அழகிய கண்ணே திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25/5.
நடிகர் & நடிகைகள் :- லியோ சிவ குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சால்மன், சிங்கம் புலி, ராஜ்கபூர், அமுதவாணன், ஆண்ட்ரூஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர் விஜய் குமார்.
ஒளிப்பதிவு :- ஏ.ஆர். அசோக் குமார்.
படத்தொகுப்பு :- இ.சங்கத்தமிழன்.
இசை :- என்.ஆர். ரகுநந்தன்.
தயாரிப்பு நிறுவனம் :- எஸ்டெல் என்டர்டெய்னர்.
தயாரிப்பாளர் :- டாக்டர். எஸ். சேவியர் பிரிட்டோ.
ரேட்டிங் :- 2.25./ 5.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் இருக்கும் கதாநாயகன் லியோ சிவக்குமார், மக்கள் விழிப்புணர்வு மன்றம் என்ற பெயரில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கலைக்குழு நடத்தி வருகிறார்.
தமிழ் திரைப்பட துறையில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனர் சேர்வதற்கு கடிதம் மூலம் வாய்ப்பு கேட்கிறார்.
கதாநாயகன் லியோ சிவக்குமாரின் எதிர்வீட்டில் இருக்கும் ஐயர் பொண்ணு கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, தனது கல்லூரியில் நடக்க இருக்கும் விழாவுக்காக ஒரு நாடகத்திற்கு நல்ல கதை எழுதித்தரும்படி கதாநாயகன் லியோ சிவக்குமாரிடம் கேட்க, அவரும் ‘நவீன கண்ணகி’ என்ற பெயரில் நடகக்கதை எழுதிக் கொடுக்க கதாநாயகன் லியோ சிவகுமார், கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி மீது காதல் கொள்கிறார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டி சம்மந்தம் தெரிவிக்க கதாநாயகி சஞ்சிதா ஷெட்டியின் சித்தி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இவருடைய சித்தியின் தம்பியை கதாநாயகி சஞ்சிதா ஷெட்டிக்கு திருமணம் செய்ய வைக்க திட்டமிட கதாநாயகன் லியோ சிவகுமாரை, கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி காதலிக்க அவர் கோபமடைகிறார்.
இந்நிலையில், சென்னையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமனிடம் கடிதம் வர அவரிடம் உதவி இயக்குனராக சேர்கிறார்.
லியோ சிவக்குமார். சினிமாவை கற்றுக் கொண்டு திரைப்படம் இயக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையில் இதனை மீறி கதாநாயகன் லியோ சிவகுமாரை, கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது.
இறுதியில் கதாநாயகன் லியோ சிவாகுமார் ஆசைப்படி இயக்குனர் ஆனாரா? இயக்குனர் ஆகவில்லையா? என்பதுதான் இந்த அழகிய கண்ணே திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அழகிய கண்ணே திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக லியோ சிவகுமார் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
அறிமுக கதாநாயகன் லியோ சிவகுமார் புதுமுகம் என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு நடிப்பை கொடுத்துள்ளார்.
இயல்பான நடிப்பால் அனைவரையும் அறிமுக கதாநாயகன் லியோ சிவகுமார் கவர்ந்துள்ளார்.
இந்த அழகிய கண்ணே திரைப்படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.
கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி காதலியாகவும், அழகான மனைவியாகவும் தன் குழந்தைக்கு பாசமான தாயாகவும் நடிப்பில் வித்யாசம் காட்டி கவனம் பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி திரைப்படத்தில் இருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இருவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை.
இவர்களின் கதாப்பாத்திரத்திற்கு மிகப் பெரிய அளவில் வலுசேர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் அசோக் குமார் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு அழகு சேர்த்துள்ளார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் இசை கிராம வாழ்வியலை பின்னணி இசையின் மூலம் அழகாக கொடுத்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் தோன்றிய பழைய கதையை சரியான திரைக்கதை இல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.விஜயகுமார்.
கதையை விட்டு திரைக்கதையில் பிடிப்பு இல்லாமல் விலகி சென்றிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு.
மொத்தத்தில் அழகிய கண்ணே திரைப்படம் அழகு மிக மிக குறைவு அழகில்லாத கண்ணே.











