‘டிரோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், திராவிட் செல்வம், தேவதர்ஷினி, குரைஷி, சினிமாவாலா சதீஷ், சஸ்ஸி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக். மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர். ராகவ் மிர்தாத்.
ஒளிப்பதிவாளர் :- ஜெயந்த் சேது மாதவன்.
படத்தொகுப்பாளர் :- சதீஷ் சூர்யா.
இசையமைப்பாளர் :- ஹரி எஸ்.ஆர்.
தயாரிப்பு நிறுவனம் :- .எம். மோர்கன் ஃபிலிம்ஸ்.
தயாரிப்பாளர் – ஜி.எம். மோர்கன்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)
வெளியீட்டு தேதி :- 15 அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3./5.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் டிராவிட் செல்வம், மற்றும் நண்பர்கள் அஞ்சலி நாயர் ஆர்.ஜே.தீபக் முவரும் காவல் நிலையத்திற்கு சென்றதால் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட விஷயம் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால் இந்த இடை நீக்கம் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் வெளி சென்று தங்க வேண்டுமென முடிவு செய்கிறார்கள்.
இவர்களுக்கு கல்லூரியில் படித்தும் நண்பர் மூலம், பிளாக் ஹோல் என்று சொல்லக்கூடிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்று உள்ளது இன்று வேலை சாப்பாடு மட்டும் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என கூற உடனடியாக கதாநாயகன் டிராவிட் செல்வம், மற்றும் நண்பர்கள் அஞ்சலி நாயர் ஆர்.ஜே.தீபக் முவரும்
அங்கு சென்று தங்குகிறார்கள்.
கதாநாயகன் டிராவிட் செல்வம், மற்றும் நண்பர்கள் அஞ்சலி நாயர் ஆர்.ஜே.தீபக் பிளாக் ஹோல்குள் சென்ற முவரும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகிறது.
இந்த நிலையில் இவர்களுக்கு என்ன தேவையோ டிரோன் ஒன்றின் மூலம் வாங்கிக் கொண்டு வரும் நிலையில்
வெளி உலகத்தை பார்க்கிறார்கள்.
மிகவும் அழகிய இளம் பெண்ணான கதாநாயகி சித்தி இத்னானி அங்கு இருப்பதை பார்க்கிறார்கள்.
கதாநாயகி சித்தி இத்னானி மீது கதாநாயகன் டிராவிட் செல்வத்திற்கு காதல் மலர்கிறது.
இவர்கள் இருவரின் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கதாநாயகி சித்தி இத்னானியின் சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினி, இவர்களை சிறை பிடித்துக் கொள்கிறார்.
கல்லூரியில் இருந்து மாயமான மூன்று மாணவர்களை தேடி சிலர் பிளாக் ஹோல் வீட்டுக்குள் காவல்துறையினருடன் நுழைகிறார்கள்.
அந்த பிளாக் ஹோல் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை அதிகாரியான சினிமாவாலா சதிஷுக்கு அதிக வயதை தாண்டியும் திருமணம் ஆகாத, சினிமாவாலா சதிஷு கதாநாயகி சித்தி இத்னானியை கண்டவுடன் அவருடைய அழகில் மயங்கி அவரை காதலிக்க தொடர்ங்குகிறார்.
கதாநாயகி சித்தி இத்னானியின் அழகில் மயங்கி காதலில் விழுந்த கதாநாயகன் டிராவிட் செல்வம் மற்றும் சினிமாவாலா சதிஷு இருவருடைய காதலை கதாநாயகி சித்தி இத்னானி யாருடைய காதலை ஏற்றுக்கொண்டார்.
அந்த பிளாக் ஹோல் வீட்டுக்குள் சிக்கிய கதாநாயகன் டிராவிட் செல்வம், மற்றும் நண்பர்கள் அஞ்சலி நாயர் ஆர்.ஜே.தீபக் இவர்கள் மூவரும் தப்பித்தார்களா?, தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இதனானி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, அழகில் தேவதையாகவும், நடிப்பில் அரக்கியாகவும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.
இந்த ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக அஞ்சலி நாயர், நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், நிற பாகுபாடு பார்ப்பவர்களுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து, அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டு ரசிகர்கள் பாராட்டு பெறுகிறார்.
இந்த ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக டிராவிட் செல்வம் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், காமெடி கதாபாத்திரம் என்பதால் அதற்கான அனைத்து அம்சங்களையும் தன்னுடைய நடிப்பு மூலம் வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
சூனியக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி வித்தியாசமான கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், தன் அருமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.
குரேஷி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
ஆர்.ஜே.தீபக் மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களது வேலையை எவ்வித குறையின்றி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், ஒளிப்பதிவு மூலம் குறிப்பிட்ட ஒரே இடத்தில் பெரும்பாலான காட்சிகளை காட்சிப்படுத்தினாலும், கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையில் பாடல்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் ரகம் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் மிகவும் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
பாட்டி கதையையும், பறக்கும் தட்டு என்ற கற்பனை கதையை வைத்து மிகவும் சிறப்பான திரைக்கதை, அழகி, சூனியக்காரி, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுடன் நிற அரசியலையும் சேர்த்து நகைச்சுவையாக கொடுத்திருப்பதோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிந்திக்க வைத்து திரைப்படத்தை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்.
மொத்தத்தில், ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று கண்டுகளிக்க வேண்டிய படம்.













