ரிப்பப்பரி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.5 /5.

நடிகர் நடிகைகள் :- மாஸ்டர் மகேந்திரன், நோபல் கே ஜேம்ஸ், மாரி, ஸ்ரீனி, காவ்யா அறிவுமணி, ஆரத்தி பொடி, தனம், செல்லா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நா. அருண் கார்த்திக்.

ஒளிப்பதிவு :- தளபதி ரத்னம்.

படத்தொகுப்பு :-  முகன்வேல்.

இசை :- துவாரக தியாகராஜன்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஏகே தி டேல்ஸ்மேன்.

தயாரிப்பாளர் :- நா. அருண் கார்த்திக் – நா.நரேந்திரன்.

ரேட்டிங் :- 1.5 /5.

தமிழ் திரைப்பட உலகில் நாட்டாமை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன்.

அதன் பிறகு விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கூட்டணியில் வெளியான  ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் மாஸ்டர் மகேந்திரன்.

திரைப்பட ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக திரைப்படம் எடுக்கலாம் தப்பில்லை.

ஆனால் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமலும், நம்பகத்தன்மை இல்லாமல் திரைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

கோவை தலைக்கரை கிராமத்தில் ஜாதி மாறி திருமணம் செய்ய முயற்சிக்கும் ஆண்களை அடுத்தடுத்து கொலை நடக்கிறது.

அந்தக் கொலைகளை செய்வது ஒரு அமானுஷ்ய உருவம் என்ன தெரிய வருகிறது.

அந்த அமானுஷ்ய உருவத்தை பற்றி தெரிந்து கொள்ள அந்த ஊர் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர், கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களையும் தலக்கரை கிராமத்திற்கு அனுப்புகிறார்.

தமிழில் சமையல் யூடியூப் சேனல் நடத்தும் மாஸ்டர் மகேந்திரனும் நண்பர்களும் ஊருக்குள் செய்யும் லூட்டியில் ஆரம்பிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் அந்த தலைக்கரை ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

இறுதியில் அந்த அமானுஷ்ய உருவத்தை பற்றி கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவருடைய நண்பர்கள் தெரிந்து கொண்டார்களா? தெரிந்து கொள்ளவில்லையா? அந்த அமானுஷ்ய உருவம் ஏன் இப்படி ஜாதி வெறி பிடித்து அலைகிறது? கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் காதல் கைகூடியதா? கை கூடவில்லையா? என்பதுதான் இந்த ரிப்பப்பரி  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரிப்பப்பரி திரைப்படத்தில் கதாநாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார்.

மாஸ்டர் மகேந்திரன் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருந்தாலும் அவருடைய நடிப்பிலும் எவ்வளவு செயற்கைத்தனம் காட்ட முடியுமா அவ்வளவு செயற்கை தனத்தை நடிப்பில் காண்பிக்கிறார்.

பல இடங்களில் சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பொறுமையை சோதிக்க வைக்கிறார்

நடிப்பிலும் காமெடி செய்கிறேன் என்ற பெயரிலும் ரசிகர்களை கடுப்பேற்றுகிறார்.

இந்த ரிப்பப்பரி திரைப்படத்தில்
கதாநாயகி என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் வருகிறது.

கொஞ்சம் கூட அந்த கதாநாயகி கதாபாத்திரம் முக்கியத்துவம்  கொடுக்கப்படவில்லை.

கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் நண்பர்களாக வரும்  நோபல் கே ஜேம்ஸ், மாரி,
இவர்கள் மட்டும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள்.

கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரனின் காதலியை காதலிக்கும் போட்டிக் காதலனாக வரும்  கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உடல்மொழி சிரிப்பு ரகம் அருமை.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம். ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் துவாரக தியாகராஜனின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை மிகவும் சுமாராக உள்ளது.

ஆனால் இப்படி எல்லாம் ஒரு திரைப்படத்தை நாம் பார்த்திருக்கவே முடியாது.

அப்படி ஒரு ஜானர் திரைப்படத்தின் சில காட்சிகள் திரைப்படம் பார்க்கும் நம்மை மறந்து சிரிக்க வைத்தாலும், நம்பவே முடியாத கதையும், கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாத திரைக்கதையும் நம்மை பாதியிலேயே திரையரங்கை விட்டு வெளியேறிவிடலாம் என தோன்றுகிறது.

மதிய வெயிலுக்கு படமே இல்லை என்பவர்கள் ஜாலிக்காக வேண்டுமானால் ரிப்பப்பரி படத்திற்கு வரலாம்.

பேய்  திரைப்படம் என்றால் திரைப்படம் பார்க்கும் நமக்கு பயம் வரும் ஆனால் பயமா? அப்படினா? என்னவென்று சிந்திக்க வைக்கிறது.

லாஜிக் இல்லாமல் கதை யோசித்த இயக்குனர் லாஜிக் உள்ள திரைக்கதையை  இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் திரைப்படம் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் “ரிப்பப்பரி” திரைப்படம் பேய் வேஷம் போட்டு பூச்சாண்டி காண்பிக்கிறார்கள்.