’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, செந்தில், சரவனன், மயில் சாமி, லிஸ்ஸி ஆண்டனி, சுப்பு பஞ்சு, இமயவர்மன், அட் வைத்தி ஜெய் மஸ்தான், வைகா ரோஸ், அஷ்மிதா சிங், சித்ரா லட்சுமணன், ஹரிகா பெடாதா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷங்கர் தயாள் N.

ஒளிப்பதிவாளர் :- J .லக்ஷ்மன் MFI.

படத்தொகுப்பாளர் :-  A.ரிச்சர்ட் கெவின்.

இசையமைப்பாளர் :-  “சாதக பறவைகள்” சங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- மீனாக்ஷி அம்மன் மூவிஸ்.

தயாரிப்பாளர் :- அருண்குமார் சம்பந்தம், இயக்குநர் ஷங்கர் தயாள் .N.

ரேட்டிங் 2./5.

அரசியல்வாதியாக இருக்கும் யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை பார்க்க வந்த வடமாநில பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறார்.

இதனால் வடமாநில பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த வடமாநில பெண்ணை யோகி பாபு மனைவி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் .

கதாநாயகன் யோகி பாபுவின் மகன் இமயவர்மன் தன் தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும். என்ற ஆசையோடு வளர்ந்து வருகிறான்.

கள்ள உறவில் உள்ள மனைவியின் மகனும் அரசியல்வாதியாகி தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறான்

யோகி பாபுவின் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அனைத்து அம்சங்களுடன் வளர்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, அமையவில்லையா? என்பதுதான் இந்த‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தக் குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தில் கதாநாயகனாக இமய வர்மன் நடித்திருக்கிறார்.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் இமய வர்மன் அருமையாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தாலும், திரைப்படத்தின் சில காட்சிகளில் திடீர் திடீரென்று தலைக்காட்டி விட்டு மறைந்து விடுகிறார்.

யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில காட்சிகளில், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.

நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள்.

சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறது.

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் ‌

இசையமைப்பாளர் சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படம் அதிகளவில் குறைகள் இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.

error: Content is protected !!