’ஸ்வீட் ஹார்ட்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் – ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், பௌசி, அருணாச்சலேஸ்வரன் PA, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – ஸ்வினீத் எஸ். சுகுமார்.
ஒளிப்பதிவாளர் – பாலாஜி சுப்ரமணியம்.
படத்தொகுப்பாளர் – தமிழரசன்.
இசையமைப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் – ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் – யுவன் ஷங்கர் ராஜா.
ரேட்டிங் – 3.25./5.
சிறு வயதில் முதல் தன் தாய், தந்தை, இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருப்பதால் கதாநாயகன் ரியோ ராஜ் மனதளவில் நடந்த மறக்க முடியாத அளவில் கசப்பான அனுபவத்தால் திருமணம், மற்றும் மனைவி குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், கதாநாயகன் ரியோ ராஜ் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்க காதலி கதாநாயகி கோபிகா ரமேஷ் இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
கதாநாயகன் ரியோ ராஜுக்கு குழந்தை வேண்டாம் என்ற மனநிலையில் இருக்க கதாநாயகி கோபிகா ரமேஷ், குழந்தை பெற்று வளர்க்க வேண்டும் என்று மனநிலையில் இருக்க இதனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கதாநாயகி கோபிகா ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் கதாநாயகன் ரியோ ராஜ், இந்த கருவை கண்டிப்பாக கலைத்துவிடும்படி கூறுகிறார்.
கதாநாயகி கோபிகா ரமேஷ்க்கு குழந்தை பெற்று கொண்டு கதாநாயகன் ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பும்
கதாநாயகி கோபிகா ரமேஷ் தனது விருப்பத்தை வெளிக்காட்டாமல், கதாநாயகன் ரியோ ராஜின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க, கதாநாயகன் ரியோ ராஜ் தன் காதலி கதாநாயகி கோபிகா ரமேஷ் வயிற்றில் வளரும் கருவை கலைத்தாரா? கருவை கலைக்கவில்லையா? என்பதுதான் இந்த‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக ரியோ ராஜ் நடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் ரொமான்ஸ் நாயகனாக ரசிகர்கள் மனதில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் கதாநாயகன் ரியோ ராஜ் என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதற்கான பலன் மிகச்சரியான கதைக்களம் அமையவில்லை என்பதுதான் உண்மை.
இந்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், தனக்கென்று தனி விருப்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு எதிர்கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அவர் அவர் மிகவும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகச்சிறப்பாக அமைத்துத் இருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே மனதை வருடுவது போல் இருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்த இருக்கிறார்.
காதல் மூலம் மனித உறவுகளின் காமம் வரை செல்லும் காதலன் காதலி முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
மொத்தத்தில், ‘ஸ்வீட் ஹார்ட்’ இதயத்தின் துடிப்பு கம்மியாக உள்ளது.











