‘பாரீஸ் கஃபே’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- குரு சோமசுந்தரம், அனு மோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா அர்ச்சனா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சரஜ் சீலன்.
ஒளிப்பதிவாளர் :- சதேஷ் ஜி.
படத்தொகுப்பாளர் :- வி. ஜே. சாபு ஜோசப்.
இசையமைப்பாளர் :- கே.
தயாரிப்பு நிறுவனம் :- தண்டர் மீடியா, எல் வி என்டர்டைன்மெண்ட்..
தயாரிப்பாளர்கள் :- கண்மணி ரங்கநாதன், வெங்கல் லிங்கேஸ்வரன்.
மக்கள் தொடர்பு :- ரியாஸ் கே அகமத்.
வெளியீட்டு தேதி :- செப்டம்பர் 17 2026.
ரேட்டிங் :- 2.5/5.
வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் அர்ச்சனா, தனது தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்வதை எதிர்பாராத விதமாக அறிந்து கொள்கிறார்.
வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் அர்ச்சனா, விஜய் விஷ்வா காதலித்து வருகிறார்.
தனது தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்வதை தெரிந்து கொள்வதற்காக அர்ச்சனா, மற்றும் விஜய் விஷ்வா உடனடியாக இந்தியாவுக்கு கிளம்பி வருகிறார்.
தனது தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளும் தெரிந்து கொள்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் பிரிந்த தனது தாய் தந்தையை அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகள் கண்டறிந்து சேர்த்து வைத்தாரா?, சேர்த்து வைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘பாரீஸ் கபே’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பாரீஸ் கபே’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைகிறது.
கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதிலும்
அதிகப்படியான வசனங்களைக் காட்டிலும் முகபாவனைகள் மற்றும் உடல் மொழியின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
குறிப்பாக குடும்ப உறவில் ஏற்படும் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது அனுபவம் தெரிகிறது.
இந்த ‘பாரீஸ் கபே’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அனுமோல் நடித்துள்ளார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அனுமோல் கதாபாத்திரத்திற்கு தேவையான காதல், குடும்பப் பொறுப்பு, மனக்குழப்பம் ஆகிய வெவ்வேறு உணர்வுகளுக்கிடையே மாறும் கதாபாத்திரத்தை அவர் உணர்ச்சியை இயல்பாகக் நடித்திருக்கிறார்.
விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்டோரும் கதையின் நகர்வுக்கு தேவையான பங்களிப்பை வழங்குகின்றனர்.
ஒளிப்பதிவாளர் சதேஷ் ஜி மிகப்பெரிய அளவில் திரைக்கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார்
இசையமைப்பாளர் கே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
‘பாரீஸ் கஃபே’ வழக்கமான இளமைக்காதல் திரைப்படம் அல்ல. காதலுக்குப் பிறகு வரும் வாழ்க்கை, உறவுகளுக்குள் உருவாகும் விரிசல்கள், நம்பிக்கை மற்றும் குடும்ப பந்தம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரஜ் சீலன்.
மொத்தத்தில் இந்த ‘பாரீஸ் கஃபே’ உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆணவக் கொலையின் காதல் கதை











