வரலாறு முக்கியம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5

நடிகர் நடிகைகள் :- ஜீவா, VTV கணேஷ், காஷ்மீரா பர்தேஷி. பிரக்யா நாக்ரா, சிவ ஷா ரா, TSK, கே.எஸ். ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆதிரை சௌந்தரராஜன், சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சந்தோஷ் ராஜன்.

ஒளிப்பதிவு :- சக்தி சரவணன்.

படத்தொகுப்பு :-  ஸ்ரீகாந்த்.என்.பி.

இசை :- ஷான் ரஹ்மான்.

தயாரிப்பு :-  சூப்பர் குட் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- ஆர்.பி.சௌத்ர

ரேட்டிங் :- 3.25 / 5

நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வரலாறு முக்கியம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் டிரெய்லர் வெளியானதிலிருந்து திரைப்படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகமாக இருந்தது.

லவ் டுடே திரைப்படத்திற்கு பிறகு இளைஞர்களை மையமாக குறிவைத்து இந்த வரலாறு முக்கியம் திரைப்படம் உருவாகியுள்ளது.

யூ டியூப் சேனல் நடத்தி வரும் கதாநாயகன் ஜீவா, அவருடைய தந்தை, கே.எஸ்.ரவிக்குமார் தாய் சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் கோயமுத்தூரில்
வசித்து வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து தாய மற்றும் தந்தையுடன் கதாநாயகி காஷ்மீரா, மற்றொரு கதாநாயகி பிரக்யா ஆகியோர் கதாநாயகன் ஜீவா வசிக்கும் அதே தெருவில் குடியேறுகிறார்கள்.

கதாநாயகன் ஜீவாவுக்கும் கதாநாயகி காஷ்மீராவுக்கும் காதல் மலர்கிறது.

கதாநாயகி காஷ்மீராவின் தந்தை துபாய் மாப்பிள்ளை ஒருவருக்குத்தான் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என ஆசை படுகிறார்.

இவர்களின் காதல் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வருகிறது.

இருவரின் பெற்றோர்கள்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கதாநாயகன் ஜீவா, கதாநாயகி காஷ்மீரா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த வரலாறு முக்கியம்
திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த வரலாறு முக்கியம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜீவா இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் பார்த்த அதே ஜீவாவை இந்த வரலாறு முக்கியம் திரைப்படத்தில் பார்க்க முடிகிறது.

இவரின் இயல்பான டைமிங் காமெடி நன்றாக கைகொடுத்திருக்கிறது.

தாய் மற்றும் தந்தையை கலாய்க்கும் காட்சியும் கதாநாயகி காஷ்மீரா மற்றொரு கதாநாயகி பிரக்யா இருவரிடமும் மாட்டிக்கொண்டு திணறும் போதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கிளைமேக்ஸ் காட்சி வரை ஜீவா முழு வேகத்துடன் களத்தில் இறங்கி அருமையாக ஆடியுள்ளார்.

இந்த வரலாறு முக்கியம் திரைப்படத்தில் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக பிரக்யா நாக்ரா நடித்துள்ளார்.

திருமண மண்டபத்தில் நகைச்சுவை காட்சி கைதட்டல். கதாநாயகி காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் ஜீவாவுக்கு தோள் கொடுத்துக் கலக்கி இருக்கிறார் வி.டி.வி. கணேஷ்.

வி.டி.வி கணேஷ் காமெடி கலக்கல் திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது

இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வி.டி.வி கணேஷ் காமெடியில் கொடி நாட்டியிருக்கிறார்.

வி.டி.வி கணேஷ் கண்ணாடியில் கோடு போடும் அந்த நகைச்சுவை இன்னும் பல நாட்களுக்குப் பேசப்படும்.

கதாநாயகன் ஜீவாவின் தந்தையாக கே.எஸ்.ரவிக்குமாரின் பழைய காதலி சந்திப்பு சரவெடி சிரிப்பு. பெண்களுக்கு ஆட்டோகிராப் இருக்கக்கூடாதா என்ற தாய் சரண்யாவின் கேள்வி பல இல்லத்தரசிகளின் குரலாக ஒலிக்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை
நகைச்சுவை திரைப்படத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு திரைப்படத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

ஸ்ரீகாந்த்.என்.பி படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு பக்க பலமாக அமைந்துள்ளது.

இயக்குனர் சந்தோஷ் ராஜன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

இன்றைய சூழலுக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் வரலாறு முக்கியம் திரைப்படம் மீண்டும் ஒரு காமெடி கலாட்டா.