’பாட்டல் ராதா’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் – குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி, அபி ராமையா, வசந்த் மாரிமுத்து, ஜெய பெருமாள், ஆறுமுகவேல், J.P. குமார், மாலதி, அசோக், நவீன், சுஹாசினி சஞ்சீவ், அனீஷா, சாய் சரண், கருணா பிரசாத், சேகர், செந்தில், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – தினகரன் சிவலிங்கம்.
ஒளிப்பதிவாளர் – ரூபேஷ் ஷாஜி.
படத்தொகுப்பாளர் – இ. சங்கத்தமிழன்.
இசையமைப்பாளர் – ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் – நீளம் புரொடக்ஷன்ஸ் , பலூன் பிக்சர்ஸ்,
தயாரிப்பாளர்கள் – பா. இரஞ்சித் –
T.N. அருண்பாலாஜி.
ரேட்டிங் – 3./5.
கதாநாயகன் குரு சோமசுந்தரம், மனைவி கதாநாயகி சஞ்சனா நடராஜன் மற்றும் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் கட்டுமானத் தொழில் செய்து சம்பாதித்துக் கொண்டு பல கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
தினந்தோறும் மதுப்பழக்கத்தினால் அடிமை ஆகி கொண்டு இருக்கும் கதாநாயகன் குரு சோமசுந்தரம் கதாநாயகி சஞ்சனா நடராஜன் குடியை விட்டுவிட்டு தன்னுடன் கணவன் சந்தோஷத்துடன் வாழ்வார் என கனவு ஒரு நாள் நினைவாகும் என்ற எதிர்பார்ப்பில் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் குரு சோமசுந்தரம் மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் , அதில் இருந்து தனது கணவர் கதாநாயகன் குரு சோமசுந்தரத்தை எப்படியாவது மதுப்பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என போராடும் கதாநாயகி சஞ்சனா நடராஜன் முயற்சி, செய்ய மதுப்பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கதாநாயகி சஞ்சனா நடராஜன் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?,
கதாநாயகன் குரு சோமசுந்தரம் மதுவிலிருந்து மீண்டாரா? மீள வில்லையா? என்பதுதான் இந்த ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பாட்டில் ராதா திரைப்படத்தில் கதாநாயகனாக குரு சோமசுந்தரம் நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் பாட்டல் ராதா என்ற கதாபாத்திரத்தை மிக அருமையாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார்.
இந்த பாட்டில் ராதா திரைப்படத்தில் கதாநாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் கதாநாயகி சஞ்சனா நடராஜன், குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
குடிகாரர்கள் மறுவாழ்வு மையங்கள் நடத்தி வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக அருமையாக நடித்திருக்கிறார்.
அதிலும், கிளைமாக்ஸ் முன்பு உள்ள காட்சிகளில் தனது வாழ்க்கைப் பற்றி சொல்லி கண் கலங்கும் காட்சியில், ஒட்டு மொத்தமாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வைத்துவிடுகிறார்.
லொள்ளு சபா மாறன். அவருடைய டைமிங் காமெடி வசனங்கள் அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு மூலம் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் மிகவும் இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
சோகமான கதைக்களம் என்றாலும், அதை ஜாலியாகவும் அதே சமயம் இயக்குநர் மக்களுக்கு சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும்படியும் கதையும் திரைக்கதையும் எழுதி மிகச் சிறப்பான படமாக இறக்கியிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்,
மொத்தத்தில், ‘பாட்டல் ராதா’ டாஸ்மாக்கில் குடியோடு குடுத்தனம் நடத்தி வரும் குடிகாரர்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம்.











