‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விமல், ஸ்ரேயா சரண், புன்னகைப் பூ கீதா, சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர். மாதேஷ்.
ஒளிப்பதிவாளர் :- ஆர்.பி. குருதேவ்.
படத்தொகுப்பாளர் :- தினேஷ் பொன்ராஜ்.
இசையமைப்பாளர் :- அம்ரீஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- பாஸ் புரொடக்ஷன் கார்ப்பரேஷன்.
தயாரிப்பாளர் :- புன்னகைப் பூ கீதா.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM).
ரேட்டிங் :- 2.5./5.
லண்டனில் இருக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் கதாநாயகி ஸ்ரேயாவின் உதவியாளராக கதாநாயகன் விமல் பணியில் சேருகிறார்.
பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற பட்டதாரியான கதாநாயகன் விமல் உதவியாளர் வேலையாக இருந்தாலும், தான் உருவாக்கிய கைபேசி செயலியை அறிமுகப் படுத்துவதற்காக கதாநாயகி ஸ்ரேயாவுக்கு உதவியாளராக பணியாற்றும் கதாநாயகன் விமலின் கடும் கோபத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.
இந்த நிலையில், கதாநாயகி ஸ்ரேயாவின் லண்டன் நிறுவனத்தில் பணியாற்றி விசா முடிவடைந்த நிலையில், அவர் விசாவை தொடர இந்தியா சென்று அங்கிருந்து தான் விசாவிற்க்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால் கதாநாயகி ஸ்ரேயாவிற்க்கு கிடைக்க வேண்டிய சி.இ.ஓ பதவி கிடைக்காமல் வேறு ஒருவருக்கு கிடைக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமலும் யோசிக்கும் கதாநாயகி ஸ்ரேயா, நிரந்தரமாக லண்டன் குடியுரிமை பெற்ற கதாநாயகன் விமலை திருட்டு திருமணம் செய்து கொண்டு லண்டன் குடியுரிமை பெற நிரந்தரமாக தங்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்த நிலையில், கதாநாயகி ஸ்ரேயாவின் எதிரியுடன் கைகோர்த்துக்கொண்டு கதாநாயகன் விமல், கதாநாயகி ஸ்ரேயாவை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட வேண்டும் என, கதாநாயகி ஸ்ரேயாவின் சி.இ.ஓ பதவி உயர்வை கிடைக்காமல் செய்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்த நிலையில், கதாநாயகி ஸ்ரேயாவின் திட்டத்திற்கு கதாநாயகன் விமல், சம்மதிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள தன்னுடைய பெற்றோரை நேரில் சந்திக்க வேண்டும், என்ற கதாநாயகன் விமல்,நிபந்தனை விதிக்கிறார்.
கதாநாயகன் விமல் கூறிய நிபந்தனையை ஏற்று கொண்டு தமிழகம் செல்லும் கதாநாயகி ஸ்ரேயாவின் திட்டம் வெற்றி பெற்றதா?, வெற்றி பெறவில்லையா?, கதாநாயகன் விமலின் திட்டம் வெற்றி பெற்றதா?, என்பதுதான் இந்த ‘சண்டக்காரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘சணடக்காரி’ திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விமல் கிராமமாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, உடை மட்டுமே மாறுமே தவிர தோற்றமும், மற்றும் நடிப்பும் எப்போதும் ஒரே மாதிரியான தான் நடிப்பேன் என்பதை நிரூபிக்கும் வகையில் வலம் வருகிறார்.
இந்த ‘சணடக்காரி’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயாவின் முகத்தில் இருக்கும் பளபளப்பு அவரது நடிப்பில் எந்த நேரத்திலும் கோபம் கொண்டவராகவும், சிறியவராக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் மதிக்காத திமிர் பிடித்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் விமல் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உமா பத்மநாபன், கதாநாயகி ஸ்ரேயா தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, கதாநாயகன் விமல் நன்பர் சத்யன், கதாநாயகன் விமல் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு மூலம் லண்டன, மற்றும் கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கேற்றவாறு சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.
கோபமான குணம் கொண்ட பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக கதையை , திரைக்கதையை கையாண்ட விதம், லண்டன் மற்றும் கிராமம் என்று இரு ஏரியகளில் காதல் மற்றும் காமெடியை அளவாக கையாண்டு, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஆர்.மாதேஷ்.
மொத்தத்தில், ‘சண்டக்காரி’ சுமாராக உள்ளது.











