‘பத்தா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், அஜய் கோஷ், பாலமுருகன், சாண்டி  பாலச்சந்திரன், விஷ்ணு கோவிந்தன், அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சஹஸ்ரா ஸ்ரீ, வேதா செல்வம், சாய் பிரித்வி ராஜ்  மருது பாண்டியன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி தரணிதரன்.

ஒளிப்பதிவாளர் :- செல்வகுமார் எஸ்.கே.

படத்தொகுப்பாளர் :- ஆர். கலைவாணன்.

இசையமைப்பாளர் :- சாய் அப்யங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ், ஸ்டார் ஸ்டுடியோ 18.

தயாரிப்பாளர்கள் :- முராத் கேத்தானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, அஷ்வின் முருகன்
அட்லீ, கார்த்திக் ஆர். ஐயர்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

வெளியீட்டு தேதி :- 01, அக்டோபர்  2026.

ரேட்டிங் :-  3.75./5.

1986ஆம் ஆண்டு காலகட்டங்களில் மெட்ராஸ் நகரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதையாக இந்த ‘பத்தா’ படம் வெளியாகியிருக்கிறது.

கதாநாயகன் விஜய்சேதுபதி  மற்றும் மனைவி லிஜோமோல் ஜோஸ் மகள் சஹஸ்ரா சாராயம் கடை வைத்து கொண்டு செல்வாக்குமிக்க தாதாவாக வலம் வருகிறார்.

அதே பகுதியில் வசித்து வரும் ஹரி கிருஷ்ணன் மனைவி மற்றும் மகன மூன்றாம் வகுப்பு படிககும் சாய் பிரித்வி ராஜ்  வாழ்ந்து வருகிறான்.

இந்த நிலையில் ஒரு நாள் பள்ளியில் தேர்வு நடக்கும் நேரத்தில் சாய் பிரித்வி ராஜ் தனக்குப் பிடித்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பொம்மையை ஆசிரியர் பறிமுதல் செய்து பீரோவில் வைத்துவிடுகிறார்.

பள்ளியில் தேர்வு முடிந்து நீண்ட விடுமுறை விடப்பட்ட பிறகு, சிறுவன் சாய் பிரித்வி ராஜ் தனக்கு பிடித்த பொம்மையை மீண்டும் எடுப்பதற்காக பள்ளிக்குள் ரகசியமாக நுழைகிறான்.

அப்போது பள்ளியில் தனக்கு பிடித்த பொம்மையை எடுத்துக் கொண்டு வரும் நேரத்தில் அனைத்து கதவுகளையும் முன்பு இருந்தது போல் மூடிவிட்டு கழிவறை சென்று விட்டு இந்த கழுவறையே தாப்பாள்  போட்டுவிட்டு செல்ல கழிவறைக்குள் இருந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது.

பள்ளி கழிவறைக்குள் கதாநாயகன் விஜய்சேதுபதி சிக்கிக் கொள்கிறார். 

பள்ளி கழிவறைக்குள் இருந்து வரும் சத்தம் அந்த பார்த்து பயப்படும் கதாநாயகன் விஜய் சேதுபதி (பத்தா) என சிறுவன் சாய் பிரித்வி ராஜ் தெரியவருகிறது.

கண்டாலே நடுங்கும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் கதாநாயகன் விஜய் சேதுபதி கழிவறையில் சிக்கிக் கொண்ட (பத்தா) வை கதவை திறந்து விட்டானா? திறந்து விடவில்லையா? அந்தப் பள்ளி கழிவறைக்குள்  கதாநாயகன் விஜய் சேதுபதி (பத்தா) எப்படி சிக்கினார்?

கதாநாயகன் விஜய் சேதுபதி கழிவறை விட்டு வெளியே வந்தாரா? வெளியே வரவில்லையா? என்பதுதான் இந்த ‘பத்தா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘பத்தா’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்ளூர் தாதா பத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி அடிதடி, மிரட்டல், அதிகாரம் எனத் தனது வாழ்க்கையை.  அமைத்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தாலே பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு நடிப்பு மூலம்  கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் அவரது தனித்துவம் மீண்டும் ஒருமுறை வெளிப்படும் திரைப்படமாக ‘பத்தா’ அமைந்துள்ளது.

அதே நேரத்தில், குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் பாசம், மனைவியிடம் காட்டும் அன்பு, மகளிடம் காட்டும் அன்பு பாசம்,  சிறுவனுடன் ஏற்படும் உறவு, தன்னுடைய தவறுகளை உணரும்போது வெளிப்படும் மனநிலை எனப் பல பரிமாணங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறார்.

இந்த ‘பத்தா’ திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக மாஸ்டர் சாய் பிரித்திவிராஜ்  நடித்துள்ளார்.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று மாஸ்டர் சாய் பிரித்விராஜின் பத்தாவைப் பார்த்து பயப்படும் சிறுவனாகவும், எதிர்பாராத சூழலில் துணிச்சலை வெளிப்படுத்தும் குழந்தையாகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அவரது முகபாவனைகள், அச்சம், தயக்கம், அப்பாவித்தனம், இரக்க உணர்வு என ஒவ்வொரு உணர்வும் பார்வையாளர்களுடன் எளிதில் இணைகிறது.

கதாநாயகன் விஜய் சேதுபதியுடன் மாஸ்டர் சாய் பிரித்திவிராஜ் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் திரைப்படத்தின் நகைச்சுவைக்கும் உணர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.

சில இடங்களில் கதாநாயகன் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு இணையாகச் சிறுவன் மாஸ்டர் சாய் பிரித்திவிராஜ்ன நடிப்பும் ரசிகர்களிடம் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘பத்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்  லிஜோமோல் ஜோஸ், பத்தாவின் மனைவி கதாபாத்திரத்தில் குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான நடிப்பை மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கணவரின் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்படும் பெண்ணின் மனநிலையையும், அவரிடம் இருக்கும் அன்பையும் ஒருசேர வெளிப்படுத்தும் நடிப்பு பாராட்டுக்குரியது.

கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஹஸ்ரா ஸ்ரீ தனது கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான உணர்வுகளை வழங்கியிருக்கிறார்.

அஜய் கோஷ், பாலமுருகன், சாண்டி  பாலச்சந்திரன், விஷ்ணு கோவிந்தன், அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன்,  வேதா செல்வம்,  மருதுபாண்டியன், நடித்திருக்கும் அனைத்து கதாபத்திரங்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே.வின் ஒளிப்பதிவு மூலம்  1980-களின் சென்னை நகரச் சூழலைத் மிகவும் அழகாக திரையில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.

இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் உணர்வுகளுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஒரு ரவுடியை மையமாகக் கொண்ட கதை என்றவுடன் வழக்கமான ஆக்‌ஷன், பழிவாங்கல், அரசியல் பின்னணி என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

மொத்தத்தில், ‘பத்தா’ திரைப்படம் சிரிக்க வைக்கும் காட்சிகளுக்கு நடுவே மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் வழங்கும் ‘பத்தா’, வழக்கமான ரவுடி கதையிலிருந்து விலகி நிற்கும் ஓர் அழகான மனிதநேயத் திரைப்படம்.

error: Content is protected !!