‘அன்பில் அவன்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர். கார்த்திகேயன்.
ஒளிப்பதிவாளர் :- கௌதம் ராஜேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- ஆர்.கே. செல்வா.
இசையமைப்பாளர் :- கோவிந்த் வசந்தா.
தயாரிப்பு நிறுவனம் :- ஐங்கரன் இன்டர்நேஷனல் / ஹேப்பி ஹை பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்ங :- கே. கருணாமூர்த்தி / அசோக் செல்வன் / அபிநயா செல்வம்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
வெளியீட்டு தேதி :- 02 அக்டோபர் அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆதரவில்லாமல் கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன், ஹோட்டலில் பணி புரிந்து கொண்டு தனியாக வாழ்க்கையைத் தொடங்கி வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வாழ்க்கையில் சொந்தமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், மலைப்பகுதியில் ஒரு அழகான ராஜாக்கள் காலத்தில் பயன்படுத்திய பழைய பங்களாவை வாங்கி, அதனை தங்கும் விடுதியாக மாற்றி புதியதாக தொழில் நடத்த முடிவு செய்கிறார்கள்.
இந்த நிலையில், அவர்கள் ஆசைப்பட்டு வாங்கிய அந்த பழைய பங்களாவால் கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன், இவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன், இவர்கள் ஆசைப்பட்டு வாங்கிய பழைய பங்களா இருக்கும் அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ.வான வில்லன் கதிர் பாலு அந்த பங்களாவை எப்படியாவது தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.
இதற்காக கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் இவர்கள் இருவருக்கும் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக்க தொடங்குகிறார்.
அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ.வான வில்லன் கதிர் பாலுவின் பின்னணியில் இயங்கும் செய்யாக்கல், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் என ஒவ்வொருவராக கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைய, பிரச்சனை படிப்படியாக தீவிரமடைய இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டத்தில், தங்களுடைய மங்களாவையும் உயிரையும் காப்பாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
கதாநாயகன் அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் இருவரும் நினைத்தது போல் எம்எல்ஏ வில்லன் கதிர் பாலுவிடம் இருந்து அந்த பங்களாவை மீட்டு தொழில் தொடங்கினார்களா?தொடங்கவில்லையா?, என்பதுதான் இந்த ,அன்பில் அவன், திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ,அன்பில் அவன், திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வனின் நடிப்பில் அன்பும் ஆக்ரோஷமும் கலந்த அசத்தலான பரிமாணம்! தமிழ் திரைப்பட உலகில் இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரங்களுக் கேற்ற உடல்மொழியாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் அசோக் செல்வன், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் சூர்யா காந்தசாமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலின் மென்மை, கணவனின் பொறுப்பு, குடும்பத்தின் மீதான பாசம், சூழ்நிலையால் உருவாகும் கோபம், அன்புக்குரியவரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனப் பல்வேறு உணர்வுகளை ஒரே கதாபாத்திரத்தில் இணைத்து நடிப்பது எளிதான காரியமல்ல அந்தச் சவாலை அசோக் செல்வன் இயல்பான நடிப்பால் கையாள முயன்றிருப்பது திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது.
இந்த ,அன்பில் அவன், திரைப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் இயல் என்ற கதாபாத்திரத்தின் காதலையும் உணர்வுகளையும் அழகாகக் கடத்தும் இயல்பான பரிமாணத்தின் மூலம் மிகவும் காதல், பாசம், கோபம், மன உறுதி எனப் பல்வேறு உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக மிரட்டி இருக்கும் கதிர் பாலு கம்பீரமான குரலும், அதிகாரத் தோரணையும் இணைந்த அசத்தலான நடிப்பு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனின் வெற்றியைப் போலவே, அவர் எதிர்கொள்ளும் வில்லனின் வலிமையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ. ராஜநாயகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலு, அதிகாரத் தோரணை, மிரட்டலான அணுகுமுறை ஆகியவற்றால் அருமையான வில்லன் தமிழ் திரைப்பட உலகிற்கு கிடைத்திருக்கிறார்.
அரசியல் அதிகாரத்தைத் தனது விருப்பங்களுக்கான கருவியாகப் பயன்படுத்தும் கதாபாத்திரமாக அவர் திரையில் தோன்றும்போது, அந்தப் கதாபாத்திரத்தின் ஆணவமும் ஆதிக்க மனப்பான்மையும் வெளிப்படுகின்றன.
குறிப்பாக, கதாநாயகன் அசோக் செல்வனுடன் நேருக்கு நேர் மோதும் தருணங்களில் அவரது குரலில் வெளிப்படும் அழுத்தமும், வசனங்களை உச்சரிக்கும் விதமும் காட்சிகளுக்குப் பதற்றத்தைச் சேர்க்கின்றன.
வில்லன் கதாபாத்திரங்களில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில், ‘அன்பில் அவன்’ திரைப்படம் கதிர் பாலு குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்திருக்கிறது.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டும் மஹா டெல்லி கணேஷ் தவசி கதாபாத்திரம், திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக கவனம் ஈர்க்கிறது.
காவல்துறை அதிகாரி என்றாலே வழக்கமான கம்பீரமான உடல் மொழி, கடுமையான வசன உச்சரிப்பு என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல், கதாபாத்திரத்தின் ஆளுமை அவரது கண்கள், முகபாவனைகள், உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு ஆகியவை கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கின்றன.
மற்ற கதாபாத்திரம் mp3 கம் அனைத்து நடிகர் நடிகைகளும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு மென்மையான உணர்வையும், கதையின் முக்கிய தருணங்களுக்கு தேவையான அழுத்தத்தையும் அழகாகக் கூட்டுகிறது.
ஒரு இளம் தம்பதியின் காதல் மற்றும் வாழ்க்கையை மையமாக வைத்து தொடங்கிய கதையை, எதிர்பாராத வகையில் ஆக்ஷன் களத்திற்கு கொண்டு சென்று செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருக்கிறார் இயக்குனர் ஆர் கார்த்திகேயன்.
மொத்தத்தில், எளிமையான உணர்வுகளை அழுத்தமாகச் சொல்லும் ‘அன்பில் அவன்’, மனதைத் தொடும் ஒரு திரைப்பட அனுபவமாக அமைகிறது.











