கனெக்ட் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5 / 5.

நடிகர் நடிகைகள் :- நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய்ராய், ஹனியா நபீசா, லிஸி, மேகா ராஜன், பிரவீனா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஸ்வின் சரவணன்.

ஒளிப்பதிவு :- மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி.

படத்தொகுப்பு :-  ரிச்சர்ட் கெவின்.

இசை :- பிருத்வி சந்திரசேகர்.

தயாரிப்பு :- ரவுடி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- விக்னேஷ் சிவன்.

ரேட்டிங் :- 2.5 / 5

 

மாயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அஸ்வின் சரவணன் இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின் கேம் ஓவர் ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இயக்குனர் என முத்திரை பதித்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

ஏற்கனவே இந்ந கனெக்ட் திரைப்படத்திலிருந்து வெளி வந்த டீசர் மற்றும் ட்ரைலர் இரண்டுமே ரசிகர்களுக்கு இடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கதையின் நாயகி நயன்தாரா தனது கணவர் வினய்ராய் தன் மகள் ஹனியா நஃபீசா மற்றும் தந்தை சத்யராஜ் அனைவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இதனுடைய இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும் போது கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊருக்குள் மிகவும் அதிகமாக பரவுகிறது.

இந்த கொரோனா வைரஸ் நோயால் தொற்று காரணமாக உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் நோயால் தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வினய் ராய் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் இறந்து விடுகிறார்.

கதையின் நாயகி நயன்தாரா அவரது மகள் ஹனியா நஃபீசாவுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இருவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இதனிடையே ஹனியா நஃபீசா தனது இறந்த தந்தையிடம் பேசுவதற்காக ஆன்லைனில் அமானுஷ்ய சக்தியிடம் பேசும் மந்திரவாதியின் மூலம் பேச முயற்சி செய்கிறாள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தவறான ஆவியை கதையின் நாயகி நயன்தாராவின் மகள் ஹனியா நஃபீசாவின் மீது அந்த மந்திரவாதி ஏவி விடுகிறான்.

இதில் சிக்கிக் கொள்ளும் தனது மகளை மீட்டெடுக்க கதையின் நாயகி நயன்தாரா பல விதத்தில் முயற்சி செய்கிறார்.

இதற்கான காரணம் புரியாமல் தவிக்கும் கதையின் நாயகி நயன்தாரா இறுதியில் தனது மகள் மீது தவறான ஆவியை ஏவி விட்ட காரணத்தை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? தனது மகளை ஆவி இடம் இருந்து மீட்டாரா? மீட்கப்படவில்லையா? என்பதுதான் இந்த கனெக்ட் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கனெக்ட் திரைப்படத்தில் கதையின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

கதையின் நாயகி நயன்தாரா மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தன் கணவரை இழந்த துக்கம், தனது மகளுக்கு மந்திரவாதி ஏவி விட்ட தவறான ஆவியால் ஏற்பட்ட பிரச்சனை, பயம், கோபம் என எல்லாம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் கைத்தட்டல்கள் பெறுகிறார்.

கதாநாயகி நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தனது மகளுக்காக ஏங்கும் காட்சிகளிலும் தன் பேத்திக்காக துடியாய் துடிக்கும் காட்சிகளிலும் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.

கதாநாயகி நயன்தாராவின் செல்ல மகளாக வரும் ஹனியா நஃபீசா கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக சரியான தேர்வு.

கதையின் நாயகி நயன்தாராவின் கணவராக வரும் வினய் ராய்யின் நடிப்பு கவனிக்கத்தக்கது

வினய் ராய் கதையின் நாயகி நயன்தாராவின் கணவராகவும் டாக்டர் கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மனதில் பதிகிறார்.

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பாதிரியார் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்

திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் அனைவரின் நடிப்பு அருமையாக இருக்கிறது.

இயக்குனர் நினைத்த விஷயங்களை திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி.

இசையமைப்பாளர் பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிக சிறப்பாக உள்ளது.

திகில் திரைப்படத்திற்கு உரித்தான பின்னணி இசையை திகிலோடு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர்.

இந்த கனெக்ட் திரைப்படத்திற்கு கதைதான் மைனஸாக அமைந்துள்ளது.

இந்த கதை மற்றும் டெக்னிக்கல் விஷயங்களில் கூட இயக்குனர் அஸ்வின் சரவணன் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

கதையின் நாயகி நயன்தாரா தன் மகளைக் காப்பாற்றும் முக்கியமான உச்சக்கட்டக் காட்சி முற்றிலும் சுவாரஸ்யமற்றது.

எளிமையாக முடித்து இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

மொத்தத்தில் கனெக்ட் – திரைப்படம் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.