’பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர். காந்தி கிருஷ்ணா.
ஒளிப்பதிவாளர் :- எம்.வி. பன்னீர்செல்வம்.
படத்தொகுப்பாளர் :- எஸ் பாஸ்கர் & சுஜித்.
இசையமைப்பாளர் :- ஜி வி பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- கிரிஜா வரதராஜ்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா.
ரேட்டிங் :- 3.5./5.
மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் கதாநாயகி ரோஸ்மின், சரியான வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கதாநாயகன் ராணவுக்கு தன்னுடைய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுக்கிறார்.
இவர்கள் இருவரின் நட்பு காதலாக மாறி, கதாநாயகன் ராணவ் மற்றும் கதாநாயகி ரோஸ்மின், இருவரின் காதலுக்கு கதாநாயகியின் தந்தை சம்பத் ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
கதாநாயகி ரோஸ்மின், தந்தை சம்பத் ராஜ் எதிர்ப்பை மீறி கதாநாயகன் ராணவை திருமணம் செய்து கொள்ளும் கதாநாயகி ரோஸ்மின், தன்னுடைய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை கதாநாயகன் ராணவ்க்கு கொடுத்து, மிகப்பெரிய அளவில் வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார்.
ஆனால் கதாநாயகன் ராணவ் மற்றும் கதாநாயகி ரோஸ்மின், இருவரின் மணவாழ்க்கையில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, மற்றும் அன்பு பரிமாற்றம் அனைத்து மறைந்து, மோதலும், வெறுப்பும் இவர்களின் வாழ்க்கையில் அதிகரிக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் புரிவதற்கான என்ன காரணம் ?, இவர்கள் இருவரும் காதலித்த வேகத்தை விட அதிக வேகத்தில் பிரிவதற்கான காரணம் என்ன?, இவர்கள் இருவரும் பிரியாமல் சந்தோஷமாக வாழ்ந்தார்களா? சந்தோஷமாக வாழவில்லையா?, என்பதுதான் இந்த ‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ராணவ் நடித்திருக்கிறார்.
புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் திரைப்படம் போல் இல்லாமல் பல திரைப்படம் நடித்தது போல் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
இந்த ‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக ரோஸ்மின், நடித்துள்ளார்.
புதுமுக கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் திரைப்படத்திலேயே மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் மிகவும் அளவாக நடித்து முதல் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி திரைப்பட ரசிகர்களை கவனம் ஈர்க்கிறார்.
மற்றொரு கதாநாயகன், மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் இவர்களின் ஜோடி, வயதுக்கு ஏற்ஞ துள்ளல் மற்றும் மோதல் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கதாநாயகி ரோஸ்மின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி, கதாநாயகன் ராணவ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ச்சனா மற்றும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சி ரங்கநாதன் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு முலம் திரைப்படத்தை கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக திரைப்படத்திற்கு இது பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் நிச்சயம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.
தற்போதுள்ள காலக்கட்டத்தில், முதல் நாள் அறிமுகம், அடுத்த நாளே காதல் பரிமாற்றம், ஒரு சில மாதங்களில் கல்யாணம் என்று அவசரம் அவசரமாக பிரியும் முடிவு எடுக்கும் இளைஞர்கள், அதை விட அவசரமாக பிரிவு முடிவையும் எடுப்பது ஏன்? என்பதற்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா.
மொத்தத்தில், ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் பிரிவு எண்ணத்தை கைவிட வைக்கும்.











