வேம்பு திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஷீலா, ஹரி கிருஷ்ணன், ஜெயராவ், மாரி முத்து, பரியேறும் பெருமாள் கர்ணன் புகழ் ஜானகி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜஸ்டின் பிரபு.வி.
ஒளிப்பதிவாளர் :- குமரன்.எ.
படத்தொகுப்பாளர் :- வெங்கட் ரமணன்.கே.ஜெ.
இசையமைப்பாளர் :- மணிகண்டன் முரளி.
தயாரிப்பு நிறுவனம்:- மஞ்சள் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- கோல்டன் சுரேஷ் – எஸ். விஜயலட்சுமி.
ரேட்டிங் :- 3.5/5.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தக் கிராமத்தில் இருக்கும் கதாநாயகி ஷீலாவின் தந்தை செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கதாநாயகி ஷீலா சிலம்பம் கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் நடக்கும் சிலம்ப விளையாட்டு போட்டியில் முதலிடத்தைப் பெற்று பரிசு வென்றவர்.
இவருடைய சொந்த அத்தை மகன் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் அதே ஊரில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் கதாநாயகி ஷீலா இருவருக்கும் இடையில் ஒரு நட்பும் உள்ளது.
அதே சமயம் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன்க்கு கதாநாயகி ஷீலா மீது சிறு வயது முதல் காதல் இருந்து வருகிறது.
கதாநாயகி ஷீலாவுக்கு சிலம்பு விளையாட்டில் மிகப் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்பதிலும் மிகப் பெரிய போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என கனவோடு வாழ்ந்து வருகிறார்.
செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கதாநாயகி ஷீலாவின் தந்தைக்கு கனவெல்லாம் தெரிந்திருந்தாலும் அந்த கிராமத்து மக்களின் வாழ்வியலோடு ஒத்துப் போக வேண்டிய சூழலில் இருப்பதால் கதாநாயகி ஷீலாவை கதாநாயகன் ஹரி கிருஷ்ணன்க்கு திருமணம் செய்து வைக்கிறார்.
வேம்பு முதலில் இதற்கு மறுத்தாலும் பின்பு தன்னுடைய தந்தையின் கண்ணீருக்காக, சிலம்பு கனவை ஒத்தி வைத்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார்.
மிகவும் சந்தோஷமாக நடந்த திருமண வாழ்க்கை அன்றைய நாள் இரவில் ஒரு மிகப் பெரிய இடி கதாநாயகி ஷீலாவின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.
அந்த இடியிலிருந்து கதாநாயகி ஷீலா தப்பித்தாளா?, தப்பிக்க வில்லையா?, கதாநாயகி ஷீலாவின் சிலம்பக் கனவு என்ன ஆனது?, என்பதுதான் இந்த ‘வேம்பு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வேம்பு திரைப்படத்தில் கதாநாயகியாக ஷீலா நடித்திருக்கிறார்.
பெண்ணியம் பேசும் திரைப்படங்களிலேயே நடித்து வரும் கதாநாயகி ஷீலா, இந்த திரைப்படத்திலும் ஒரு அழகான ‘வேம்பு’ என்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறார்.
இந்த வேம்பு திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார்.
வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் “நடிப்பு அரக்கன் நான் இல்லை” என்று அவர் சொன்னாலும் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் கண்களை உருட்டி, உருட்டி வைத்துக்கொண்டு பரிதாபமாக அவர் பேசுகின்ற அனைத்து வசனங்களாலும், முக பாவனையாலும் ஒரு பரிதாப உணர்வை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண் கலங்க வைத்துவிட்டார்.
கதாநாயகி ஷீலாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சின்ன சின்ன விஷயங்களில்கூட அழகாக கச்சிதமாக செய்து நம்மைப் பெரிதும் கவர்ந்து இருக்கிறார்.
கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் அம்மாவாக நடித்த ஜானகி.. இருவருமே போட்டி போட்டுக்கொண்டு செண்டிமெண்ட் காட்சிகளில் மிக இயற்கையாக, மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து மிகச் சிறந்த நடிகர்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் விடை பெற்று இருக்கக் கூடாது.
தன்னுடைய எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்து திரைப்படத்தின் முடிவை ஒரு அழகான முடிவாக முடித்து வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் ஒளிப்பதிவு மூலம் மலைப் பிரதேசத்திலேயே எடுத்திருப்பதால் இயற்கை அழகுள்ள காட்சிகளை மிக அருமையாக திரைப்படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் ஏலே பொன்னம்மா என்ற பாடல் மட்டும் இன்னமும் காதில் ரீங்காரமாய் ஒழித்துக் கொண்டே இருக்கிறது.
பின்னணி இசையில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இந்த சிறந்த திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜஸ்டின் பிரபுவிற்கு நமது இணையத்தளம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மொத்தத்தில் – இந்த வேம்பு இப்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு நிச்சயமாக தற்காப்பு கலை ஒன்று தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம என்பதை கூறும் திரைப்படம்.











