‘மார்க்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, விதார்த், தீப்ஷிகா, ரோஷினி பிரகாஷ், டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் கோர்ஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விஜய் கார்த்திகேயா.
ஒளிப்பதிவாளர் :- சேகர் சந்துரு.
படத்தொகுப்பாளர் :- எஸ்.ஆர். கணேஷ் பாபு.
இசையமைப்பாளர் :- பி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு நிறுவனங்கள் :- சத்ய ஜோதி பிலிம்ஸ் & கிச்சா கிரியேஷன்.
தயாரிப்பாளர் :- டி.ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன்.
ரேட்டிங் :- 3.5./5.
ஒரே நாளில் 16 சிறுவர் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள்.
காவல்துறை அதிகாரியான தற்போது பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட கதாநாயகன் சுதீப் அந்த 16 சிறுவர் மற்றும் சிறுமிகளையும் எப்படியாவது காப்பாற்றி மீட்க வேண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதே நேரத்தில் அந்த மாகாணத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதரத்தை கைப்பற்றும் பொறுப்பையும் கதாநாயகன் சுதிப்பிடம் வழங்கப்படுகிறது.
ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர்களை தேடும் கதாநாயகன் சுதீப், மறுபக்கம் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட முதல்வரின் வீடியோ ஆதாரத்தையும் தேடுவதோடு, இரண்டு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதையும் கதாநாயகன் சுதீப் கண்டுபிடிக்கிறார்.
16 சிறுவர் மற்றும் சிறுமிகளை கதாநாயகன் சுதீப் காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா?,
மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட முதல்வரின் வீடியோ ஆதாரத்தையும் கைப்பற்றினாரா?, கைப்பற்றவில்லையா?, என்பதுதான் இந்த “மார்க்” திரைப்படத்தில் மீதிக்கதை.
இந்த “மார்க்” திரைப்படத்தில் கதாநாயகனாக கர்நாடகா நடிகர் சுதீப் நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுதீப் காவல்துறை சீருடை அணியாமல் கடமையை செய்யும் அதிரடியான நடிப்பு மூலம் திரைப்படம் முழுவதும் மாசான நடிப்பை கொடுத்து மாசாகவே வலம் வருகிறார்.
போதையில் காவல் நிலையத்தில் ரவுடி போல் அறிமுகமாகும் கதாநாயகன் சுதீப் திரைப்படத்தின் முதல் காட்சியில், முதல் ஒவ்வொரு காட்சிகளிலும் சிகரெட் புதைப்பது போலவே நடித்து கடைசி காட்சியில் ”சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும்”, என்று இறுதியில் வசனம் பேசும் காட்சி வரை, தனி ஒருவராக முழு திரைப்படத்தையும் ஒற்றை ஆளாக தன்னுடைய தோளில் சுமந்து திரைப்பட ரசிகர்களின் கவனத்தை முழுவதையும் தன்னுடைய பக்கம் ஈர்த்து விடுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நடுங்க வைத்து விடுகிறார்.
அனைத்து காட்சிகளிலும் கடும் கோபத்துடன் திரைப்படம் முழுவதும் நவீன் சந்திரா கொடூரமான வில்லனாகவே வலம் வருகிறார்.
மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை எந்தவிதமான குறையின்றி மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த “மார்க்” திரைப்படத்தில் விக்ராந்திற்கு மிகவும் சிறிய கதாபாத்திரம் என்றாலும், திரைப்படத்தின் கதைக்கு மையப்புள்ளியாக பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் ஒகே என்ற அளவில் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தீப்ஷிகா, ரோஷினி பிரகாஷ், டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் கோர்ஜ், ட்ராகன் அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்துருவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் திரைப்படத்தை மாஸ்சாக, தெறிக்க விட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், இசையில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த “அண்ணன் யார் தெரிமா…” என்ற பாடல் நிச்சயம் ரசிகர்களை முனுமுனுக்க வைக்கும் என்பது உறுதி.
திரைப்படத்தின் ஆரம்பம் காட்சி முதல் இறுதி காட்சி வரை, பரபரப்பாக திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் மூலம் திரைப்படத்தை சிறப்பான பொழுதுபோக்காக நகர்த்திச் செல்லும் இயக்குநர் விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையாக இருந்தாலும் அதை ஒரு மாஸ் கதாநாயகனுக்கான திரைப்படமாக கொடுக்கும் மாஸ்சான வித்தையை தெரிந்து வைத்துக் கொண்டு மிக சரியான முறையில் பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் இயக்குனர் விஜய் கார்த்திகேயா வெற்றி பெற்றிருக்கிறார்.
சாதாரணமான ஒரு சிறிய கதையில் இருக்கும் மையக்கரு என்றாலும், அதற்கான பரபரப்பான திரைக்கதையை மிகவும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.
கன்னட திரைப்பட உலகில் மிகப்பெரிய அளவில் அபிநய சக்கரவர்த்தியாக வளம் வரும் மாஸ் கதாநாயகனாக சுதீப் போன்ற கதாநாயகனை வைத்து மாஸ் ஆக்ஷன் திரைப்படத்தை போரடிக்காத ஒரு முழுமையான ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.
மொத்தத்தில், ‘மார்க்’ திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாஸ் மார்க்.











