தமிழரசன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75./ 5.

நடிகர் நடிகைகள் :- விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், ஒய்.ஜி.மகேந்திரன், யோகிபாபு , ரோபோ சங்கர், விவன், கஸ்தூரி, சங்கீதா, சாயாசிங், மதுமிதா, ஆதித்யா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கதிரவன் பாலு, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாபு யோகேஸ்வரன்.

ஒளிப்பதிவு :- ஆர்.டி.ராஜசேகர்.

படத்தொகுப்பு :-  புவன் சந்திரசேகர்.

இசை :- இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :-  எஸ்.என்.எஸ். மூவிஸ்.

தயாரிப்பாளர் :- கெளசல்யா ராணி.

ரேட்டிங் :- 1.75./ 5.

தமிழ் திரைப்பட உலகில் திரைப்படம் வெளிவருவதற்கு பலமுறை தேதியை அறிவித்து, , பின்பு தள்ளி வெளியான திரைப்படங்கள் ஏராளமாக இருக்கிறது.

அந்த வரிசையில் இந்தத் தமிழரசன் திரைப்படமும் பல முறை வெளியிட்ட தேதி அறிவித்து தள்ளிப்போன திரைப்படம்தான்.

சித்தி, அண்ணாமலை” ஆகிய சின்னத்திரை தொடர்களில் எழுத்தாளராக பணிபுரிந்து பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘தாஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

18 ஆண்டுகளுக்கு பின்பு இரண்டாவது திரைப்படமாக இந்த ‘தமிழரசன்’ வெளிவந்திருக்கிறது.

மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் தனது ஒரே செல்ல மகனுடன் நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறார்.

மிகவும் நேர்மையான காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் விஜய் ஆண்டனி பணிபுரிந்து வருகிறார்.

அவர் பள்ளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மகன் கலந்து கொள்கிறார்.

எதிர்பாராத விதமாக திடீரென கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மகன் மூச்சு விட முடியாமல் ஓட்டப்பந்தயத்தின் போது மயங்கி விழுகிறார்.

அதன் பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிக்கிச்சை அளிக்கும் டாக்டர் அவனுக்கு இதயத்தில் பாதிப்பு இருக்கிறது.

சில நாட்கள் மட்டும் உயிரோடு இருப்பான் என சிகிச்சை அளித்த டாக்டர் குறிக்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மகனுக்கு இதயம் தேவைபடுவதால் இதயம் மாற்று சிகிச்சை ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

இதய அறுவை சிகிச்சை செய்ய லிஸ்டில் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என லோட்டஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க, கதாநாயகன் விஜய் ஆண்டனி உடனடியாக தொகை ஏற்பாடு செய்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மிகவும் கஷ்டப்பட்டு ரூபாய் 15 லட்சம் ஏற்பாடு செய்துவிட்ட லேட்டஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் முழு பணத்தையும் செலுத்தினால்தான் உங்கள் மகனின் பெயர் லிஸ்டில் வரும் என கூறிவிடுகிறார்கள்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மகனுக்கு ஏற்பாடு செய்த இதயத்தை பணம் அதிகம் கொடுப்பதால் அமைச்சர் ஒருவருக்கு பொருத்தும் ஏற்பாடுகளும் நடக்கிறது.

இதனால் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.

இதனால் கதாநாயகன் விஜய் ஆண்டனி, மருத்துவமனையில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ்கோபியை பிணயக் கைதியாக அடைத்து வைத்து தன் மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லோட்டஸ் மருத்துவமனையை தன் வசம் கொண்டு வருகிறார்.

இறுதியில் கதாநாயகன் விஜய் ஆண்டனி மகனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதா? நடைபெறவில்லையா? கதாநாயகன் விஜய் ஆண்டனி எடுத்த முயற்சி கைகூடியதா? கைகூடவில்லையா? என்பதுதான் இந்த தமிழரசன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தமிழரசன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நேர்மையான காவல் துறை ஆய்வாளராக வரும் கதாநாயகன் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.

கதாநாயகி விஜய் ஆண்டனி நடிப்பு பெரிதாக கூறிக்கொள்ளும் அளவில் இல்லை.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மகன் மருத்துவ பிரச்சனைக்காக போராடும் பல இடங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நடுத்தர குடும்ப தாயாக ரம்யா நம்பீசன் கண் கலங்க வைக்கிறார்.

யோகிபாபு கும்கி அஸ்வின் ஆதித்யா கதிர் காமெடி மிகப்பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மகனாக வரும் பிரணாவ் எதார்த்தம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இதய அறுவை சிகிச்சை மருத்துவராக வரும் சுரேஷ் கோபிக்கு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம், அவருடைய பணியை மிகவும் சரியாக செய்து முடித்துள்ளார்.

காவல்துறை சிட்டி கமிஷனர் ஆக வரும் ராதாரவி, மற்றும் சோனுசூட், லோட்டஸ் மருத்துவமனை நிறுவனராக வரும் சங்கீதா, சாயா சிங் ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பாடல்களா? என்று கேட்கும் அளவில் பாடல்கள் உள்ளது.

மருத்துவமனையில் நடக்கும் சாமானிய மக்களிடம் எப்படி எல்லாம் பணம் பறிக்க நிர்வாகம் செய்யும் விஷயங்களை வெளிகொண்டுவர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை, திரைப்படத்தின் பல சம்பவங்கள் காட்சிகள் இதற்கு முன்பு தமிழ் திரைப்பட உலகில் வெளிவந்த ரமணா, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல திரைப்படங்களில் வந்த காட்சிகளாக இருக்கிறது.

மொத்தத்தில் தமிழரசன் திரைப்படம் பழைய புளித்த மாவு.