மின்மினி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில், நிவேதிதா சதீஷ் சந்தோஷ் பிரதாப், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- ஹலிதா ஷமீம்.

ஒளிப்பதிவாளர் :- மனோஜ் பரமஹம்சா ISC.

படத்தொகுப்பாளர் :- ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா.

இசையமைப்பாளர் :- கதீஜா ரஹ்மான்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- மனோஜ் பரமஹம்சா ISC , R. முரளி கிருஷ்ணன்

ரேட்டிங்:- 3.25../5.

தமிழ் திரைப்பட உலகில் பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் மின்மினி

திரைப்படத்தை எட்டு ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி வருகிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படப்பிடிப்பு நடத்தி விட்டு, பின்பு எட்டு ஆண்டுகள் காத்திருந்து இளம் பருவம் வந்தவுடன் அவர்களை நடிக்க வைத்து திரைப்படமாக்கியுள்ளார்.

இதுவரை இந்திய திரைப்பட உலகில் இதுபோன்ற இந்தத் திரைப்படம் போல் எந்த திரைப்படத்திலும் முயற்சி செய்யவில்லை.

இதுவே இந்திய திரைப்பட உலகில் முதல் முறையாகும் என சொல்லப்படுகிறது.

எங்களது மூவி விங்க்ஸ் இணையதளம் சார்பாக மிகப்பெரிய வாழ்த்துக்களை கூறுகிறோம்.

ஊட்டியில் உள்ள ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கதாநாயகன் பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை எலியும் பூனையாக இருந்து வருகிறார்கள்.

கதாநாயகன் பிரவீன் கிஷோர் உலகிலேயே மிகச் சிறந்த ஓவியனாக வேண்டும் என உலகில் சிறந்த ஓவிய அரங்குகளில் தனது ஓவியத்தை தலைசிறந்த ஓவியமாகநிலை நிறுத்த வேண்டும் என்பது கதாநாயகன் பிரவீன் கிஷோர் லட்சியமாக இருக்கிறார்.

மற்றும் கதாநாயகன் கவுரவ் காளை அனைத்து சிறந்த விளையாட்டு வீரராகவும் உலகம் சுற்றும் இரு சுகர் வாகனத்தில் பயணிக்கும் பயணியாக வட இந்தியாவில் உள்ள இமயமலைப் பகுதி முழுக்க  சுற்ற வேண்டும் என்பது கதாநாயகன் கவுரவ் காளையின் லட்சியமாக உள்ளது.

கதாநாயகன் பிரவீன் கிஷோரை எப்பொழுது கண்டாலும் கிண்டல் செய்யும் கௌரவ் காளை அந்த பள்ளியில் மிகவும் திறமையான மாணவன் என பெயர் வாங்கி இருக்கிறாள்.

இருவருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை கேலி கிண்டல் ராக்கிங் என கதாநாயகன் கௌரவ் காளை சீண்ட , கதாநாயகன் பிரவீன் கிஷோரின் பொறுமை மற்றும் மன்னிக்கும் குணம் காரணமாக இருவருக்கும் நட்பு உருவாகிறது.

அது முழுமையான நட்பை வெளிப்படுத்த முடியாமல் இருவரும் துடிக்கிறார்கள்.

அந்த நிலையில் அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகிறது.

அப்போது கதாநாயகன் பிரவீன் கிஷோரின் உயிரை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கதாநாயகன் கௌரவ் காளை அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பன் கதாநாயகன் கௌரவ் காளையின் ஆசைகளை நிறைவேற்றம் வேண்டும் என கதாநாயகன் பிரவீன் கிஷோர் முடிவெடுக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கதாநாயகன் கௌரவ் காளையின் இதயத்தை கதாநாயகி எஸ்தர் அனிலுக்கு பொருத்துகின்றனர்.

கதாநாயகன் கௌரவ் காளை படித்த பள்ளியிலே கதாநாயகி எஸ்தர் அனிலுக்கு படிக்க வேண்டும் என விரும்பி ஊட்டியில் உள்ள அதே பள்ளியில் சேருகிறாள்.

கதாநாயகி எஸ்தர் அனில் அந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் கதாநாயகன் பிரவீன் கிஷோரின் அனைத்து நடவடிக்கைகளை பின் தொடர்கிறார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் கௌரவ் காளையின் நண்பன் கதாநாயகன் பிரவீன் கிஷோர் என தெரிய வந்ததும் அவரை பின்தொடர்ந்து பள்ளி முதல் இமயமலை வரை பின் தொடர்கிறார்.

கதாநாயகன் பிரவீன் கிஷோர் தன் நண்பன் கதாநாயகன் கௌரவ் காளையின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்ய முடிவு எடுக்கிறார்.

அதேபோல் கதாநாயகி எஸ்தர் அணிலும் கதாநாயகன் கௌரவ் காளையின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பைக்கில் இமயமலை செல்கிறார்.

இருவரும் கதாநாயகன் கௌரவ் காளையின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் இமயமலைக்கு பயணப்படுகிறார்கள்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இந்த மின்மினி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மின்மினி திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக பிரவீன் கிஷோர், கவுரவ் காளை இருவரும் நடித்துள்ளனர்.

பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரவ் காளை மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவர் படிக்கும் பள்ளியில் அங்குள்ள மாணவர்களையும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களையும் மகிழ்விக்கும் பாரி முகிலன் கதாபாத்திரத்தில் ஸ்போர்ட்ஸ் மற்றும் நட்பு என ஏற்று மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சபரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர் இந்த பள்ளியில் மிகவும் சாந்தமான மாணவனாகவும் அதே வேலையில் இமயமலையில் பைக் பயணம் செய்யும்போது நல்லதொரு மனிதநேயமிக்க நபராகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்த மின்மினி திரைப்படத்தில் கதாநாயகியாக எஸ்தர் அணில் அடித்திருக்கிறார்.

இந்த காலத்தில் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியை ஓட்டுவதற்கோ அல்லது நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்கு மற்றவர்கள் உதவி எதிர்பார்க்கும் பெண்கள் மத்தியில் புல்லட்டில் ஒற்றை ஆளாக இமயமலையில் பயணம் செல்லும் கதாநாயகி எஸ்தர் அனில் கதாபாத்திரத்தில் நமக்கு ஆச்சிரியம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

கதாநாயகி எஸ்தர் அணில், கதாநாயகர்கள் பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் பள்ளியில் சின்ன சண்டை அவர்களுக்குள் உள்ள நட்பு மோதல் என அனைத்தையும் அழகாக தங்கள் உணர்வுகளில் அருகில் மூலம் காட்டி அருமையாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஊட்டியில் உள்ள பசுமையும் ஹிமாச்சல் பிரதேஷ் மலை பிரதேசம் மற்றும் பணிப்பிரதேசங்களையும் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ரேய்மெண்ட் டெரிக் கிரஸ்டா இயக்குநர் ஹலிதா சமீம் என்ன சொல்ல நினைத்தார்களோ அந்த கதையை விட அவர் படத்தொகுப்பு மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப மிகவும் அளவாக பயணித்திருக்கிறார்.

கதை சொல்லும் விதம், தொழில்நுட்ப ரீதியாக திரைப்படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவருடைய படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.

திரைக்கதையில் சிறு சிறு குறைகள் திரைப்படத்தில் இருந்தாலும் இமாலய பயணத்தை காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘மின்மினி’ திரைப்படம் மின்மினி மிகப்பெரிய ரசிகர்கள் மத்தியில் வெளிச்சத்தை அளவில் கொடுக்கும்.

error: Content is protected !!