டிரைவர் ஜமுனா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75/5

நடிகர் நடிகைகள் :- ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன், ஸ்ரீ ரஞ்சனி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கின்ஸ்லின்.

ஒளிப்பதிவு :- கோகுல் பெனாய்.

படத்தொகுப்பு :- ராமர்.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :- 18 ரீல்ஸ்.

தயாரிப்பாளர் :- SP.சௌத்ரி

ரேட்டிங் :- 2.75 / 5

தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் கதை உள்ள திரைப்படங்கள் அடிக்கடி வருவதில்லை.

சமீப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் இநத மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் வந்து தமிழ் திரைப்பட உலகில் வந்து கொண்டிருக்கின்றன.

ஒன்பது வருடங்களுக்கு பிறகு `வத்திக்குச்சி’ திரைப்படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் கையில் எடுத்திருக்கும் கதைக்களம் தான் இந்த டிரைவர் ஜமுனா திரைப்படம்.

ஒரு கால் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைப்பது என புதிதாக கதையை யோசித்த இயக்குனர் கிங்ஸ்லின் கூடவே விறு விறுப்பான திரைக்கதையையும் யோசித்திருந்தால் இந்த டிரைவர் ஜமுனா மிக பெரிதாக பேசப்பட்டிருக்கும்.

கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தாய் தந்தை தம்பி ஆகியோருடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையை கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்படுகிறார்.

அவருடைய தாய் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

இதனால் தனது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு அனைத்தும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தலையில் விழுகிறது

தனது தந்தை செய்த கால் டாக்ஸி ஓட்டுனர் பணியை கையில் எடுக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

கூலிப்படையினர் வந்த கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

அதனால் கால் டாக்ஸியில் செல்ல முடிவெடுக்கிறார்கள்

கால் டாக்ஸி ஓட்டுனர் பணிக்கு இருக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் கால் டாக்ஸியில் கூலிப்படையினர் பிரபல அரசியல்வாதி ஒருவரை கொல்ல செய்வதற்கு கூலி படையை சேர்ந்த மூன்று பேர் கால் டாக்ஸியில் மூன்று பேர் ஏறுகிறார்கள்.

காவல்துறை கூலிப்படையை தேட, மூவரும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் கால் டாக்ஸியில் இருக்கிறார்கள்.

பிரபல அரசியல்வாதியை கூலிப்படையினர் கொலை செய்தார்களா? செய்யவில்லையா? கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷக்கு என்ன நடந்தது என்பதுதான் இநத டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

தனி ஒரு பெண்ணாக நின்று திரைப்படம் முழுவதையும் இநத க்தையை தனது தோளில் சுமந்து நிற்கிறார் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் காருக்குள் மட்டும் நடப்பதால், தனது கண் அசைவு மட்டுமே வைத்து திரைப்படம் முழுவதையும் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் தந்திரமிக்க அரசியல் தலைவராக நடிப்பில் அசத்தியுள்ளார்.

கூலிப்படை கொலைகாரனாக நடித்த மூவருமே தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

ஸ்டேன்டப் காமெடியன் அபிஷேக் குமார் நடிப்பு நேர்த்தி.

கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தாயாக ஸ்ரீ ரஞ்சனியும், நேர்மையான நடிப்பை கொடுத்துள்ளார்.

தந்தையாக பாண்டியனும் சில காட்சிகளில் இடம் பெற்றிருந்தாலும் தங்கள் கதாபாத்திரத்திற்கு என்றவாறு நடிப்பு அருமை.

சேசிங் காட்சிகளிலும், காருக்குள்ளே நடக்கும் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவும் சிறப்பு.

படத்தொகுப்பாளர் ஆர்.ராமரின் படத்தொகுப்பும் திரைபடத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

திரைப்படம் தொடங்கி, இறுதிக் காட்சி வரைக்கும், பரபரப்புக்குத் தேவையான பின்னணி இசையை இடைவெளி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

சில இடங்களில் அது திரைக்கதைக்கு உதவியாக இருந்தாலும் பல இடங்களில் திரைப்படம் முடிந்து வரும் ஒரே பாடல் காதுகளுக்கு இனிமையாக உள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தை யோசிக்க இயக்குனர் கிங்க்ஸ்லி திரைக்கதையில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தி இருந்தால் திரைப்படம் பரபரப்பாக அமைந்திருக்கும்.

முதல் பாதி உடனே முடிந்து விடுவதால், கதை மீதான சுவாரஸ்யம் சற்று குறைந்து விடுகிறது.

இரண்டாம் பாதியிலும் அநேக லாஜீக் ஓட்டைகள் பல எட்டிப் பார்க்கின்றன.

இருந்தாலும், அந்த பரபரப்பான காட்சிகள், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு என இரண்டையும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் ஆபாசப் பெறுகிறார் இயக்குனர் கிங்க்ஸ்லி.

மொத்தத்தில் டிரைவர் ஜமுனா – திரைப்படம் துணிந்தவள்.