கவர்ச்சிக்கு நோ சொல்லும் நடிகை நித்யா மேனனின் அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

சென்னை 27 ஆகஸ்ட் 2022 கவர்ச்சிக்கு நோ சொல்லும் நடிகை நித்யா மேனனின் அதிரடி முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரைப்பட துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன் கன்னட திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மலையாள திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழ் திரைப்பட உலகில் சித்தார்த் நடித்த 180 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்பு வெப்பம், மாலினி 22, பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகை நித்யா மேனனின் கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் நித்யா மேனன் தற்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை கவர்ச்சியாக மட்டும் எதிர்காலத்தில் நடிக்க கூடாது என நடிகை நிதியா மேனன் முடிவு எடுத்து இருக்கிறாராம்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

error: Content is protected !!