஜெ யுவராஜின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமா உள்ள நிலையில் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது .
மோட்டோகிராஸ் போன்ற அதிகமாக பயன்படுத்தப்படாத விளையாட்டை மையமாக கொண்டு கதை சொல்லியிருப்பது திரைப்படத்தின் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான விளையாட்டு திரைப்படமாக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தி குடும்ப உணர்வுகள், தந்தை-மகன் உறவு ஆகியவை ஓவராக இல்லாமல் கதையோடு கலந்து மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி.
மொத்தத்தில் இந்த ‘பைக்கர்’ திரைப்படம் மோட்டோகிராஸ் அனைத்து பந்தயங்களும் பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறது.











