ஏமோஜி இனையத் தொடர் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5

நடிகர் நடிகைகள் :-  மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், VJ ஆஷிக், ஆடுகளம் நரேன், பிரியதர்ஷி, மானசா சௌத்ரி,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சென் . S.ரங்கசாமி.

ஒளிப்பதிவு :- ஜலந்தர் வாசன்.

படத்தொகுப்பு :-  எம்.ஆர. ராஜேஷ்.

இசை :- சனத்பரத்வாஜ்.

தயாரிப்பு :– ரமணா ஆர்ட்ஸ்.

ரேட்டிங் :- 3.75 / 5

தமிழ் திரைப்பட உலகில் இனைய தொடர்கள் ஆளுமை அதிகமாகிவிட்டது.

தமிழில் இனைய தொடர்கள் ஓரளவு கவனம் பெறக்கூடிய காலகட்டமாகிவிட்டது.

சமீபத்தில் வெளியான சுழல் இனையத் திதொடர் சும்மா சுழற்றி அடித்தது.

காதல் இல்லையேல் சாதல் அது ஒரு காலம் இப்போ 2K KIDS கட்டுப்பாடு இல்லாத காதல் காலம்.

ஒரு காதல் இல்லையேல் அடுத்த காதல்.

இதுபோன்ற காதல்களை கூறும் காம உணர்ச்சிகரமான படைப்பே இந்த எமோஜி. இனையத் தொடர் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பார்க்க வேண்டியது.

அதேபோல் இளைஞர்களை குறிவைத்து அடித்திருக்கிறது ஓடிடியில் வெளியாகும் இணையத் தொடர்தான் “எமோஜி’.

” மாடர்ன்” காதலையும், “டேக் இட் ஈஸி” காமத்தையும் கலந்து உணர்ச்சிகரமாகவும், கவர்ச்சிகரமாகவும் ’18+’களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இணையத் தொடர் “எமோஜி’.

ஆஹா ஓ.டி.டி. தளத்தின் இந்த இணையத் தொடர் ஏழு பதிவுகளாக வருகிறது.

கதாநாயகன் மகத் ராகவேந்திரா பொறியியல் பட்டதாரி. ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர்.

அவர் கிரிக்கெட் மட்டை வாங்குவதற்காக விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் ஸ்டோருக்குப் செல்கிறார்.

அங்கே சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கும் நீச்சல் வீராங்கனை கதாநாயகி மானசி பார்க்கிறார்.

அழகாகவும் மிக கிளாமராகவும், துடுக்கான பேச்சுமாக துருதுருவென இருக்கும் மானசி மீது பின்னழகு மீது கதாநாயகன் மகத் ராகவேந்திராவிற்க்கு ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறார்.

ஒருசில சந்திப்புகளுக்குப்பின் அவரது கதாநாயகன் பகத் ராகவேந்திரா காதலை கதாநாயகி மானசி ஏற்றுக்கொள்கிறார்.

இருவரும் காமம் கலந்த ரொமான்சில் திளைக்கிறார்கள். பின்னர் பிரேக்அப் ஆகி இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய வருகிறது.

பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் கதாநாயகன் மகத் ராகவேந்திரா தனிமையில் தவிக்கிறான்

அப்போது எதிர் வீட்டு வசிக்கும் மற்றொரு கதாநாயகி தேவிகாவை பார்க்கிரார்.

அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த கதாநாயகன் மகத் ராகவேந்திரா அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான்

அதன் பிறகு இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த திருமண வாழ்க்கைக்குள் திடீரென்று இருவரும் டைவர்ஸ் செய்ய முயற்சிக்கின்றனர்,

இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையில் டைவர்ஸ் செய்ய காரணம் என்ன என்பதும் கடைசியில் இவர்கள் டைவர்ஸ் செய்தார்களா ? இல்லையா ? என்பதுதான் இந்த எமோஜி இனையத் தொடரின் மீதி கதை.

இந்த எமோஜி இணையத்துடன் கதையின் நாயகனாக மகத் ராகவேந்திரா நடித்துள்ளார்.

மஹத் ராகவேந்திரா கரியரில் இந்த இணைய தொடர் வெற்றிகரமான இணைய தொடராக எடுத்துக்கொள்ளலாம்.

அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் மகத் ராகவேந்திரா மிக அருமையாக நடித்துள்ளார்.

யதார்த்த கதாநாயகனாக வலம் வருகிறார்.

நிறைய காட்சிகளில் சிலம்பரசன் டி ஆர் போலவே நினைவுப் படுத்துகிறார்.

அவரின் குரலும் உடல் மொழியும் சிலம்பரசன் டி ஆர் போலவே பல காட்சிகளில் உள்ளது.

கதாநாயகிகளாக வரும் தேவிகா சதீஷ், மானசா செளத்ரி இருவரும் பெவி குயிக் போட்டது போல இணையத் தொடரை பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஒட்டி கொள்கிறார்கள்.

தேவிகா சதீஷ், மானசா செளத்ரி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

ரொமான்ஸிலும் சரி கிளாமரிலும் சரி அடடடா என்ன ஒரு அழகான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தேவிகா ஒரு படி அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார்.

அழகான இதழ்கள்.. கண்கள்… க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ்… என வெளுத்து கட்டிவிட்டார்.

நிற்கும்போது காதலன் தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது.. திடீரென ஓடி வந்து இடுப்பில் ஏறி கொள்வது.. என ரொமான்டிக் வெரைட்டி காட்டி நம்மை மிரட்டி இருக்கிறார் தேவிகா சதிஷ்..

இவர்களுடன் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வரும் பெற்றோர்கள் & நண்பர்கள் என அனைவரும் இணையத் தொடரின் கதை ஓட்டத்திற்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் இசை பாடல்கள் பின்னணி இசை அனைத்தையும் இன்னும் முனைப்போடு வாசித்திருக்கலாம்.

இந்த இணையத் தொடரில் ஒளிப்பதிவாளர் ஜவந்தர் வாசன் ஒவ்வொரு ப்ரேமிங்கும் எவர்க்ரீன்! ஸ்க்ரீனில் எவரைப் பார்த்தாலும் அழகாகவே இருக்கிறது.

இதனை இயக்குனர் ரங்கசாமி தற்போது உள்ள இந்தக் காலத்திற்கு ஏற்ற காதல் கதையை தத்ரூபமாக கூறிஉள்ளார்.

மொத்தத்தில் இந்த இமேஜ் இணையத் தொடர் 18+ கதைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது

CLOSE
CLOSE
error: Content is protected !!