கொலை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75./ 5.

நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி குமார்.

ஒளிப்பதிவு :- சிவகுமார் விஜயன்.

படத்தொகுப்பு :- செல்வா ஆர்கே.

இசை :- கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

தயாரிப்பு நிறுவனம் :-  இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கமல் போஹ்ரா, ஜி.தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா (இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ்) டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்த சங்க ஆர்விஎஸ் அசோக் குமார் (லோட்டஸ் பிக்சர்ஸ்)

ரேட்டிங் :- 3.75./ 5.

பிரபல மாடல் அழகி மீனாட்சி செளத்ரி பூட்டியிருந்த அவருடைய விட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

மாடல் அழகி மீனாட்சி செளத்ரி பூட்டிய வீட்டுக்குள் நடந்த கொலை வழக்கை ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியான ரித்திகா சிங் அதிரடியாக விசாரிக்கிறார்.

ஆனால், அந்த விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படாமல் இருக்க, ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியான ரித்திகா சிங்கிற்கு உதவி செய்வதாக துப்பறிவாளரான விஜய் ஆண்டனி விசாரணை களத்தில் இறங்குகிறார்.

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியான ரித்திகா சிங்கும் மற்றும் துப்பறிவாளன் விஜய்  ஆண்டனி இருவரும் இணைந்து நடத்தும் விசாரணை இறுதியில் மாடல் அழகி மீனாட்சி சௌத்ரியை கொலை செய்த குற்றவாளியை இருவரும் இணைந்து கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த கொலை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் புது கெட்டப்பில் விநாயக் என்ற கதாபாத்திரத்தில் துப்பறிவாளராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, மிகப்பெரிய அளவில் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி நடித்திருக்கிறார்.

மிக அமைதியாக, ஸ்டைலிஷான நடை கூர்மையான பார்வை என்று அவரது ஒவ்வொரு நடவடிக்கையும், நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனத்தை கட்டிப்போடுவதோடு மிகப்பெரிய அளவில் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

துடிப்பான இளம் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங், தனது அளவான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார்.

மாடல் அழகி லைலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் திரைப்பட உலகிற்கு புதுமுகம் மீனாட்சி செளத்ரி, சர்வதேச மாடல் அழகிக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருப்பதோடு, தனது நடிப்பிலும் மாடல் அழகியாக அவருடைய நடிப்பின மூலம் அசத்தியிருக்கிறார்.

மாடல் அழகி மீனாட்சி செளத்ரியின் காதலராக சித்தார்த் சங்கர், அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்

முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தேர்வாக இருப்பதோடு, அவர்களுடைய இயல்பாக நடித்திருப்பது திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், திரைப்படம் ஸ்டைலிஷான ஒளிப்பதிவில் திரைப்படத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி காட்சிகளை திரைப்படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இசை மற்றும் பின்னணி இசை வழக்கமான க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் வழக்கமான இசையில் இல்லாமல் புதியதோர் வகையில் இசை அமைத்திருக்கிறார்.

கலை இயக்குனரின் பணி மிகவும் அருமையாக உள்ளது.

விடியும் முன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி குமார், இந்தக் கொலை திரைப்படத்தின் மூலமாகவும் மிகவும் வித்தியாசமான ஹாலிவுட் தரத்தில் மேக்கிங்கில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்

மொத்தத்தில் கொலை திரைப்படம்  பார்க்கும் ரசிகர்களை கொலை செய்யவில்லை.

error: Content is protected !!