’ஒன்ஸ்மோர்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு,  ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், பிலிப்சன் தாமஸ், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன், கண்ணன் டி, ரிச்சி ரிச்சர்ட்சன், ரக்ஷா செரின், ஸ்ரீகாந்த்,  நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி சேதன், ஜென்சன் திவாகர், தயாளன், மகேஸ்வர், ரமா ராஜேந்திரா, லட்சுமி சரவணன், சுதர்சன் காந்தி, ஆரீஷ், குட்நைட் ஆர். நாகராஜன், ரித்திக் கிருஷ்ணா, பூஜா சுரேந்தர், நிர்மல் குமார், அபிரா பிரவீன், ஹரிகுமார், சோமசூர்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் விஸ்வநாதன்.

படத்தொகுப்பாளர் :- நாஷ்.

இசையமைப்பாளர் :- ஹேஷாம் அப்துல் வஹாப்.

தயாரிப்பு நிறுவனம் :- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- யுவராஜ் கணேசன்,

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  3./5.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் தன்னுடைய பழைய முதல் காதலை இழந்த பின்னர், சிரிக்க மறந்து, வாழ மறந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திடீரென்று ஒரு நாள் ராேட்டில் கதாநாயகன் அர்ஜுன் தாஸ் பார்க்கும் கதாநாயகி அதிதி சங்கர் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதாநாயகன் அர்ஜுன் தாஸ் ஒன் சைடாக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுவதாகவும்  கூறுகிறார்.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் முதலில்  கதாநாயகி அதிதி சங்கரின் காதலை ஏற்க மறுத்தாலும்  கதாநாயகி அதிதி சங்கரின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனம் மாறி, காதலிக்க தொடங்குகிறார்.

இருவர் வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடக்கும் நிலையில்

நிச்சயதார்த்தம் நடக்கும் போது கதாநாயகன் அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் போன் செய்து உன்னை சந்திக்க வேண்டும், என்று கூறுகிறார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்பு கொள்ளும் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் சந்திக்கும் கதாநாயகன் அர்ஜுன் தாஸ், குழப்பமான மனநிலைக்கு செல்ல, தன்னை பிரிந்து சென்றதற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைகிறார்.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் மற்றும் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா?

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இருவருக்கும் திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த  ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ’ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் வழக்கம் போலவே இறுக்கமான முகத்தோடு வலம் வரும், சிரிக்க மறந்து சோகமான முகத்தோடு
இடைவெளிக்கு முன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  இறுக்கமான மனநிலையில் காணப்படும் கதாநாயகன் அர்ஜுன் தாஸ், இடைவேளைக்குப் பின்  புதியதாக ஒரு காதல் கிடைத்தவுடன்  சந்தோஷத்துடன் வலம் வந்தாலும், முகத்தில் அமைதியும், சோகமும் சந்தோஷமும் கலந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ’ஒன்ஸ்மோர்’  திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அதிதி சங்கர் தனது துடிப்பான நடிப்பு மூலம் திரைப்படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர், தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் , மிக சாதாரணமாக கையாண்டிருக்கும்  திரைப்படத்திற்கும் மாபெரும் அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்த ’ஒன்ஸ்மோர்’  திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை சோனா ஒலிக்கல் நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

டிராவிட் செல்வம், அனுஷா பிரபு,  ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், பிலிப்சன் தாமஸ், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன், கண்ணன் டி, ரிச்சி ரிச்சர்ட்சன், ரக்ஷா செரின், ஸ்ரீகாந்த்,  நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி சேதன், ஜென்சன் திவாகர், தயாளன், மகேஸ்வர், ரமா ராஜேந்திரா, லட்சுமி சரவணன், சுதர்சன் காந்தி, ஆரீஷ், குட்நைட் ஆர். நாகராஜன், ரித்திக் கிருஷ்ணா, பூஜா சுரேந்தர், நிர்மல் குமார், அபிரா பிரவீன், ஹரிகுமார், சோமசூர்யா,  உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை எந்த விதமான குறையின்றி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மூலம் மிகவும் சிறந்த முறையில்  காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கும் நிலையில் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் விதத்திலும் பயணித்திருக்கிறார்.

பழைய திரைப்படங்களில்  பார்த்து பழக்கப்பட்ட காதல் கதை தன என்றாலும், அதை திரைக்கதையில் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும், ரசிக்க கூடிய விதத்திலும் கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

மொத்தத்தில், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்.

error: Content is protected !!