‘இம்மார்டல்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜி.வி. பிரகாஷ் குமார், கயாது லோஹர், டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகர்ஜன், பெமா த்சாம்சோ, சுனிதா ஸ்ரேஷ்டா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மாரியப்பன் சின்னா.
ஒளிப்பதிவாளர் :- அருண் ராதாகிருஷ்ணன்.
படத்தொகுப்பாளர் :- ராஜேஷ் எம்..
இசையமைப்பாளர் :-சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏ.கே. ஃபிலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர் :- அருண்குமார் தனசேகரன்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)
வெளியீட்டு தேதி :- 04 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5/5.
தன் மாமா லொள்ளு சபா மாறன், நடத்தி வரும் பிரிண்டிங் பிரஸில் வேலை செய்து கொண்டு இருக்கும் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார், தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் விட்டை காலி செய்ய சொல்லாததால் புதிய வீடு தேடி அலைகிறார்.
புதியதாக வீடு தேடி அலைந்து கொண்டிருக்கும் கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமாருக்கு கதாநாயகி கயாது லோஹர் ஒரு அறை மட்டும் வாடகைக்கு இருக்கிறது ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என போன் மூலம் கூறுகிறார்.
இந்த நிலையில் உடனே அறை பார்க்க கதாநாயகி கயாது லோஹர் மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமான பெண்ணாக இருக்க அழகில் மயங்கி ஈர்க்கப்பட்ட கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமார், உடனே அறையை எந்தவித முன்யோசனையும் இன்றி கதாநாயகி கயாது லோஹர் இனைந்து அதே விட்டில் தங்குகிறார்.
இந்நிலையில் ஒரு சில மர்மமான நிகழ்வுகள் இந்த விட்டில் நடக்க அது கதாநாயகன் ஜிவி பிரகாஷ்குமாருக்கு ஒரு சந்தேகத்தை கொடுக்கும் நிலையில் தொடர் அச்சமூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து கதாநாயகி கதாநாயகி கயாது லோஹர் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாய உலகத்தில் சிக்கிக் கொண்டதை தாமதமாக கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் உணர்கிறார்
கதாநாயகி கயாது லோஹர் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாய உலகத்தில் இருந்து கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் உயிர் தப்பித்தாரா? உயிர் தப்ப வில்லையா? என்பதுதான் இந்த ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘இம்மார்டல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக இசையமைப்பாளர் நடிகரும் ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் மகி என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர வயது இளைஞராக நடிப்பு பயம் பாசம் காதல் ஆக்ஷன் காட்சிகளிலும் மிகவும் அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘இம்மார்டல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக கயாது லோஹர் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கயாது லோஹர் மிக அழகாகவும் இந்த அழகுக்கு பின் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை முதல் பாதியில் பஞ்சம் இல்லாத அழகாகவும் கவர்ச்சியாகவும் இரண்டாவது பாதியில் வில்லித்தனமான பார்வையில் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகர்ஜன், பெமா த்சாம்சோ, சுனிதா ஸ்ரேஷ்டா, நடித்திருக்கும் அனைத்து கதா பத்திரங்களும் கொடுத்த வேலை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக காட்சி படுத்தி திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை தப்பி பிழைக்க வைத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பி இருந்தால் திரைப்படம் அகல பாதாளத்திற்கு சென்றிருக்கும் அதை சரியாக தொழில்நுட்பக் குழுவினர் உயிர் பிடித்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
அருமையான கதையை சிறப்பான திரைக்கதையால் திரைப்படத்தை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக, அருமையான ஒரு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா.
மொத்தத்தில், இந்த ‘இம்மார்டல்’ ஒரு ஹாரர் திரில்லர் சஸ்பென்ஸ் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்கலாம் உங்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றம் அளிக்காது.











