மனிதர்கள் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கபிலர் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜுன்தேவ் சரவணன், சாம்பசிவம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம் இந்திரா.
ஒளிப்பதிவாளர் :- அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.
படத்தொகுப்பாளர் :- தின்சா.
இசையமைப்பாளர் :- அனிலேஷ் எல் மேத்யூ, ஜான் ராபின்ஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டுடியோ மூவிங் ட்ரிபிள். . ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம் கே, தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், யுவராஜ் என.
ரேட்டிங் :- 2.5./5.
காரில் பயணப்படும் ஆறு நண்பர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள்.
மது அருந்திய நண்பர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட அதில் ஒருவன் கத்தி எடுத்து குத்தி விட ஒருவன் மட்டும் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
இறந்த ஒருவனின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு இந்த கொலை பழியிலிருந்து இருந்து தொப்பி விடலாம் என மற்ற நண்பர்கள் முடிவு செய்கிறார்கள்.
இறந்த ஒருவனின் உடலை கார் டிக்கியில் எற்றிக் கொண்டு புதைக்க இடம் தேடி அலைகிறார்கள்.
இறந்த ஒருவனின் உடலை கார் டிக்கியில் எற்றிக் கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினர் போல தோன்றும் வாட்ச்மேன் , பொதுமக்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வழிப்பறித் திருடர்கள் என்று பல பேரிடம் சிக்கி ஒருவழியாக உண்மை வெளிப்படாமல் தப்பித்து ஒரு காட்டுப்பகுதியில் வந்து குழி தோண்டிப் இறந்தவரின் உடலை புதைக்கும் போது, இறந்தவர் உயிரோடு இருப்பது தெரியவருகிறது.
”காப்பற்றி விடலாம்” என மற்ற நண்பர்கள் சிலர் கூற, ”போகும் வழியிலோ உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டால் நாம் அனைவரும் காவல்துறையில் மாட்டிக் கொண்டு சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
இறந்தவன் இறந்ததாகவே இருக்கட்டும் எனவே அப்படியே புதைத்து விடுவோம் என மற்றும் நண்பர்கள் கூறுகிறார்கள்.
இதன் பின் அவர்களது முடிவு அவர்களுக்கு எத்தகைய முடிவை தேடிக்கொடுத்தது என்பதுதான் இந்த ‘மனிதர்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் அனைவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு மூலம் இயற்கை வெளிச்சம், கார் மற்றும் சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிப்பதிவாளர் காட்சிகளை திரைப்படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசையில் கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்தை மிக அருமையாக பின்னணி இசை மூலம் செய்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக எளிமையான முறையில் அதே சமயம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இராம் இந்திரா,
மொத்தத்தில் – ‘மனிதர்கள்’ இந்த கிரைம் திரில்லர் சுமார்.











