‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’  திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சூஜி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டி. ஆண்டனி.

ஒளிப்பதிவாளர் :- பியட்ரோ வில்லானி.

படத்தொகுப்பாளர் :- டி. ஆண்டனி.

இசையமைப்பாளர் :- ஜெய்கர் ஹரிநாத் & அசோக் ஸ்ரீதரன், ஜோயி ரெடா.

தயாரிப்பு நிறுவனம் :-  ஆண்டனிஸ் அட்லியர்.

தயாரிப்பாளர் :- டி. ஆண்டனி.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

வெளியீட்டு தேதி :- 04 செப்டம்பர்  2026.

ரேட்டிங் :-  2.5/5.

தாயை இழந்து தந்தையின் அன்பும் ஆதரவும் இல்லாமல் சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்து வரும் கதாநாயகன், டி. ஆண்டனி ஒரு கட்டத்தில் அந்தத் தனிமையே இப்படிதான் தனது வாழ்க்கையை  ஏற்றுக்கொள்கிறான்.

தனிமையில் இருப்பதால் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போதை மற்றும் விலைமாது உடன் தொடர்பு என வாழ்க்கை  தன்னைச் சுற்றி ஒரு இருண்ட உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்கிறான்.

கதாநாயகன், டி. ஆண்டனி இந்த வாழ்க்கை ஒரு பிரச்சனையாகவே தெரியாமல், தனிமையை மறப்பதற்கான ஒரு வழக்கமாகவே மாறுகிறது.

அப்படிப்பட்ட சூழலில் கதாநாயகன், டி. ஆண்டனி  வாழ்க்கையில் ஒரு விலைமாதுவான பெங்காலி இளம் பெண் கதாநாயகி மதுமிதா தாஸ், அறிமுகமாகிறாள்.

கதாநாயகன், டி. ஆண்டனி கதாநாயகி மதுமிதா தாஸ், இருவருக்கும் ஏற்படும் பழக்கம் மெதுவாக நெருக்கமாக மாற, அவனது தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது.

அதன் பின்னர் கதாநாயகன், டி. ஆண்டனி கதாநாயகி மதுமிதா தாஸ், இருவரும் இணைந்து வாழத் தொடங்குகிறார்கள்.

தனிமையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த கதாநாயகன் ஆண்டனி டி கதாநாயகி மதுமிதா தாஸ், இருப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் திடீரென இருவரும் பிரியத் தொடங்குகிறார்கள்.

கதாநாயகன் ஆண்டனி டி கதாநாயகி மதுமிதா தாஸ், இருவரும் மீண்டும் இணைந்தார்களா?, இருவரும்  இணையவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக டி.ஆண்டனி நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக மதுமிதா தாஸ், நடித்துள்ளார்.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ்,  முதல் படத்திலேயே பலமான கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி மற்றும் அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், இருவரும் முதல் திரைப்படத்திலேயே பலமான கதாபாத்திரங்களில் சிறப்பாக  பயணித்திருக்கிறார்கள்.

ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகவும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜெய்கர் ஹரிநாத் & அசோக் ஸ்ரீதரன், இசையில் பாடல்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜோயி ரெடா பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

விலை மாதுவுடன்  காதல் என்ற மாற்றுச் சிந்தனையோடு காதல் கதையை எளிமையான முறையில் ரசிக்கும்படி சொல்லியிருந்தார் இயக்குநர் டி.ஆண்டனி.

மொத்தத்தில், ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் ஏதோ செய்யும்.

CLOSE
CLOSE
error: Content is protected !!