பட்டத்து அரசன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.
நடிகர் நடிகைகள் :- அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா, R.K.சுரேஷ், ஜெயபிரகாஷ், ராஜ் ஐயப்பன், துரை சுதாகர், சிங்கம் புலி, G.M.குமார், பாலசரவணன், ரவிகாலே, சத்ரு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சற்குணம்.
ஒளிப்பதிவு :- லோகநாதன் ஸ்ரீ வாசன்.
படத்தொகுப்பு :- ராஜா முகமது.
இசை :- ஜிப்ரான்.
தயாரிப்பு :- லைக்கா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.
ரேட்டிங் :- 2.5 / 5
தமிழ் திரைப்பட உலகில் கிராமத்துக்கதைகள் என்றால் தற்போது இரண்டே இரண்டு விதமான கதைகளைச் சுற்றியே வருகிறார்கள்.
ஒன்று கபடி, மற்றொன்று ஜல்லிக்கட்டு கதைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை சுவாரசியமாக பரபரப்பாக புதுவிதமான காட்சிகளுடன் நகர்த்தினால் ரசிகர்களைக் ரசிக்கும் படியாக அமையலாம்.
ஆனால், அப்படி யோசிக்காமல் ரசிகர்களே எளிதில் யூகிக்கும்படியான காட்சிகளைக் கொடுத்தால் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள்.
அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு திரைப்படம்தான் இந்த ‘பட்டத்து அரசன்’.
காளையர் கோவில் எனும் கிராமத்தில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண்.
காளையர் கோவில் எனும் ஊரில், சிறந்த கபடி ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் ராஜ்கிரண்.
பேரன், பேத்தி, மகன் மகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் ராஜ்கிரணுக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவியும் இறந்து விடுகிறார்.
அவருடைய மகனும் கபடி வீரர்களை ஆர் கே சுரேஷ் ஒரு கபடி போட்டியின் போது இறந்து விடுகிறார்.
தன் தந்தையை இழந்து தாயுடன் ராதிகா கதாநாயகன் அதர்வா ராஜ்கிரண் குடும்பத்து சண்டையினால் தனியாக வசிக்கின்றனர்.
கதாநாயகன் அதர்வா, இரண்டு குடும்பத்தை ஒன்று சேர்பதற்காக எவ்வளவு போராடினாலும், கதாநாயகன் அதர்வாவை ஏற்றுக் கொள்வதற்கு ராஜ்கிரணின் குடும்பம் மருத்துவ விடுகிறது.
காளையார் கோவில் சுற்றுவட்டாரத்தில் பெரிய கபடி வீரான ராஜ் கிரணுக்கு அந்த ஊர் கிராமம் சிலை வைத்து வழிபடு அளவிற்கு மரியாதையான நபராக வாழ்ந்து வருகிறார்.
அந்த ஊரே ராஜ்கிரண் மீது அளவுக்கு அதிக அன்பை ஊர் மக்கள் வைத்திருக்கிறார்கள்.
அந்த ஊங சிறிய பிரச்சனையால் ராஜ்கிரண் பெயரில் இருக்கும் கபடி குழுவை கலைத்துவிட ஊர்பஞ்சாயத்து முடிவெடுத்து விடுகிறது.
இதனை நிருபிப்பதாற்காக கதாநாயகன் அதர்வா எவ்வளவோ போராடியும் முடியாமல், ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் இருப்பவர்களை வைத்து ஒரு கபடி குழுவை ஒன்றிணைக்கிறார்.
இந்த குடும்ப கபடி குழுவை வென்றால் நாங்கள் செய்தது தவறு என்றும் ஒரு வேளை நீங்கள் தோல்வி அடைந்தால் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்.
இந்த கபடி போட்டியில் வென்றது யார்? ராஜ்கிரன் குடும்பத்தின் மீதுள்ள கரையை இவர்கள் துடைத்தார்களா? துடைக்கவில்லையா? என்பதுதான் இந்த பட்டத்து அரசன்திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் பட்டத்து அரசன் திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அதர்வாவுங கொடுக்கப்பட்டு கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் கதாநாயகன் அதர்வா.
ஆக்ஷன் காட்சிகளிலும் குடும்ப பாச காட்சிகளிலும் கதாநாயகன் அதர்வா கைத்தட்டல் பெறுகிறார்.
கபடி வீரர், மற்றும் குடும்பத் தலைவர் என பல விதமான பரிணாமங்களில் ராஜ் கிரண் கலக்கி இருக்கிறார்.
கபடி போட்டியில் விளையாடும் இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார்.
இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக வரும் ஆஷிகா ரங்கநாத் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
ராதிகா, ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி, பால சரவணன் துரை சுதாகர் என திரைப்படத்தின் நடித்த அனைவரும் அவர்களின் பணியை மிகவும் அருமையாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் மறங பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஸ்ரீ வாசன் ஒளிப்பதிவு அருமை.
படத்தொகுப்பாளர் ராஜா முகமதுவின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.
புட்டு கூட்டு குடும்ப உணர்வுகளை பாசம் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைக்கதையாக வடிவமைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
குடும்பத்தை இணைக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள முயற்சிப்பது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை சோதித்துப் பார்க்கும் படியாக இருக்கிறது.
இயக்குனர் சற்குணத்தின் இதற்கு முன் இயக்கிய திரைப்படங்களில் இருந்து சற்று விலகி பட்டத்து அரசன் திரைப்படம் காணப்படுகிறது.
மொத்ததில் பட்டத்து அரசன் – திரைப்பட ரசிகர்கள் மனதில் கூட முடி சூடவில்லை.