’வடம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விமல், நடராஜ் (நாட்டி), சன்ஷ்கா ஸ்ரீ, முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பாலா சரவணன், மதுசூதனன் ராவ், தீபா சங்கர், சிங்கம் ஜெயவேல், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கேந்திரன்.வி.
ஒளிப்பதிவாளர் :- பிரசன்னா எஸ் குமார்.
படத்தொகுப்பாளர் :- சாபு ஜோசப் வி ஜே.
இசையமைப்பாளர் :- – டி. இமான்.
தயாரிப்பு நிறுவனம் :- மாசானி பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ராஜசேகர்.ஆர்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகன் விமல் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வரும் நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெரிய மனிதரான ஆடுகளம் நரேன் அடிமாட்டுக்கு கடத்திச் செல்லும் மாடுகளை அனைத்தையும் காப்பாற்றி அவற்றை தனது சொந்தமாக கோசாலை ஒன்று அமைத்து வளர்த்து வருகிறார்.
கதாநாயகன் விமலும் தன்னுடைய தந்தையை, ஆடுகளம் நரேன் போல் மாடுகள் மீது அதிகளவில் பாசம் கொண்டவராக இருக்கிறார்.
இந்த நிலையில் அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடு இருக்கும் கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து கதாநாயகன் விமல், வளர்த்து வருகிறார்.
அந்த கன்று குட்டிக்கு மஞ்சுவிரட்டில் கலந்து கொள்வதற்காக பயிற்சியளித்து காளையாக வளர்த்து மஞ்சுவிரட்டு போட்டிக்காக
தயார்ப்படுத்தி, பல ஆண்டுகளாக எந்த ஊரு வீரனாலும் அடக்க முடியாத காளையாக கதாநாயகன் விமல் வளர்த்து வருகிறார்.
கதாநாயகன் விமல் வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர் கதாநாயகன் விமலை கொலை செய்ய திட்டம் திட்டுகிறார்.
கதாநாயகன் விமலின் காளை சிறு விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் பலருடன் பகையில் வாழ்ந்து வரும் கதாநாயகன் விமல் கதாநாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் மலர்கிறது.
கதாநாயகி சனஷ்கா ஸ்ரீ காதலால் வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி, தனது காளை உடல்நிலை முன்னேற்றத்தால் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை, மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்க தயாராகும் தன் காளையின் மூலம் தனது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு தொடங்க முடிவு செய்யும் கதாநாயகன் விமல், அவருடைய காதலி கதாநாயகி சனஷ்கா ஸ்ரீ பேரதிர்ச்சி கொடுக்கிறார்.
கதாநாயகன் விமலுக்கு கதாநாயகி சனஷ்கா ஸ்ரீ அப்படி என்ன பேரதிர்ச்சி கொடுத்தார்
கதாநாயகன் விமல் காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் இறங்கி வெற்றி பெற்றதா?, வெற்றி பெறவில்லையா?,
கதாநாயகன் விமல் எதிரான பகையில் இருந்து மீண்டாரா?, மீளவில்லையா?, என்பதுதான் இந்த ‘வடம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வடம் திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விமல் மாடுகள் மீது பாசம் உள்ளவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார் படுத்துபவராகவும் வழக்கம் போல் எதார்த்தமாகவும் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த வடம் திரைப்படத்தில் கதாநாயகியாக சனஷ்கா ஸ்ரீ நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகோடு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, காட்சிகள் அதிகம் இல்லாததும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் மஞ்சுவிரட்டு விளையாட்டில் வெற்றி மட்டுமே தன்னுடைய வாழ்க்கை, தனக்கு மஞ்சுவிரட்டு விளையாட்டில் போட்டியாளர்களே இருக்க கூடாது, என்ற மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் காமெடி நடிகராக வளம் வந்த முனீஷ்காந்த், பல திரைப்படங்களில் சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தாலும், இந்த வடம் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மிகச் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விமல் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன், கொஞ்சம் பெரிய மீசை வைத்து விட்டால், கிராமத்தில் உள்ள பெரிய மனிதர்கள் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் விமல் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்துமதி, அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணன், பகையாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுசூதனன் ராவ், விமல் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம் ஜெயவேல் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், ஒளிப்பதிவு மூலம் மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியையும் மிகவும் தத்ரூபமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாபு ஜோசப் வி ஜே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் அதிகளவில் பேசப்படாத வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னனியாக கொண்டு கதை திரைக்கதையில் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் சொல்ல வந்ததை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கேந்திரன்.வி.
மொத்தத்தில், ‘வடம்’ விமலுக்கு மட்டுமல்லாமல் இயக்குனருக்கு இந்த வடம் வெற்றி திரைப்படமாக அமைந்தது உள்ளது.











