அருவா சண்ட திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25/5.

நடிகர் நடிகைகள் :- வி. ராஜா, மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆதிராஜன்.

ஒளிப்பதிவு :- சந்தோஷ் பாண்டி.

படத்தொகுப்பு :- வி.ஜே. சாபுஜோசப்.

இசை :- தரண்குமார்.

தயாரிப்பு :- ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்.

தயாரிப்பாளர்:- V. ராஜா.

ரேட்டிங் :- 3.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் ஆணவக் கொலைகள் பற்றிய திரைப்படங்கள் இதற்கு முன்பும் நிறைய வந்திருக்கிறது.

இந்த கதையில் கபடி விளையாட்டையும் சேர்த்து இந்த அருவா சண்ட திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

சாதி வெறி பிடித்திருக்கும் பலருக்கு திரைப்படத்தின் இறுதியில்  ஒரு சரியான பாடத்தையும் புகட்டி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் ராஜா சரியாக படிக்கவில்லை என்றாலும் கபடி விளையாட்டில் மிகப்பெரிய கெட்டிக்காரனாக இருந்து வருகிறார்.

அவருடைய தாய் சரண்யாவுக்கும் தன்து மகன் மிகப்பெரிய கபடி வீரனாக சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவாக வாழ்ந்து வருகிறார்.

தனது தாயின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் கடுமையாக உழைக்கும் கதாநாயகனுக்கு, பணக்கார வீட்டு பெண்ணான கதாநாயகி மாளவிகா மேனன் உதவி செய்கிறார்.

கதாநாயகியின் உதவியால் கபடி வீரராக உயரத்தை தொடும் கதாநாயகனுக்கு அவர் மீது காதல் ஏற்பட, கதாநாயகி மாளவிகா மேனனும் காதல் விழுகிறார்கள்.

ஆனால், இவர்களுடைய காதலுக்கு ஜாதி ஒரு தடையாக உள்ளது.

அந்த தடையை உடைத்து காதலில இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? தன் தாயின் கனவை கதாநாயகன் ராஜா நிறைவேற்றினாரா? நிறைவேற்றவில்லையா? என்பதுதான் இநத ‘அருவா சண்ட’. திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத அருவா சணட திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் வி.ராஜா இநத திரைப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தை மிக அருமையாக நடித்திருக்கிறார்.

முதல் திரைப்படத்தில் நடிப்பவர் போல் தெரியவில்லை.

அவர் இநத திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி பெற்றிருக்கிறார்.

கபடி விளையாடும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன், கதையோடு பயணிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் தாயாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனின் அனுபவ நடிப்பு கதைக்கு மிகப் பெரிதாக பலம் சேர்த்திருக்கிறது.

தனது கனவை நிறைவேற்றாத மகனின் கனவை அவர் நிறைவேற்றும் விதம் கலங்க வைக்கிறது.

கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் சாதி வெறிப்பிடித்தவர்களை  பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார்.

வில்லனாக செளந்தர்ராஜா, நண்பனாக காதல் சுகுமார், கஞ்சா கருப்பு என மற்ற நடிகர்களும் அனைவரும் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டியனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் ஆக்ரோஷத்தை நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கபடி விளையாட்டை மிக் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் தரண் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது

சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் காதல் ஜோடியும், சிதையும் ஏழைகளின் கனவுகளையும் கதையாக்கி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன்.

மிக கூர்மையான வசனங்களால் திரைப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

இறுதிக் கிளைமாக்ஸ் காட்சியில் முடிவு சாதி வெறிப் பிடித்தவர்களுக்கு காலில் இருப்பதை கழட்டி அடிப்பது போல் இருக்கிறது.

மொத்தத்தில், ‘அருவா சண்ட’ திரைப்படம் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும்.