சத்தம் இன்றி முத்தம் தா திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜ் தேவ்.
ஒளிப்பதிவாளர் :- யுவராஜ்.M .
படத்தொகுப்பாளர் :- மதன் ஜி.
இசையமைப்பாளர் :- ஜுபின்.
தயாரிப்பு நிறுவனம்ஸ:- செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- கார்த்திகேயன்.S.
மிகப்பெரிய பங்களாவில் இருந்து கொலையாளி ஒருவர் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் கொலை செய்வதற்காக துரத்திக் கொண்டு வருகிறார்.
கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் கொலையாளியிடம் இருந்து சாலையில் தப்பித்து ஓடும் போது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிறது.
காரில் மோதி விபத்துக்குள்ளான கதாநாயகி பிரியங்கா திம்மேஷை காப்பாற்றி கதாநாயகன் ஶ்ரீகாந்த் மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கிறார்.
மருத்துவமனையில் முதல் உதவிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாநாயகி பிரியங்கா திம்மேஷை கதாநாயகன் ஸ்ரீகாந்த் தனது மனைவி என கூறிவிடுகிறார்.
கதாநாயகி பிரியங்கா திம்மேஷ்க்கு விபத்தில் பழைய நினைவுகளை அனைத்தும் மறந்த நிலையில் கதாநாயகன் ஸ்ரீகாந்த் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
இரவு நேரத்தில் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் கொலை செய்ய வரும் இருவரையும் கண்முன்னே இருவரையும் கதாநாயகன் ஸ்ரீகாந்த் கொலை செய்து விடுகிறார்.
அதே நேரத்தில் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் காவல்துறை அதிகாரியான ஹரிஷ் பெராடி விபத்தை பற்றி விசாரிக்க வருகிறார்.
இந்த விசாரணையில் கதாநாயகி பிரியங்கா திம்மேஷின் கணவர் கதாநாயகன் ஶ்ரீகாந்த் இல்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது.
இறுதியில் கதாநாயகன் ஶ்ரீகாந்த் யார்? எதற்காக கதாநாயகி பிரியங்கா திம்மேஷை கதாநாயகன் ஸ்ரீகாந்த் எதற்காக வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார்?
காவல்துறை அதிகாரியான ஹரிஷ் பெராடி, கதாநாயகன் ஶ்ரீகாந்த்தை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார் என்பதை கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த சத்தமின்றி முத்தம் தா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சத்தமின்றி முத்தம் தா திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீகாந்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகன் ஸ்ரீகாந்த் கோபம், காதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த சத்தமின்றி முத்தம் தா திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா திம்மேஷ் பழைய நிகழ்வுகளை மறந்து இருக்கும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து இருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வியான் மிக மிக செயற்கையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ஷீலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஹாரிகா கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்
காவல்துறை அதிகாரி எட்வர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி அனுபவ நடிப்பு மூலம் பளிச்சிடுகிறார.
இந்த சத்தம் இன்றி முத்தம் தா திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் எம் கதைக்கு ஏற்றவாறு தேவையான ஒளிப்பதிவை மிக அருமையாக கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜுபின் இசை மற்றும் விவேகா பாடல் வரிகளுக்கு மிக அருமையாக இசை அமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜுபின் பின்னணி இசையில் சத்தம் மிகவும் அதிகமாக உள்ளது கொஞ்சம் சத்தத்தை குறைத்து இருக்கலாம்.
த்ரில்லர் கதை களத்தை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த சத்தமின்றி முத்தம் தா திரைப்படம் பார்வையாளர்களை ஈர்க்குமா?











