ஒன் வே திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.

நடிகர் நடிகைகள் :- பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்.எஸ்..சக்திவேல்.

ஒளிப்பதிவு :- முத்துக்குமரன்.

படத்தொகுப்பு :- சரண் சண்முகம்.

இசை :- அஸ்வின் ஹேமந்த்.

தயாரிப்பு :-  ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ்.

ரேட்டிங் :- 2.5 / 5.

தமிழ் திரைப்பட உலகில் விளையாட்டு மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது.

தனது சொந்த நிலத்தில் விவசாயம் இல்லாமல் இதற்கு முன் விவசாயத்திற்காக தந்தை வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்கும் நிலையில் நிரந்தரமான வேலை இல்லாமல் தனது தாய் கோவை சரளா மற்றும் தங்கை ஆரா ஆகியோருடன் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் பிரபஞ்சன்.

தனது தந்தை வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் தனக்கு கிடைத்த வேலையை செய்துக வருகிறார் நாயகன் பிரபஞ்சன்.

இதற்கிடையே ஊரில் கஷ்டப்படுபவர்களுக்கு பார்த்து வட்டிக்கு பணம் கொடுக்கும் சார்லஸ் வினோத், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் சார்லஸ் வினோத் அந்த கிராமத்தில் உள்ள பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதாநாயகனின் பிரபஞசனுடைய தங்கை மீது சார்லஸ் வினோத் கண் படுகிறது.

கதாநாயகன் பிரபஞ்சன் தாய் கோவை சரளாவிடம் சொன்ன தேதியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வில்லை என்றால் உங்களுடைய மகளை மல்லிகைப்பூ வைத்து தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்கிறார் சார்லஸ் வினோத்

வாங்கிய கடனை அடைப்பதற்காக கதாநாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார்.

அதற்காக தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த தாலியை தாய் கோவை சரளா விற்று கதாநாயகன் பிரபஞ்சனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய கதாநாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார் கதாநாயகன் பிரபஞ்சன்.

இந்த நிலையில், கதாநாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

பணக்காரர்களால் அப்பாவிகளின் உயிரை வைத்து துப்பாக்கியால் சுட்டு விளையாடப்படும் சூதாட்டமான அந்த போட்டியில் கலந்துக்கொள்பவர்களின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றாலும், அந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள கதாநாயகன் பிரபஞ்சன் முடிவு செய்கிறார்.

அதே சமயம், அந்த விளையாட்டை தடுக்க இண்டர்போல் போலீஸ் முயற்சியில் இறங்குகிறது.

இறுதியில் கதாநாயகன் பிரபஞ்சன் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா?
அல்லது உயிரை விட்டாரா?, அந்த விளையாட்டு போட்டி என்ன? அதனை இண்டர்போல் போலீஸ் ஏன் தடுக்க நினைக்கிறது? என்பதுதான் இநத ஒன் வே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த உண்மை திரைப்படத்தில் பிரபஞ்சன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

அவருடைய அப்பாவித்தனமான நடிப்பு மிக அருமையாக நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபஞ்சன், கிராமத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

தன் குடும்ப கஷ்ட்டத்தை போக்குவதற்காக பல வேலைகள் செய்பவர், தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அந்த பயங்கர விளையாட்டில் ஈடுபட்டாலும், சக மனிதர்களை கொல்ல மாட்டேன் என்று அவர் தடுமாறும் இடங்களில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பிரபஞ்சன் தங்கையாக நடித்திருக்கும் ஆரா, நம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல் இயல்பாக இருக்கிறார்.

அவருடைய நடிப்பும் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது.

கடன்காரர்களின் தொல்லைக்கு ஆளாகும் ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி சிறப்பாக நடித்திருக்கும் ஆராவுக்கு தமிழ் திரைப்பட உலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.

கதாநாயகனின் தாயாக நடித்திருக்கும் கோவை சரளா, தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.

மீண்டும் ஒரு மனோரமா ஆச்சியை பார்த்தது போல் இருக்கிறது கோவை சரளாவை அப்படி ஒரு எதார்த்தமான நடிப்பு.

வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்தின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்துல்லா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அமைதியாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

பவா செல்லதுறை உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமாகவும், புரியும் விதமாகவும் இருக்கிறது.

பின்னணி இசை கதையோடு பயணிப்பதோடு, ஒரே கதைக்களத்தில் இரண்டு வெவ்வேறு களங்களுக்கான பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

முத்துக்குமரனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

முதல் பாதியில் கிராமத்தின் அழகை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பவர்,

இரண்டாம் பாதியில் திரைப்படத்தின் கோணத்தையே மாற்றும் அளவுக்கு காட்சிகளை கையாண்டுள்ளார்.

குறிப்பாக உயிரை வைத்து விளையாடப்படும் போட்டியை காட்சிப்படுத்திய விதம் பதற வைக்கிறது.

படத்தொகுப்பாளர் சரண் சண்முகம் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

இரண்டாம் பாதியில் நடத்தப்படும் போட்டியை தொகுத்திருக்கும் விதம் திரைப்படம் பார்ப்பவர்களை பயபப்ட வைத்திருக்கிறது.

இந்த ஒன் வே திரைப்படத்தை
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.சக்திவேல், பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

குறிப்பாக விவசாயிகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் எத்தகைய துயரத்தோடு வாழ்கிறது என்பதை முதல் பாதியில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்கு ஏழைகளின் உயிரை எப்படி காவு வாங்குகிறது, என்பதை இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கும் இயக்குநர் அந்த காட்சிகளை ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக கையாண்டிருப்பது திரைப்படத்தின் கூடுதல் பலம்.

இப்படி எல்லாம் இங்கு நடக்கிறதா? என்று திரைப்படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் இரண்டாம் பாதியை படு விறுவிறுப்பாக இயக்குநர் நகர்த்தி செல்கிறார்.

நடிகர்களை கையாண்ட விதம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக படம் மிக தரமாக இருப்பதோடு,

ஒரு புதிய விஷயத்தை மிக வித்தியாசமாகவும் அதே சமயம், அதை விவசாயத்தின் பின்னணியில் சொல்லியிருப்பதோடு, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பாராட்டலாம்.

மொத்தத்தில் ஒன்வே திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.