“ஏஸ்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள்:- விஜய்சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லூ பிரித்திவிராஜ், திவ்யா பிள்ளை, பி. எஸ். அவினாஷ், ராஜ்குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆறுமுககுமார்.
ஒளிப்பதிவாளர் :- கரண் B ராவத்.
படத்தொகுப்பாளர் :- ஃபென்னி ஆலிவர்.
இசையமைப்பாளர் :- சாம் சிஎஸ்.
தயாரிப்பு நிறுவனம்:- : 7cs என்டேர்டைன்மெண்ட்..
தயாரிப்பாளர் :- ஆறுமுககுமார்.
ரேட்டிங் :- 3.5/5.
கதாநாயகன் விஜய் சேதுபதி தன்னுடைய பழைய அடையாளங்களை மறைத்து மக்களோடு மக்களாக புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார்.
மலேசியா விமான நிலையத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி
யோகி பாபுவை சந்திக்க வீட்டில் தங்குகிறார்.
யோகி பாபு மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் கதாநாயகி ருக்மணி வசந்துடன் கதாநாயகன் விஜய் சேதுபதியுடன் நட்பு ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறுகிறது.
இதற்கிடையே கதாநாயகி ருக்மணி வசந்தக்கு விட்டை உடனடியாக மீட்க பணம் தேவை ஏற்படுகிறது.
கதாநாயகி ருக்மணி வசந்தின் வீட்டை மீட்க பணம் தேவை என்பதால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு கதாநாயகன் விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதி கடன் பட்ட ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க கதாநாயகன் விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதி வங்கியை கொள்ளை அடிக்க போடப்பட்ட திட்டத்தில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? கதாநாயகன் விஜய் சேதுபதியின் காதலி கதாநாயகி ருக்மணி வசந்த் பணம் பிரச்சனையிலிருந்து
எப்படி மீள்கிறார்?, என்பதுதான் இந்த ‘ஏஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஏஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதி
போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பின் மூலம் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளிலும் . திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் ரசிக்கும்படி அசத்தியிருக்கிறார்.
இந்த ஏஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் ஸ்கோர் செய்து அசத்துகிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறார்.
திரைப்படம் முழுவதும் வரும் யோகி பாபு, வரும் பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்.
திவ்யா பிள்ளை, மற்றும் வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை வந்த திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியாவில் உள்ள லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தி
காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது..
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப மிக அருமையாக இருக்கிறது கூட்டத்திற்கு பயணித்த இருக்கிறார்.
வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து எந்தவிதத்திலும் இந்த படம் தணித்து நிற்கிறது.
பிறகு, லாட்டரியில் விழும் பணம், அதன் மூலம் பிரச்சனைகள் என்று கதையை அருமையாக இயக்கியிருக்கிறார் படத்தை இயக்குநர் ஆறுமுககுமார்.
மொத்தத்தில் – விஜய் சேதுபதிக்கு கமர்சியல் திரைப்படமாக அமைந்திருக்கிறது.











