சகுந்தலம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.25/ 5.

நடிகர் நடிகைகள் :- சமந்தா, தேவ் மோகன், சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, அல்லு அர்ஹா’  கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா, ஜிஷு சென்குப்தா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- குணசேகர்

ஒளிப்பதிவு :- சேகர் வி. ஜோசப்.

படத்தொகுப்பு :-  பிரவின் புடி.

இசை :- மணிசர்மா.

தயாரிப்பு நிறுவனம் :-  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், டீம்வொர்க்ஸ்

தயாரிப்பாளர் :- தில் ராஜு, நீலிமா குணா,

ரேட்டிங் :- 2.25/ 5.

இந்திய திரைப்பட உலக ஃபேன் இந்தியா திரைப்படங்கள் வருகை வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கும் இன்னொரு திரைப்படம்தான் சகுந்தலாம்.

புராண காலங்களில் உள்ள துஷ்யந்தன் சகுந்தலை காதலை சொன்ன சாகுந்தலம் காதல் கதையை காவியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் குணசேகரன் இயக்கி இருக்கிறார்.

சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது நடிகை சமந்தாவின் வழக்கமாகிவிட்டது

விஸ்வாமித்திருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தை (சாகுந்தலா) கதாநாயகி சமந்தா.

கண்வ மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ப்பு தனது சொந்த மகளாக வளர்ந்து வருகிறாள் கதாநாயகி சமந்தா.

ஒருநாள் (துஷ்யந்தன் மகாராஜா) கதாநாயகன் தேவ் மோகன் தன் ஊருக்குள் புகுந்த காட்டு விலங்குகளை வேட்டையாடி கொண்டே கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்குள் நுழைகிறார்.

கதாநாயகி சமந்தாவின் அழகில் மயங்கிய கதாநாயகன் தேவ் மோகன் கதாநாயகி சமந்தாவின் மீது கண்டதும் காதல் வயப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்கள்.

ஒருநாள் அவசரமாக தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரைவில் திரும்பி வந்து உன்னையும் அழைத்து சொல்கிறேன் என கதாநாயகி சமந்தாவிடம் உறுதியளித்து விட்டு கதாநாயகன் தேவ்மோகன் புறப்படுகிறான்.

இதற்கிடையே கதாநாயகி சமந்தா தாய்மை அடைகிறாள்.

இதனால் கதாநாயகன் தேவ் மோகனை தேடி அரண்மனைக்கு சென்ற கதாநாயகி சமந்தாவை நீ யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி கதாநாயகன் தேவ் மோகன் அவமானப்படுத்தி அரண்மனையை விட்டு வெளியே அனுப்புகிறார்.

இறுதியில் கதாநாயகி சமந்தா தன் காதலனை கரம் பிடித்தாரா..? கதாநாயகன் தேவ் மோகன், கதாநாயகி சமந்தாவை தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன..? என்பதுதான் இந்த சகுந்தலாம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சகுந்தலம் திரைப்படத்தில் கதாநாயகனாக தேவ் மோகன் நடித்திருக்கிறார்.

துஷ்யந்தன் மகாராஜா தேவ் மோகன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று இந்த சகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார் சமந்தா.

நடிகை சமந்தா சாகுந்தலையாக அவரது வசனங்களும் நடிப்பும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.

தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முழு நடிப்பையும் மிக அருமையாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஹா அனைவரையும் கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையும் பெரிதாக திரைப்படத்திற்கு எடுபடவில்லை.

புராணக் கதையை தற்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு திரைப்படமாக எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் குணசேகர்.

பல முக்கிய கதாபாத்திரங்கள் மனதில் நிற்காமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.

புராணக்கதை யோசித்த இயக்குனர் திரைக்கதையை இன்னும் பலமாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.

கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனைத்துமே மிகவும் செயற்கை தனமாக இருப்பது வருத்தமளிக்கிறது.

மொத்தத்தில் சாகுந்தலம் திரைப்படம் சுமார் ரகம்.