‘ஐ அம் கேம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நஹாஸ் ஹிதாயத்.

ஒளிப்பதிவாளர் :- ஜிம்ஷி காலீத்.

படத்தொகுப்பாளர் :- சமன் சாக்கோ.

இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய்.

தயாரிப்பு நிறுவனம் :- வேஃபரர் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

வெளியீட்டு தேதி :- செப்டம்பர் 04 2026.

ரேட்டிங் :-  3/5.

மிகப்பெரிய பணக்கார  தொழிலதிபரின் மகன் கதாநாயகன் துல்கர் சல்மான் இருக்கும்  அனுதினமும் குடி, சூதாட்டம் என தினந்தோறும் விளையாடிக் கொண்டிருக்கும், எப்படியாவது தனது தந்தையை விட  உலகில் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என தினந்தோறும் கடன் வாங்கி சூதாடிக்கொண்டே இருக்கிறார்‌.

ஆனால் கதாநாயகன் துல்கர் சல்மான் சூதாட்டத்தில் பல கோடிகளை இழந்துவிட, கடைசியாக தனது தாய் இருக்கும் கடனை அடைக்கச் சொல்லி கொடுத்த பணத்தையும்  சூதாட்டத்தில் விழுந்துவிட என்ன செய்வது என்று தெரியாமல் துப்பாக்கி காட்டி கடைசியாக சூதாட்டத்தில் இழந்த பணத்தை வாங்கி கொண்டு தப்பிகிறார்,

பணத்தை வாங்கிக் கொண்டு தப்பிக்கையில் அவர் கார் மீது ஒரு லாரி ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு கதாநாயகன் துல்கர் சல்மான் வலது கையை இழந்து விடுகிறார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கதாநாயகன் துல்கர் சல்மான் சிகிச்சையின் போது ஒரு நன்கொடையாளர் மூலம் புதிய கை ஒன்றை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் இணைத்து வைக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அனைத்தும் சரியாகி விட்டது என்று நினைக்கும் நிலையில் கதாநாயகன் துல்கர் சல்மானுக்கு வலது கை மூலம் ஒரு சூப்பர் பவர் கிடைக்கிறது.

அந்த வலது கையில் சூப்பர் பவர் மூலம் கதாநாயகன் துல்கர் சல்மானுக்கு சூதாட்டத்தில் வெற்றி மேல் வெற்றியை குவிக்க, ஆனால் அந்த வலது கை வில்லன் மிஷ்கினை கொலை செய்ய குறிவைக்க, அந்த கை யாருடையது, எதற்கு மிஷ்கினை குறிவைக்கிறது.

அந்த வலது கையை கொடுத்த நன்கொடையாளர் யார்? என்பதை கதாநாயகன் துல்கர் சல்மான் கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?,

கதாநாயகன் துல்கர் சல்மானுக்கு அந்த வலது கை மூலம் கிடைத்த சூப்பர் பவரினால் என்னென்ன பிரச்சனைகள் வந்ததா?,  வரவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஐ ம் கேம்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஐ ம் கேம்’  திரைப்படத்தில் கதாநாயகனாக  துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானு வழக்கம்போல தனது அட்டகாச திரை ஆளுமையால் ஒற்றை ஆளாக திரைப்படத்தை ஒற்றை ஆளாக மொத்தமாக சுமந்திருக்கிறார்.

குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் தனது கட்டுப்பாட்டை மீறி தன் கை செயல்படும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘ஐ ம் கேம்’  திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ஆண்டனி வர்க்கீஸ், நடித்திருக்கிறார்.

இந்த ‘ஐ ம் கேம்’  திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்க்கீஸ், நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இந்த ‘ஐ ம் கேம்’  திரைப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோஹர், சம்யுக்தா, இருவரும் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் கயாடு லோஹர், சம்யுக்தா, இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கிரிக்கெட் கேப்டன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் எந்த விதமான குறையும் இல்லாமல் நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலீத் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தி அனைத்து காட்சிகளையும் கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

173 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் நீளம் மிகப்பெரிய அளவில் குறையாக உள்ளது.

பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும் படியாக இந்த ஒரு காட்சியும் இல்லை என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல திரைப்படம் முடிந்தால் போதும் என்ற எண்ணம் வந்து விடுகிறார்கள்.

ஒரு சுவாரஸ்யமான ஃபேன்டஸி கதையை கையில் எடுத்துக் கொண்ட போதிலும், அதில் எந்தவித மேஜிக்கும் செய்யாமல் வழக்கமான பழிவாங்கும் கதையை நோக்கி அது வந்து முதல் பாதி அருமையாகவும் இரண்டாம் பாதியில் சுமாராகவும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.

மொத்தத்தில், இந்த ‘ஐ அம் கேம்’ திரைப்படம் ஒரு முறை திரையரங்கு சென்று பார்க்கலாம்.

error: Content is protected !!