ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர், ஸ்டில் பாண்டியன், ஏ.வெங்கடேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கலையரசன் தங்கவேல்.
ஒளிப்பதிவாளர் :- மாதேஷ் மாணிக்கம்.
படத்தொகுப்பாளர் :- கேஜி வருண்..
இசையமைப்பாளர் :- சித்து குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் :- வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல்
இணை தயாரிப்பாளர்கள்: விவேக், விஜய்
ரேட்டிங் :- 4./5.
கதாநாயகன் ரியோ ராஜிக்கு பெற்றோர்கள் பெண் பார்க்க கதாநாயகி மாளவிகா மனோஜின் பெற்றோர்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க கதாநாயகன் ரியோ ராஜ் குடும்பத்தார்
கதாநாயகி மாளவிகா மனோஜ் பெண் பார்க்க செல்கிறார்.
உடனடியாக இருவருக்கும் மோதிரம் மாற்றி கொண்டு இருவரும் பேசி பழகி பிடித்துப் போக இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது.
பெண்கள் அனைவரும் அவர்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் என நினைப்பவராக கதாநாயகன் ரியோ ராஜ், புரட்சி பெண்ணாக கதாநாயகி மாளவிகா மனோஜ் இருவரும் திருமணத்துக்கு முன்பு தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால் காலம் போகப் போக, கதாநாயகன் ரியோ ராஜ், கதாநாயகி மாளவிகா மனோஜ் இருவரின் இயல்புகள் வெளிப்படுகிறது.
கதாநாயகி மாளவிகா மனோஜிடம் நீ ஒரு சராசரி `குடும்ப’ பெண்ணாக இருக்க வேண்டும் என என கதாநாயகன் ரியோ ராஜ், அழுத்தம் கொடுக்க, It is my choice என தன் விருப்படி தான் வாழ முடியும் என கதாநாயகி மாளவிகா மனோஜ் எனது இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என கூறுகிறார்.
மகிழ்ச்சியான இந்த தம்பதியின் வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடும் ஈகோ பிரச்சனைகள் வளர்ந்து விவாகரத்து வரை செல்கிறது.
கதாநாயகன் ரியோ ராஜ், மற்றும் கதாநாயகி மாளவிகா மனோஜ் இருவருக்கும் மோதல் தொடங்க இந்த இருவரின் மோதல் நீதிமன்றம் வரை சென்று விவாகரத்து வழக்கு வரை வந்து நிற்கிறது.
கதாநாயகி மாளவிகா மனோஜ் விவாகரத்து வேண்டும், ஆனால் கதாநாயகன் ரியோ ராஜ் விவாகரத்தில் விருப்பம் இல்லை என இருவரும் நினைத்தது நடந்ததா?,
கதாநாயகி மாளவிகா மனோஜ் மற்றும் கதாநாயகன் ரியோ ராஜ் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா?, என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரியோராஜ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ரியோ ராஜ் இதுவரை நடித்த திரைப்படங்களை விட, இந்த ஆண்பாவம் பொல்லாதது நிரைப்படத்தில் பக்காவாக செட் ஆகி இருக்கிறார்.
கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவரது நடிப்பு மீட்டருக்கு பொருந்துவதால் பல காட்சிகள் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார்.
கதாநாயகி மாளவிகா மனோஜ் காதல், குழப்பம், தவிப்பு என பல உணர்வுகளை காட்டும் கதாபாத்திரம் என்பதால். அதனை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், வழக்கமான நகைச்சுவையோடு செண்டிமெண்டாக நடித்து கலங்கடிக்கவும் செய்திருக்கிறார்.
இதில் இன்னொரு சர்ப்ரைஸ் விக்னேஷ் காந்த். பல திரைப்படங்களில் ஓவர் ஆக்டிங் செய்பவர் இந்த திரைப்படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடிப்பில் வெளுத்து வாங்குவேன் என மிகவும் மிக அமைதியாக வந்து நடிப்பு மூலம் ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
திரைப்படத்தின் மிகப்பெரிய பெரிய பலம் ஜென்சன் திவாகர். அவர் வருவதே திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் தான். ஆனால் அவர் வரக்கூடிய ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அதிலும் டிடெக்டிவ் சார்ந்த காட்சிகள் எல்லாம் சிரிப்பு சரவெடியை கொளுத்துகிறார்.
வக்கீல் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலாவும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, ரசிகர்களை கலங்கடித்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
தற்போதைய காலக்கட்டங்களில் பெண்களும் திருமணத்திற்கு முன்பு, சோசியல் மீடியா என்றால் என்ன ? என்பது கூட தெரியாத பல பெண்களும், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு சோசியல் மீடியாவில் மூழ்கியிருப்பதும், அதனால் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை கலகலப்பான காட்சிகளாக கையாண்டிருக்கும் இயக்குநர் கலையரசன் தங்கவேல், மிகப்பெரிய பாராட்டுக்கள்.
நீதிமன்றங்களில் விவாகரத்துக்காக பதிவு செய்திருக்கும் தம்பதியர்கள் இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
மொத்தத்தில், ‘ஆண் பாவம் பொல்லாதது’ கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.











