குஷி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.
நடிகர் & நடிகைகள் :- விஜய் தேவரகொண்டா,சமந்தா ரூத் பிரபு, சச்சின் கெடேகர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, லட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சிவ நிர்வாணா.
ஒளிப்பதிவு :- முரளி G.
படத்தொகுப்பு :- பிரவின் புடி.
இசையமைப்பாளர் :- ஹேஷாம் அப்துல் வஹாப்.
தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர் :- நவீன் யெர்னேனி & ஓய்.ரவி சங்கர்.
ரேட்டிங் :- 3.75/5.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியான சச்சின் கேடகெரின் மகன் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் கிடைத்த அரசு வேலையை எனக்கு சென்னையில் வேலை வேண்டாம் காஷ்மீரில் வேலை வேண்டும் என்று அங்கு செல்கிறார்.
காஷ்மீரில் கதாநாயகி சமந்தாவை சந்திக்கும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விடுகிறார்.
கதாநாயகி சமந்தாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, காதலில் விழாமல் இருந்த கதாநாயகி சமந்தாவை ஒரு கட்டத்தில் காதலில் விழ வைக்கிறார்.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியான சச்சின் கேடகெரின் மகன் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், ஜோதிட நிபுணரான பிராமணர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் முரளி சர்மாவின் மகள் கதாநாயகி சமந்தாவும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்து வருகிறார்கள்.
கதாநாயகன் விஜய் தேவரகொண்டா கதாநாயகி சமந்தாவும் காதலித்து வரும் நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள்.
எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இவர்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இவர்களுடைய பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, கதாநாயகி சமந்தா இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் செய்து ஒரு வருடம் முடிவதற்குள் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா கதாநாயகி சமந்தா இருவர் வாழ்க்கையில் குழந்தை உருவாகி கருவிலேயே கலந்து விடுகிறது.
இதற்கு தனது தந்தை சொல்லும் ஜாதக தோஷம் தான் காரணம் என்று கதாநாயகி சமந்தா நம்ப, கதாநாயகன் விஜய் தேவரகொண்டா சொல்லும் காரணத்தை ஏற்க மறுக்கிறார்.
இறுதியில் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, கதாநாயகி சமந்தா இருவரின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? இதனால், இருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு பெரிதாகி இருவரும் பிரிந்துவிட, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த குஷி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, துறுதுறு நடிப்பால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
காதல், கோபம் ஆக்சன் என கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பளிச்சிடுகிறார்.
இந்த குஷி திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சமந்தா ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை அருமையாக கொடுத்து இருக்கிறார்.
காதலிக்கும் போது புத்துணர்ச்சியையும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட்டவுடன் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
ஜெயராம் மற்றும் ரோகிணி இருவரும் திருமண வாழ்க்கையை அருமையாக புரிந்துக் கொண்ட நல்ல தம்பதியினராக நடித்து இருக்கிறார்கள்.
சமந்தாவின் பாட்டியாக நடித்திருக்கும் லட்சுமி, அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சச்சின் கெடேகர் மற்றும் முரளி சர்மா இருவரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.
இந்த குஷி திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களிடையே மிகவும் அருமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா.
ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது மிக அருமையாகவும் கலர்புல்லாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டானது.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.
திருமணத்திற்கு முன்பு உள்ள காதல், திருமணத்திற்கு பிறகு உள்ள காதல், அதனால் ஏற்படும் பிரச்சனையை சொல்லி இருக்கிறார். அதோடு நாத்திகன், ஆத்திகன் ஆகியோரில் யார் பெரியவர் என்ற ஈகோவை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா.
காதலை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா.
இடைவேளைக்கு முன் காதல், இடைவேளைக்குப் பின் கலகலப்பு, சென்டிமென்ட் என திரைக்கதையை அமைத்து மிக அருமையான ஒரு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா.
மொத்தத்தில் குஷி திரைப்படம் குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக பார்க்கலாம்.