கப்ஜா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் நடிகைகள் :- உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  R.சந்துரு.

ஒளிப்பதிவு :- A. J. ஷெட்டி.

படத்தொகுப்பு :- தீபு S. குமார்.

இசை :- ரவி பஸ்ருர்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ சித்தேஷ்வரா எண்டர்பிரைசஸ் & இன்வெனியோ ஆரிஜின்.

தயாரிப்பாளர்:- – R.சந்துரு அலங்கார் பாண்டியன்.

ரேட்டிங் :- 2.5 / 5.

கடந்த 2018 ஆம் வருடம் வெளியான ‘கே.ஜி.எஃப்’ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் கன்னடத் திரைப்பட உலகை உலக அளவில் எடுத்து சென்றது.

இளம் தலைமுறையினர் பலரையும் கன்னடத் திரைப்பட உலகின் பக்கம் திருப்பியது என்றே சொல்ல வேண்டும். அதற்கடுத்து, ‘கே.ஜி.எஃப்.’ தாக்கத்தில் பல கதைகள் வெளியானது.

சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் மகன் எப்படி பலரையும் எதிர்க்கக்கூடிய மாஃபியா டானாக வளர்ந்து நிற்கிறான் என்ற ஒருவரிக்கதைதான் ‘கப்ஜா’.

பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் வெளியாகி இருக்கிறது ‘கப்ஜா’.

சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டமான 1945-ல் தொடங்குகிறது கதை. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மகன் கதாநாயகன் உபேந்திரா.

தந்தை இறப்புக்கு பிறகு இவர்கள் மூவரும் அமரேஸ்வரம் என்ற ஊரில் தனது தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வாழ்கிறார்கள்.

விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் கதாநாயகன் உபேந்திரா காலத்தின் கட்டாயத்தால் மாஃபியா டானாக மாறுகிறான்.

உபேந்திரா சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரியா சரணை காதலித்து வருகிறார்.

தனது ராஜ்ஜியத்தை பிடித்ததற்காகவும், ராஜ பாரம்பரிய கலாச்சாரத்தை மீறி தனது மகளை திருமணம் செய்ததற்காகவும் கதாநாயகன் உபேந்திரா கொல்ல கதாநாயகி ஷ்ரேயா சரன் தந்தை முரளி அரசாங்க அளவில் தனது செல்வாக்கை உபயோகப்படுத்துகிறார்.

அதில், கதாநாயகன் உபேந்திராவின் சாம்ராஜ்யத்தை முடித்து வைப்பதற்கு காவல்துறை அதிகாரியாக கிச்சா சுதீப் வருகிறார்.

கதாநாயகன் உபேந்திரா மாஃபியா டானாக மாறியது ஏன், எப்படி? இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த ‘கப்ஜா’.திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கப்ஜா திரைப்படத்தில் கதாநாயகனாக உபேந்திரா நடித்திருக்கிறார்.

அரகேஸ்வரனை கதாபாத்திரத்தில் உபேந்திரா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.

மாஸான வசனங்களின் மூலம் உபேந்திரா கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகி ஸ்ரேயா சரண்னின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கதாநாயகி ஸ்ரேயா சரண்னின் எதார்த்த உடல் மொழி நடிப்பின் மூலம் பாராட்டை பெறுகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் நடிப்பு அருமையாக இருக்கிறது.

ஷிவா ராஜ்குமாரின் கதாப்பாத்திரம் மனதில் நிற்கிறது.

இருவரும் சிறு நிமிடங்களே வந்தாலும் கவனம் ஈர்க்கவைக்கிறது.

திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஏ.ஜி.ஷெட்டி  திரைப்படத்தின் காட்சிகளை அனைத்து சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ருரின் பின்னணி இசை ஓகே ரகம்.

பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மாஸான திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் சந்துரு.

மொத்தத்தில் கப்ஜா கன்னடத்தில் இருந்து மற்றொரு வெற்றி திரைப்படம் .