தலைநகரம் 2 திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.
நடிகர் & நடிகைகள் :- சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிர, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- துரை வி.இசட்.
ஒளிப்பதிவு :- இ.கிருஷ்ணசாமி.
படத்தொகுப்பு :- ஆர்.சுதர்சன்.
இசை :- ஜிப்ரான்.
தயாரிப்பு நிறுவனம் :- ரைட் ஐ தியேட்டர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- எஸ்.எம். பிரபாகரன், துரை வி.இசட்.
ரேட்டிங் :- 2.5./ 5.
தலைநகரம்’ முதல் பாகத்தில் ன மிகப்பெரிய தாதாவாக வரும் கதாநாயகன் சுந்தர்.சி தன்னுடைய உயிர் நண்பனின் மரணத்திற்கு பின் திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள தலைநகரம் 2 ஆம் பாகத்தில் திருந்தி வாழும் கதாநாயகன் சுந்தர்.சி, தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.
அது ஒரு பக்கம் இருக்க வடசென்னையில் தாதாவாக ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையில் தாதாவாக விஷால் ராஜன், தென் சென்னையில் தாதாவாக பிரபாகர் ஆகியோர் மிகப்பெரிய அளவில் ரவுடிசம் செய்து அந்த பகுதிகளை மூன்று ஏரியாக்களையும் மூன்று தாதாக்கள் தங்களது வசம் வைத்து இருக்கிறார்கள்.
மூன்று ஏரியா தாதாக்களுக்கும் மொத்த சென்னையின் (தலைநகரம்) அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய சென்னை தாதா விஷால் ராஜனுடன் லிவிங் டு கெதர் வாழ்ந்து வரும் திரைப்பட நடிகை பாலக் லால்வானியை கடத்தி மயக்க நிலையில் தென் சென்னை தாதா பிரபாகர் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்.
திரைப்பட நடிகை பாலக் லால்வானியை கடத்தி பாலியல் பலாத்காரம் பிரச்சனையில் கதாநாயகன் சுந்தர்.சியை சிக்க வைத்து விடுகிறார்கள்.
இந்த கதாநாயகன் சுந்தர் சி பிரச்சனையில் தம்பி ராமையா சிக்கிக் கொள்கிறார்.
தம்பி ராமையாவை காப்பாற்ற மீண்டும் ரவுடிசத்தில் இறங்குகிறார் கதாநாயகன் சுந்தர்.சி. அதன்பின் மூன்று தாதாக்களும் கதாநாயகன் சுந்தர்.சியை கொலை செய்வதற்கு திட்டம் திட்டுகிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் சுந்தர்.சியை மூன்று தாதாக்கள் கொன்றார்களா? கொல்லவில்லையா? மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுத்த கதாநாயகன் சுந்தர்.சியின் நிலைமை என்ன ஆனது? என்பதுதான் இந்த தலைநகரம் 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தலைநகரம் 2 திரைப்படத்தில் கதாநாயகன் இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
சணடை காட்சிகளில் அதிக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
வடசென்னையில் தாதாவாக வரும் ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையில் தாதாவாக வரும் விஷால் ராஜன், தென் சென்னையில் தாதாவாக வரும் பிரபாகர் மூவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
கதாநாயகி பாலக் லால்வானி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
தம்பி ராமையா அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் இ. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரிய பலம்.
தலைநகரம் முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.இசட்.துரை.
பாடல், காதல், டூயட் என்று இல்லாமல் படத்தை இயக்கி இருப்பது மிகவும் சிறப்பு.
ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த இரண்டாம் பாகத்தில் சற்று குறைவு என்றே சொல்லலாம்.
லாஜிக் மீறல்களை அதிக அளவில் இருக்கிறது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்தில் தலைநகரம் 2 திரைப்படம் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் ரவுடிசம் இரண்டாம் பாகத்தில் இல்லை.











