குடும்பஸ்தன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- மணிகண்டன், சான்வே மேகனா, ஆர்.சுந்தரராஜன், குடச்சனத் கனகம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷன்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், காயத்திரி, வர்கீஸ்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜேஷ்வர் காளிசாமி.

ஒளிப்பதிவாளர் :- சுஜித் N சுப்ரமணியம்.

படத்தொகுப்பாளர் :- .கண்ணன் பாலு.

இசையமைப்பாளர் :- வைசாக்.

தயாரிப்பு நிறுவனம் :- சினிமாக்காரன்.

தயாரிப்பாளர் :- எஸ். வினோத்குமார்.

ரேட்டிங்:- 3.75./5.

கதாநாயகன் மணிகண்டனும், கதாநாயகி சான்வி மேக்னாவும் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு குடும்பத்தினரும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகும் கதாநாயகன் மணிகண்டனுக்கு பணம் தேவைகள் அதிகரிக்கிறது.

தான் வேலை பார்க்கும் வேலையில் எப்படியாவது முன்னேற்றம் அடைந்து தனது குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் மணிகண்டன், ஒரு சிறிய பிரச்சனையால் தனது வேலையை இழந்துவிடுகிறார்.

வேலை போன விஷயத்தை குடும்பத்திற்கு தெரிந்தால் பெரிய அளவில் சிக்கலாகி விடும் என்பதால், வீட்டில் சொல்லாமலேயே வேறு வேலை தேடிக்கொண்டே, தன்னுடைய குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதால் வட்டிக்கு கடன் வாங்குகிறார்.

கதாநாயகன் மணிகண்டன் வேலை கிடைக்கும் எதிர்பார்த்தது போல் தனக்கு வேலை கிடைக்காமல் போகவே, வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதே சமயம் தனது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூழ்நிலையில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற மன நிலையுடன் தன்னம்பிக்கையுடன் கதாநாயகன் மணிகண்டன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டனின் குடும்பத்தாரின் வாழ்விற்கு பணம் தேவை என்பதை அறிந்து பணம் தான் வாழ்க்கை, என்ற மனநிலைக்கு மாறுகிறார்.

கதாநாயகன் மணிகண்டனின் மனமாற்றத்தால் அவரது பிரச்சனைகள் தீர்ந்ததா? தீரவில்லையா?, என்பதுதான் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குடும்பஸ்தன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக மணிகண்டன் நடித்திருக்கிறார்.

காதல் திருமணம், அதை தொடர்ந்து குடும்பத்தில் எழும் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், அதை சமாளிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் ஏற்படும் தோல்விகள் என மிகவும் அருமையாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

எந்த ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாலும், கதைக்களம்  மற்றும் கதாபாத்திரத்தின் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.

கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் உள்ள கதாபாத்திரங்களை மிக எதார்த்தமாக வடிவமைத்து அதை திரைப்பட ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் நடிகர் மணிகண்டன்.

இந்த குடும்பஸ்தன் திரைப்படத்தில் கதாநாயகியாக சான்வி மேக்னா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, புதுமுகம் என்ற தெரியாத அளவிற்கு அதிக திரைப்படங்கள் நடித்தது போல் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டன் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது நடிப்பால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

கதாநாயகன் மணிகண்டனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், தனது வழக்கமான நடிப்பை மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.

கதாநாயகனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடசனத் கனகம், தன்னுடைய பார்வை மற்றும் உடல்மொழி மூலம் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.

கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், கதாநாயகன் மணிகண்டனின் முதலாளி கத பத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், கதாநாயகன் மணிகண்டனின் நண்பர்கள் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின்  ஒளிப்பதிவு மூலம் நடித்திருக்கும் கதாபாத்திரங்களில்  இயல்புத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்து இருக்கிறார்.

பல குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சம்பவங்களை திரைப்படமாக்கியிருப்பதோடு, அதில் நடிகர்களை இயல்பாக நடிக்க வைத்து சிரிக்க வைத்திருப்பதால், பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக திரைப்படத்தை ரசிக்க முடிகிறது.

பல குடும்பங்களில் உள்ள ஆண்கள் கடந்து வந்த வாழ்க்கை, பலர் கடக்க முயற்சித்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை, என பார்வையாளர்களை திரைப் படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் மிக அருமையாக இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி,

மொத்தத்தில், ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் தமிழக மக்கள்  கஷ்டங்களை மறந்து கண்டிப்பாக சிரிக்கலாம்.

error: Content is protected !!