காலேஜ் ரோடு திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.

நடிகர் நடிகைகள் :- லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெய் அமர் சிங்.

ஒளிப்பதிவு :- கார்த்திக் சுப்ரமணியம்.

படத்தொகுப்பு :- அசோக்.

இசை :- ஆப்ரோ.

தயாரிப்பு :- MP எண்டர்டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர் :- பிரவீன், சரத், ஜனா துரைராஜ் மனோகர்.

ரேட்டிங் :- 2.75 / 5.

ஏழை மற்றும் எளிய மாணவ மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் வாங்குவதற்கு வங்கியை நாடுகிறார்கள்.

ஆனால் அனைத்து ஏழை மற்றும் எளிய மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன் கிடைப்பதில்லை.

ஏழை மற்றும் எளிய மாணவ மாணவிகளுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவ மாணவிகளை எப்படி நடத்துகிறது.

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை கமர்சியல் கலந்து காலேஜ் ரோடு திரைப்படத்தில் இயக்குனர் ஜெய் அமர் சிங் கூறியிருக்கிறார்.

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் கதாநாயகன் லிங்கேஷ்.

கல்லூரியில் படித்துக் கொண்டே வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்துள்ள கதாநாயகன் லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார்.

அதே சமயம் சென்னையில் உள்ள முக்கிய வங்கிகளில் முகமூடி கும்பல் கொள்ளை சம்பவத்தை நடக்கிறது.

ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன.

கதாநாயகன் லிங்கேஷ் வங்கி கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த ஐ விட்னஸ் ஆக இருக்கிறார்.

என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது.

என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது.

வங்கி கொள்ளைக்கு காரணமானவர்கள் யார்? கதாநாயகன் லிங்கேஷ் வங்கியை கொள்ளை அடித்தவர்களை அடையாளம் காண்பித்தாரா? காண்பிக்கவில்லையா?
அவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த காலேஜ் ரோடு திரைப்படத்தின் மீதி கதை.

இந்த காலேஜ் ரோடு திரைப்படத்தில் கதாநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் கொடுக்கிறது.

இந்த காலேஜ் ரோடு திரைப்படத்தில் கதாநாயகியாக மோனிகா நடித்திருக்கிறார்.

கதாநாயகியின் கதாப்பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி மிக நிறைவாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது.

காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்

ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியதின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவும் யூத் புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக திரைப்படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் ஆப்ரோ தன் வேலையை மிகவும் கச்சிதமாக கொடுத்துள்ளார்.

திரைப்படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது

ஏழை எளிய மாணவ மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் திரைப்படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர்.

சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம்.

ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள காலேஜ்ரோடு நிச்சயமாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய நிரைப்படம்

மொத்தத்தில் காலேஜ் ரோடு திரைப்படம் பார்க்கலாம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!