காக்கிப் பட (மலையாளம்) திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- சரத், நிரஞ்சன் மணியம்பிள்ளை ராஜூ, சுஜித் சங்கர், சினோஜ் வர்கீஸ், வினோத் சாகர், மணிகண்டன், சந்துநாத் ஆர்தயா ஆன் (நடிகை) மாலா பார்வதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செஃபி சாவக்காட்.

ஒளிப்பதிவு :- பிரசாந்த் கிருஷ்ணா.

படத்தொகுப்பு :- பாபு ரத்னம்.

இசை :- ஜாஸி கிஃப்ட், ரோணி ரபேல்.

தயாரிப்பு :- எஸ்.வி.புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்:- செஜி வலியகாத்.

ரேட்டிங் :- 3.5 / 5.

30 டிசம்பர் 2022 அன்று கேரளாவில் மாநிலத்தில் இநத காக்கி பட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எட்டு வயது சிறுமியின் பாலியல் வன் கொடுமையை மையக்கருவாகக் கொண்டு ஃபேமிலி கிரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காக்கிப் பட திரைப்படம் பெண்களின் அமோக ஆதரவுடன் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கேரளாவில் நகரத்தை அடுத்த சிறிய ஊரில் ஒரு எட்டு வயது சிறுமி ஒரு காமக் கொடூரனால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.

அந்த சம்பவம் அந்த ஊரை மட்டுமில்லாமல் கேரளாவையே உலுக்குகிறது.

பெற்றவர்கள் துடித்துப் போய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

கேரள காவல்துறை எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பிடிக்க சிறப்பு குழு அமைத்து குற்றவாளியை சல்லடை போட்டுத் தேடுகிறது.

தீவிர புலன் விசாரனை செய்து தேடுதல் வேட்டை நடத்தி சில நாட்களுக்குப்பிறகு குற்றவாளியை கைது செய்கிறது காவல்துறை.

அவனிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

மறுநாள், சாட்சிகளை சேகரிப்பதற்காக குற்றவாளியை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வருகிறது காவல்துறை.

காவலுக்கு எட்டு பேர் அடங்கிய ரிசர்வ் படை முகாமிட்டிருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் குற்றவாளி மீதுள்ள கோபத்தில் ஆவேசத்தாக்குதல் நடத்த முயற்சி செய்ய காவல்துறையினர் அவர்களிடமிருந்து குற்றவாளியை காப்பாற்ற படாத பாடுபடுகிறது.

மேலும். குற்றவாளி, பணக்கார குடும்பத்தை சேர்ந்தவனாகவும் அவனது தந்தை அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பதால் காவல்துறையினர் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்க்கு மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிக்க பல திசைகளிலிருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

இறுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா..? கிடைக்கவில்லையா? அந்த சிறுமியின் பெற்றோர்க்கு நீதி மறுக்கப்பட்டதா..? என்பதுதான் இந்த காக்கி பட் திரைப்படத்தின் மீதி கதை.

வழக்கமான கதாநாயகன், கதாநாயகி ஆடல் பாடல் என்கிற இலக்கணத்தை மீறி, கதை ஓட்டத்தில் கதாபாத்திரங்களை வடிவமைத்து யதார்த்தமாக பதிவு செய்யப்பட்ட திரைப்படம்.

மலையாள நடிகர் மணியம்பிள்ளை ராஜூவின் மகன் நிரஞ்சன், அக்ஷ்ய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ராட்சசன் திரைப்படத்தில் ஸ்கூல் வாத்தியாராக புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய வினோத் சாகர், சுரேஷ் என்கிற கதாபாத்திரத்தில் பதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நடித்து மிக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வினோத் சாகர் நடிப்பில் தனது சொந்த மகளுக்கு நடந்த கொடுமை என நினைத்து நடித்திருப்பாரோ எனத் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தோன்றுகிறது.

வினோத் சாகர் அவர்களுக்கு கேரளா திரைப்பட உலகம் சிகப்பு கம்பளம் விரிக்கும் என கண்டிப்பாக நம்பலாம்.

இது ஒரு பெண்ணியப் படம் இல்லை என்றாலும் பெண்களுக்கான படம்.

தன் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்களையும், பாலியல் வன் கொடுமைகளையும் எதிர்த்து குரல் கொடுத்து போராடி குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட பெண்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்த்தும் படம்.

முற்பாதி திகிலுடன் தொடங்கி பிற்பாதியில் கடைசி முப்பது நிமிடம் காண்போரை உரைய வைத்து கண் கலங்க வைத்து பலத்த கைதட்டலுடன் நிறைவு பெறுகிறது கிளைமாக்ஸ்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கதைக்கு, தெளிவான திரைக்கதை அமைத்து, விறு விறுப்புடன் காட்சிகளை நகர்த்தி சூப்பர் த்ரில்லராக படத்தை இயக்கியிருக்கிறார்.

செஃபி சாவக்காட். இவர் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார்.

தமிழில் 2019 வருடம் வெளியான ‘மூன்று ரசிகர்கள்’ என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

‘காக்கிப் பட’ வெற்றியை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார்.

மொத்தத்தில் ‘காக்கிப் பட’ திரைப்படம் அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வெற்றித் திரைப்படம்..!