லாக்கர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5/ 5.
நடிகர் & நடிகைகள்:- விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன்,சுப்ரமணியன் மாதவன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராஜசேகர் என் & யுவராஜ் கண்ணன்.
ஒளிப்பதிவாளர் :- தணிக்கை தாசன்.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகாந்த் கனபர்த்தி.
இசையமைப்பாளர் :- வைகுந்த் ஸ்ரீனிவாசன்.
தயாரிப்பு நிறுவனம் :- நாராயண செல்வம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- நாராயண செல்வம் புரொடக்ஷன்ஸ்.
ரேட்டிங் :- 2.5/ 5.
கதாநாயகன் விக்னேஷ் மற்றும் நண்பர்களுடன் அவ்வப்போது திருட்டு வேலைகளில் ஈடுபட்டு மிகவும் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் விக்னேஷ். எவ்வளவு திருட்டு வேலைகள் செய்தாலும் யாரிடமும் மாட்டிக் கொள்ளாதவாறு இந்த திருட்டு வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறார்.
இந்த சூழலில் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது கதாநாயகி நிரஞ்சனி சாப்பிட்ட பில்லை கதாநாயகன் விக்னேஷ் தலையில் கட்டி விடுகிறார்.
கதாநாயகன் விக்னேஷ் கதாநாயகி நிரஞ்சனியை பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார் கதாநாயகன் விக்னேஷ்.
சிறிது நாட்கள் கதாநாயகி நிரஞ்சனியின் பின்னால் சுற்ற, கதாநாயகன் விக்னேஷின் காதலை கதாநாயகி நிரஞ்சனி ஏற்றுக் கொள்கிறார்.
ஒருகட்டத்தில், கதாநாயகன் விக்னேஷ் திருட்டு வேலை செய்து வருவதும் மற்றும் அடுத்தவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதும் கதாநாயகி நிரஞ்சனிக்கு தெரிய வர, கதாநாயகன் விக்னேஷை விட்டு கதாநாயகி நிரஞ்சனி காதலே வேண்டாம் என்று பிரிந்து விடுகிறார்.
தனது காதலிக்காகவும் தன் காதலிக்காகவும், இனி அந்த திருட்டு வேலையை செய்வதில்லை யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதும் இல்லை என கதாநாயகன் விக்னேஷ் முடிவெடுக்கிறார்
தனக்காக திருட்டு வேலையை மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிப்பதை விட்டுவிட்டதை அறிந்த கதாநாயகி நிரஞ்சனி மீண்டும் கதாநாயகன் விக்னேஷோடு இணைந்து விடுகிறார்.
மிகப்பெரிய பணக்காரனான ரவுடியாகவும் வில்லன் நிவாஸ் ஆதித்தனால் தான் என்னுடைய குடும்பம் நடுரோட்டிற்கு வந்ததாகவும், தன்னுடைய தாய் தந்தையை அவர் தான் கொலை செய்தான் எனவும் கதாநாயகி நிரஞ்சனி கதாநாயகன் விக்னேஷிடம் கூறுகிறார்.
தனக்காக, வில்லன் நிவாஸ் ஆதித்தனை பழிவாங்க வேண்டும் என கதாநாயகன் விக்னேஷிடம் கேட்க, ஓகே சொல்லி விடுகிறார் கதை
இறுதியில் வில்லன் நிவாஸ் ஆதித்தனை கதாநாயகன் விக்னேஷ் பழி வாங்கினாரா? வாங்கவில்லையா? அதற்குப் பின் என்ன ஆனது என்பதுதான் இந்த லாக்கர் திரைப்படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக இந்த லாக்கர் திரைப்படத்தில் விக்னேஷ் நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ், கதைக்கு கதாபாத்திரத்துக்கும் சரியாக பொருந்தியிருக்கிறார்.
பல இடங்களில் தன்னால் முடிந்த முயற்சியை அளவாக கொடுத்ததற்கு கண்டிப்பாக பாராட்டலாம்.
கதாநாயகியாக இந்த லாக்கர் திரைப்படத்தில் நிரஞ்சனி நடித்திருக்கிறார்.
பல காட்சிகளில் அழகாகவும் நடிப்பின் மூலம் அளவாக தந்து தனது திறமையை நாயகி நிரஞ்சனி மிகச் சிறப்பாக காண்பித்திருக்கிறார் .
வில்லனாக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், மிகவும் அதிக அளவில் அந்தக் கதைப்பதற்கு ஏற்றவாறு நடித்திருக்கலாம் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார்.
காவல் அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்தவர் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் நண்பர்களாக நடித்திருக்கும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் நண்பர்களாக நடித்திருக்கும் இருவரை வைத்து நன்றாகவே காமெடி காட்சிகள் ட்ரை பண்ணியிருக்கலாம் அதை செய்ய தவறிவிட்டார்கள் இயக்குனர்கள் ராஜசேகர் என் & யுவராஜ் கண்ணன்.
ஒளிப்பதிவாளர் தணிக்கை தாசன் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகாந்த் கனபர்த்தி படத்தொகுப்பு சில காட்சிகளில் அளவை குறைத்து பயன்படுத்திருக்கலாம்.
இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
அடுத்தடுத்து காட்சிகள் என்ன வரும் என்பது நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது அது சற்று திரைப்படத்திற்கு சறுக்கலாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகப்படுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் லோக்கல் திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.











