“ஜாலியோ ஜிம்கானா” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  பிரபுதேவா, மடோனா செபஸ்டின், யோகிபாபு, அபிராமி, ரோபோ சங்கர், புஜிதா, ஒய் ஜி மகேந்திரன், மதுசூதனன் ராவ், ஜான் விஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சக்தி சிதம்பரம்.

ஒளிப்பதிவாளர் :- கணேஷ் சந்திரா.

படத்தொகுப்பாளர் :-   ராமர்

இசையமைப்பாளர் :- அஸ்வின் விநாயகமூர்த்தி.

தயாரிப்பு நிறுவனம் :- டிரான்ஸ் இந்தியா நிறுவனம்.

தயாரிப்பாளர்கள் :- ராஜேந்திர ராஜன் – புனிதா ராஜன்.

ரேட்டிங் :- 3./5.

அரசியல்வாதியான  மதுசூதனன் ராவின் பல்வேறு தில்லு முல்லுகளை அட்வகேட்டாக இருக்கும் கதாநாயகன் பிரபுதேவா வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்

இருக்கும் கதாநாயகன் பிரபுதேவா. இதனால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய அளவில் பகை இருக்கிறது.

கதாநாயகி மடோனா செபஸ்டின் மற்றும் இரண்டு தங்கைகள் மூவர் மகள்கள் அபிராமிக்கு உள்ளனர்.

அபிராமியின் தன் தாத்தா ஒய் ஜிமகேந்திரனின் மருத்துவ செலவுக்காக வட்டிக்கு ஒருவரிடம் பணம் கேட்க, கதாநாயகி மடோனா செபஸ்டினின் தன் வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் வந்து விடுகிறது.

தனது வங்கிக் கணக்கில் வந்த பணத்தினை எடுத்து தன் தாத்தா ஒய் ஜி மகேந்திரன் மருத்துவ  செலவு செய்து விடுகிறார் கதாநாயகி மடோனா செபஸ்டின்.

கதாநாயகி மடோனா செபஸ்டினின் வங்கிக் கணக்கில் வந்த 25 லட்சம் பணத்தினை எடுத்து தன் தாத்தா ஒய் ஜி மகேந்திரன் மருத்துவ  செலவு செய்து விடுகிறார்.

கதாநாயகி மடோனா செபஸ்டினுக்கு அதன்பிறகு தான் தெரிகிறது 25 லட்சம் ரூபாய் தவறுதலாக மதுசூதனன் ராவின் வங்கி கணக்கில் இருந்து அவருடைய ஆட்கள் தவறுதலாக டிரான்ஸ்பர் செய்து விடுகிறார்கள்.

அபிராமி கதாநாயகி மடோனா செபஸ்டின் மற்றும் அவருடைய இரண்டு மகள்களும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு மிரட்ட என்ன செய்வதென்று தெரியாமல், கொடைக்கானலில் ஹோட்டலில் தங்கி இருக்கும் அட்வகேட்டான  கதாநாயகன் பிரபுதேவாவிடம் ஐடியா கேட்க செல்கின்றனர்.

அவர் தங்கி இருக்கும் ஹோட்டல் ரூமுக்கு சென்ற பிறகுதான் தெரிகிறது கதாநாயகன் பிரபுதேவா ஏற்கனவே இறந்திருக்கிறார் என தெரிந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

அபிராமி கதாநாயகி மடோனா செபஸ்டின் மற்றும் அவருடைய இரண்டு மகள்களும் இறந்த கதாநாயகன் பிரபுதேவாவின் பாடியை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், ஊர் சுற்றுகின்றனர்.

இந்நிலையில், மதுசூதனன் ராவின் ஆட்கள் கதாநாயகன் பிரபுதேவாவை கொல்வதற்காக துரத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கதாநாயகன் பிரபுதேவாவின் பாடியை வைத்து மிகப்பெரும் திட்டம் தீட்டுகிறார் அபிராமி கதாநாயகி மடோனா செபஸ்டின் மற்றும் அவருடைய இரண்டு மகள்களும் கதாநாயகன் பிரபுதேவாவை கொன்றால் மட்டுமே தனக்கு மினிஸ்டர் பதவி கிடைக்கும் என்பதால் கதாநாயகன் பிரபுதேவாவை தேடி அலைகிறார் மதுசூதனன் ராவ் ஒரு பக்கம் தேடி அலைகிறார்.

அதன்பிறகு அபிராமி கதாநாயகி மடோனா செபஸ்டின் மற்றும் அவருடைய இரண்டு மகள்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை மதுசூதன ராவ் திருப்பி வாங்கினார்களா,?  பணத்தை வாங்கவில்லையா,? கதாநாயகன் பிரபுதேவாவை மதுசூதன ராவ் கொலை செய்தாரா? கொலை செய்யவில்லையா?
என்பதுதான் இந்த “ஜாலியோ ஜிம்கானா” திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த ஜாலியோ “ஜிம்கானா” திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் நடிகர் நடன இயக்குனர் பிரபு தேவா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா வழக்கமான நடிப்பைக் கொடுக்காமல் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த “ஜாலியோ ஜிம்கானா” திரைப்படத்தில் இறந்தவர் போல் மிக அருமையாக நடித்து மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த “ஜாலியோ ஜிம்கானா” திரைப்படத்தில் கதாநாயகியாக
கதாநாயகி மடோனா செபஸ்டின் நடித்திருக்கிறார்.

கதாநாயகி மடோனா செபஸ்டின் மடோனாவின் இயல்பான நடிப்பு திரைப்படம் முழுவதும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த “ஜாலியோ ஜிம்கானா” திரைப்படத்தில் நடித்திருக்கும் அபிராமி, ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ரெடின் கிங்க்ஸ்லி, யோகி பாபு என பலர் காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடி இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு மிகவும் கலர்ஃபுலாக இருக்கிறது.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் திரைப்படத்திற்கு மிக அருமையாக  கை கொடுத்திருக்கிறது.

எந்த ஒரு  காட்சிகளில் லாஜிக் பார்க்காமல் சிரிப்பதற்கென்று திரையரங்கிற்குள் சென்று சிரிக்க வேண்டும் என்றெண்ணினால் ஜாலியோ ஜிம்கானா நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் படம் தான்.

மொத்தத்தில் ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் லாஜிக் இல்லாத மேஜிக்.

error: Content is protected !!