திருவின் குரல் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :- பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா, அஷ்ரஃப், சுரேஷ், ஏ.ஆர்.ஜீவா, வினோத்
மகேந்திரன், மோனேகா, சுபத்ரா, சுபைதா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :– ஹரிஷ் பிரபு.

ஒளிப்பதிவு :- சின்டோ போடுதாஸ்.

படத்தொகுப்பு :-  கணேஷ் சிவா.

இசை :- சாம் சிஎஸ்.

தயாரிப்பு நிறுவனம் :-  லைக்கா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.

ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் அருள்நிதி நடித்துள்ள திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சமீப காலமாகவே நடிகர் அருள்நிதி ஹாரர் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் மீண்டும் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு இந்த திருவின் குரல் திரைப்படத்தின் மூலம் திரும்பியுள்ளார்.

வாய் பேச முடியாது மற்றும் காது சிறிதளவு கேட்கும் திறன் கொண்ட கதாநாயகன் அருள்நிதி தந்தை பாரதிராஜா சகோதரி சகோதரி மகள் அத்தை அத்தை மகள் ஆகியோருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர் தந்தை பாரதிராஜாவுடன்
கதாநாயகன் அருள் நிதி
இணைந்து கட்டிட கட்டும் வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகன் அருள் நிதி கதாநாயகி ஆத்மிகா விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் ஒரு நாள் கட்டிட வேலையின் போது தந்தை பாரதிராஜாவுக்கு மாடியில் இருந்து ஒரு சிமெண்ட் மூட்டை மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது.

தந்தை பாரதிராஜாவை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கிறார் கதாநாயகன் அருள்நிதி

அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, அங்கே பணியாற்றும் வார்டு பாய், லிஃப்ட் ஆபரேட்டர், பிணவறை ஊழியர், செக்யூரிட்டி என நால்வர் கூட்டணியுடன் கதாநாயகன் அருள்நிதிக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

மேலும் அந்த நான்கு நபர்கள் செய்யும் குற்ற செயல்களுக்கு கதாநாயகன் அருள்நிதி தடையாக நிற்கிறார்.

இதனால் கோபமடையும் நான்கு பேரும், கதாநாயகன் அருள் நிதியை பழிவாங்க நினைக்கிறார்கள்.

இறுதியில் தந்தை பாரதிராஜாவை அரசு மருத்துவமனையில் இருந்து கதாநாயகன் அருள் நிதி காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? பழிவாங்க நினைத்த நான்கு நபர்களின் தொந்தரவை எப்படி கதாநாயகன் அருள்நிதி சமாளித்தார்? என்பதுதான் இந்த திருவின்குரல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திருவின் குரல் திரைப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி வாய் பேச முடியாத சிறிதளவு காது கேட்கும் திறன் கொண்ட நபராக மிக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வசனம் ஏதும் இல்லாமல் முக அசைவுகள் உடல் மொழியால் மட்டுமே நடித்து மிகப்பெரிய பாராட்டை பெற்று இருக்கிறார்.

குறிப்பாக காதல் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். கிளைமாக்சில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார் கதாநாயகன் அருள் நிதி.

இந்த திருவின் குரல் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார்.
.
பெரியதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகன் அருள்நிதிக்கு தந்தையாக நடித்திருக்கும் பாரதிராஜா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

வில்லன்களாக நடித்திருக்கும் நான்கு நபர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை சூப்பர்.

மிகவும் எளிமையான கதையை கையில் எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை மூலம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

அரசு பொது மருத்துவமனைகளில் நடக்கும் குற்றச் செயல்களை மிகவும் துணிச்சலோடு சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் திருவின் குரல் திரைப்படம் மிகச்சிறப்பு.