துரிதம் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75/5.
நடிகர் & நடிகைகள் :- சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, (ராம்ஸ்), வைஷாலி, ஐஸ்வர்யா, ஸ்ரீநிகிலா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சீனிவாசன்.
ஒளிப்பதிவு :- வாசன் & அன்பு டென்னிஸ்.
படத்தொகுப்பு :- நாகூரான் & சரவணன்.
இசை :- நரேஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- ட்ரீம் போகஸ்.
தயாரிப்பாளர் :- திருவருள் ஜெகநாதன்.
ரேட்டிங் :- 2.75./ 5.
சென்னை டிராவல்ஸ் ஒன்றில் கதாநாயகன் ஜெகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
கதாநாயகன் ஜெகன் காரில் கதாநாயகி ஈடன் மற்றும் அவருடைய தோழிகள் வைஷாலி ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா நாண்கு பேரும் தினந்தோறும் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம்.
கதாநாயகன் ஜெகன் ஒரு தலைபட்சமாக கதாநாயகி ஈடனை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி நெருங்கி விட சென்னையில் பணிபுரிய தந்தை கொடுத்த கால அவகாசமும் முடிந்து விட தன் வேலையை ராஜினாமா செய்து விடுகிறார் கதாநாயகி ஈடன்.
கதாநாயகி ஈடன் ஒரு நாள் கதாநாயகன் ஜெகனுக்கு போண் செய்து கார் எடுத்து கொண்டு வாருங்கள் பீச்க்கு செல்ல வேண்டும் என கூறுகிறார்.
இனி கதாநாயகி ஈடன் தன் காரில் பயணம் செய்ய மாட்டார் என கதாநாயகன் ஜெகன் போனை பிடுங்கி தனது மொபைல் எண்ணை டெலிட் செய்து விடுகிறார்.
கதாநாயகன் ஜெகன் காதல் தோல்வி அடைந்து விட்டோம் என கவலையில் இருக்கிறார்.
கதாநாயகி ஈடன் மறுநாள் காலை ஆறு மணிக்கு ட்ரெயினை மிஸ் பண்ணி விடுகிறார்.
கதாநாயகன் ஜெகன் தீபாவளிக்கு தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதால் அவருடைய பைக்கில் கதாநாயகி ஈடனை மதுரைக்கு அழைத்து செல்லுமாறு தோழிகள் கூறுகிறார்கள்.
எதிர்பாராதவிதமாக, கதாநாயகி ஈடனை கதாநாயகன் ஜெகன் சென்னையில் இருந்து மதுரைக்கு பைக்கில் அழைத்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
அது ஒரு பக்கம் இருக்க சென்னையில் ஹோட்டலில் பணிபுரிந்த வந்த வில்லன் ராம்ஸ் தனது ஹோட்டல் முதலாளி காரை எடுத்துக் கொண்டு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பயணப்படுகிறார்.
நடுவழியில் கதாநாயகி ஈடன் மற்றும் கதாநாயகன் ஜெகன் வந்த பைக் ரிப்பேர் ஆகிவிட வரும் கார்களிடம் லிப்ட் கேட்கிறார்கள்.
வில்லன் ராம்ஸ் காரில் லிப்ட் கொடுத்து கதாநாயகி ஈடன் காரில் கடத்தி விடுகிறார்.
அதன்பிறகு கதாநாயகன் ஜெகன் கதாநாயகி ஈடனை கண்டு பிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? கதாநாயகன் ஜெகன் காதலை கதாநாயகி ஈடன்
ஏற்றுக் கொண்டாரா? ஏற்றுக்கொள்ளவில்லையா? என்பதுதான் இநத துரிதம் திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த துரிதம் திரைபடத்தில் கதாநாயகனாக ஜெகன் நடித்திருக்கிறார்.
காதல் ஏக்கம், ஆக்ஷன் பரபரப்பு என எல்லா காட்சிகளிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஜெகன் ஏற்கனவே சண்டியர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஜெகன் மற்றும் பாலசரவனண் இருவருடைய காமெடி காட்சிகள் வொர்க்-அவுட் ஆகியுள்ளது
பாலசரவணன் கதைக்களத்தில் ஒரு நல்ல நண்பனாக வந்து நிற்கிறார்.
இந்த துரிதம் திரைப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் ஈடன் நடித்திருக்கிறார்.
கதைக்கேற்றவாறு கதாநாயகி ஈடன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் எ.வெங்கடேஷ். தனது சீனியர் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் வாசன் & அன்பு டென்னிஸின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
ஹைவேயில் நடக்கும் அனைத்து காட்சிகளும் ஒளிப்பதிவில் மிக கச்சிதமாகவும் அற்புதமாகவும் காட்சிப்படுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் நரேஷின் இசை மற்றும் பின்னணி இசை பாடல்கள் கதையின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
கிராமத்தில் நடக்கும் சாதி சண்டை, சென்னை சிட்டியில் நடக்கும் காதல் இரண்டையும் ஒன்றிணைத்து ஹைவேயில் ரோட்டில் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.
சிறிய கதையை எடுத்துக்கொண்டு திரைப்படம் முழுவதும் ஹைவேயில் நடக்கும்படியான கதை மற்றும் திரைக்கதையை கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.
கதாநாயகி கதாநாயகன் ஒன்று சேராமல் பிரிவது தான் க்ளைமாக்ஸில் திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.
மொத்தத்தில் துரிதம் திரைப்படம் வேகம் நிறைந்த நல்ல திரைப்படமாக இருக்கிறது.











