மழையில் நனைகிறேன், திரைப்படவிமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குரு ராஜா, வெற்றிவேல் ராஜா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டி.சுரேஷ் குமார்.

ஒளிப்பதிவாளர் :- ஜே. கல்யாண்.

படத்தொகுப்பாளர் :- ஜி.பி. வெங்கடேஷ்.

இசையமைப்பாளர் :- விஷ்ணு பிரசாத்.

தயாரிப்பு நிறுவனம் :- ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஸ்ரீவித்யா ராஜேஷ் & பி. ராஜேஷ் குமார்

ரேட்டிங்:- 2.5./5.

தந்தை மேத்யூ வர்கீஸ் தாய் அனுபமா குமார் இவர்களுக்கு ஒரு செல்ல மகன் கதாநாயகன் அன்சன் பால் தனது குடும்பம் வசதி உள்ளவர்கள் என்பதால், எந்தவொரு வேலைக்கும் செல்லாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, குடிப்பது என தனக்கு தோன்றியதை செய்பவராக இருந்து கொண்டு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் கதாநாயகன் அன்சன் பால் தனது தந்தை கண்டிப்புடன் இருந்தாலும் தாய் செல்லத்தில் வளர்கிறார்.

கதாநாயகி ரெபா மோனிகா ஜான் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பது தான் தனது கனவு இலட்சியம் என இருந்து வருகிறார்

இந்த நிலையில், கதாநாயகன் அன்சன் பால். கதாநாயகி ரெபா மோனிகா ஜானை கண்டதும் காதலில் விழுந்து விடுகிறார்.

கதாநாயகி ரெபா மோனிகா ஜான் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பது தான் தனது கனவு இலட்சியம் என இருந்து வருகிறார்

இந்த நிலையில், கதாநாயகன் அன்சன் பால். கதாநாயகி ரெபா மோனிகா ஜானை கண்டதும் காதலில் விழுந்து விடுகிறார்.

கதாநாயகன் அன்சன் பால் சில மாதங்களாக கதாநாயகி ரெபா மோனிகா ஜானை பின் தொடர்ந்து தனது காதலை வளர்த்து கொள்கிறார்.

ஒருநாள் கதாநாயகி ரெபா மோனிகா ஜான்னிடம் கதாநாயகன் அன்சன் பால் தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது காதலை கூறிவிடுகிறார்.

கதாநாயகன் அன்சன் பாலின் காதலை ஏற்க கதாநாயகி ரெபா மோனிகா ஜான் மறுத்து விடுகிறார்.

கதாநாயகன் அன்சன் பால் தன் கூறிய காதலை ஏற்கும் வரை உனக்காக காத்திருப்பேன் என்று கூறி சென்று விடுகிறார்.

பல நாட்கள் கடந்து செல்ல, கதாநாயகன் அன்சன் பாலின் ஒரு சில குணாதிசயங்கள் கதாநாயகி ரெபா மோனிகா ஜானுக்கு பிடித்துப் போக, அவர் மீது கதாநாயகி ரெபா மோனிகா ஜான் காதல் வயப்பட்டு பின் தொடர்கிறார்.

கதாநாயகன் அன்சன் பால் மற்றும் கதாநாயகி ரெபா மோனிகா ஜான் இவர்கள் இருவருக்கும் தொடர்ந்த காதல் ஒரு தலை காதலாக மாறி பின்பு இருதலை காதலாக மாறிவிடுகிறது.

தனது காதலை கதாநாயகன் அன்சன் பாலிடம் சொல்வதற்கு தயாராகும் கதாநாயகி ரெபா மோனிகா ஜான் இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய அளவில் விபத்து விபத்து ஒன்று ஏற்பட அந்த விபத்தில் கதாநாயகன் அன்சன் பால் மற்றும் கதாநாயகி ரெபா மோனிகா ஜான் இருவரும் சிக்கிக் கொள்ள இருவருமே பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்பினபு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதாநாயகன் அன்சன் பால் மற்றும் கதாநாயகி ரெபா மோனிகா ஜான் நலமுடன் வீடு திரும்பினார்களா? வீடு திரும்பவில்லையா? என்பதுதான் இந்த மழையில் நனைகிறேன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மழையில் நனைகிறேன் திரைப்படத்தில் அன்சன்பால் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அன்சன்பால். மலையாள திரைப்பட உலகில் அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் நல்லதொரு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அன்சன் பால் இந்த ஒரு முழு காதல் கதையின் நாயகனாக இந்த மழையில் நனைகிறேன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அன்சன்பால் காதல் செய்வதில் தனது நடிப்பை மூலம் ஒவ்வொரு இடத்திலும் காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த மழையில் நனைகிறேன் திரைப்படத்தில் கதாநாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார்.

கதாநாயகி ரெபா மோனிகா ஜான் வழக்கமான க்யூடான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் அன்சன்பால் நண்பர்களாக நடித்திருப்பார்கள் மற்றும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் கதாநாயகன் அன்சன்பால் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபமா குமார் இருவருமே கொடுக்கப்பட்டதை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகவும் அழகாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜே. கல்யாண் ஒளிப்பதிவு மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டு இருப்பது திரையில் நன்றாகவே தெரிகிறது.

இசையமைப்பாளர் விஷ்ணு பிரசாத் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இருவருக்கிடையே காதல் பயணம் திரைப்படத்திற்கு முதல் பாதியில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் காதலை உரச வைத்திருந்திருக்கலாம் .

மொத்தத்தில் – இந்த மழையில் நனைகிறேன் பார்க்கலாம்.