‘காந்தி கண்ணாடி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பாலா, பாலாஜி சக்திவேல், ஊர்வசி அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி சங்கர், முருகானந்தம், டி.எஸ்.ஆர்,
ஆகாஷ், மார்ஷல், மனோஜ் ஆராத்யா, கேம் சூரி, வசுதாரா, ரமேஷ் கண்ணா டாக்டர் வித்யா,
ஆத்மா, எட்வின், அபிஷேக், நேமி,
புதுப்பேட்டை சுரேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷெரிப்.

ஒளிப்பதிவாளர் :- பாலாஜி கே ராஜா.

படத்தொகுப்பாளர் :- டி.சிவானந்தீஸ்வரன்.

இசையமைப்பாளர் :- விவேக் & மெர்வின்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆதிமூலம் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜெயிகிரண்.

ரேட்டிங் 3.5./5.

தான் காதலித்து வரும் காதலி அர்ச்சனாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொத்து மற்றும் சொந்தம் பந்தங்களை விட்டுவிட்டு ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்தி வேல், எனது காதலி அர்ச்சனாவுடன் இரவோடு இரவாக சென்னைக்கு வருகிறார்.

சென்னைக்கு வரும் பாலாஜி சக்திவேல் திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோவில் செக்யூரிட்டியாக பணிபுரியும் பாலாஜி சக்திவேல் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதல், அர்ச்சனாவை காதலிக்க தொடங்கியதில் இருந்து தற்போது 60 வயது வரை அப்படியே அன்பும் காதலும் மாறாமல் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்.

இதனுடைய ஒரு 60ஆம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா நமக்கு பிள்ளைகள் இருந்தால் நமக்கும் 60ஆம் கல்யாணம் செய்து வைத்திருப்பார் என கணவரிடம் கூற மனதளவில் பாதிக்கப்படும் பாலாஜி சக்திவேல் எப்படியாவது தனது காதல் மனைவி அர்ச்சனாவின் 60 வது கல்யாணம் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பணம் மட்டுமே தேவை என்ற மனநிலையில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில்
நிகழ்ச்சி வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வரும் கதாநாயகன் பாலாவை, சந்திக்கும் பாலாஜி சக்திவேல் எனது காதல் மனைவி அர்ச்சனாவுக்கும் எனக்கும் அறுபதாம் திருமணம் நடத்த வேண்டும் என கூறுகிறார்.

60 வது கல்யாணத்தை நடத்தி தர வேண்டும் என்றால் 52 லட்ச ரூபாய் செலவு ஆகும் என கதாநாயகன் பாலா கூறுகின்றார்.

கதாநாயகன் பாலா 60 வது திருமணத்தை லாபம் தரும் ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்.

இந்த ஒரு ஈவெண்டில் கல்லா கட்டிவிடலாம் என நினைக்கிறார் கதாநாயகன் பாலா.

இந்த நிலையில் பாலாஜி சக்திவேல் தனது சொந்த ஊரில் உள்ள தனது பெயரில் இருக்கும் நிலத்தை விற்று பணம் ஏற்பாடு செய்கிறார்.

நிறுத்தை விற்று ஏற்பாடு செய்த பணத்தை வைத்து திருமணத்தை நடத்தி விடலாம் என நினைக்கும் பாலாஜி சக்திவேல் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் சொல்லாது என மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகிறது.

இந்த நிலையில் பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் அனைத்து பணமும் சொல்லாமல் போய்விடுகிறது.

தனது காதல் மனைவி அர்ச்சனாவின் ஆசையை பாலாஜி சக்திவேல் பூர்த்தி செய்தாரா? பூர்த்தி செய்யவில்லையா?

கதாநாயகன் பாலா இந்த ஈவண்டில் கல்லா கட்டினாரா! கல்லா கட்டவில்லையா? என்பதுதான் இந்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த காந்தி கண்ணாடி திரைப்படத்தில் கதாநாயகனாக கேபிஒய் பாலா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கேபிஒய் பாலாவுக்கு இது தான் முதல் திரைப்படம் போல் தெரியவில்லை நடனம் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்

இந்த காந்தி கண்ணாடி திரைப்படத்தில் கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி, கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த வித குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

காந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், எதார்த்தமான நடிகராக மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமான நடிகராக கவனம் ஈர்க்கிறார்.

தன்னுடைய காதல் மனைவி மீது அவர் காட்டும் அளவுக்கு அதிகமான அன்பை போலவே, சில இடங்களில் அவரது நடிப்பும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பாலாஜி சக்திவேலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி அர்ச்சனா தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திற்கும் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, பாலாஜி சக்திவேல் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் பிரமாண்டமாக பளிச்சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் பின்னணி இசை காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

உலகில் ஏராளமான காதல் திருமணங்கள் கோர்ட் படி ஏறுவார்கள் தற்போதைய காலக்கட்டத்தில், இளமை பருவத்தில் மட்டும் இன்றி, முதிர்ந்த வயதை தாண்டியும், தங்களது காதலை வெளிப்படுத்தி திகிட்ட திகிட்ட காதலிப்பதே உண்மையான காதல், என்ற கருத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஷெரிப்.

மொத்தத்தில், ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

error: Content is protected !!