மார்கழி திங்கள் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5./ 5.

நடிகர் & நடிகைகள் :- பாரதிராஜா, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி, சூப்பர் குட் சுப்பிரமணி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மனோஜ் கே பாரதிராஜா.

ஒளிப்பதிவாளர் :- வாஞ்சிநாதன் முருகேசன்.

படத்தொகுப்பு :- தியாகு.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- இயக்குனர் சுசீந்திரன்.

ரேட்டிங் :- 2.5./ 5.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் இருக்கும் பள்ளியில் கதாநாயகி ரக்ஷனா, படித்து வருகின்றார்கள்.

கதாநாயகி ரக்ஷனா படிக்கும் அதே வகுப்பில் அதே பள்ளியில் கதாநாயகன் ஷியாம் செல்வன் வந்து சேருகிறார்.

ஒரே வகுப்பில் படிக்கும் கதாநாயகன் ஷியாம் செல்வன் கதாநாயகி ரக்ஷனா பொது தேர்வில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கதாநாயகன் ஷியாம் செல்வன், கதாநாயகி ரக்ஷனா, இருவரும் படிக்கிறார்கள்.

கதாநாயகன் ஷியாம் செல்வன் கதாநாயகி ரக்ஷனா இருவருக்கும் இடையே யார் முதல் மார்க் வாங்குவது என்று போட்டி வருகிறது.

பொதுத் தேர்வில் கதாநாயகி ரக்ஷனா ஸ்டேட் போஸ்ட் வருகிறார்.

கதாநாயகன் ஷியாம் செல்வன் கதாநாயகி ரக்ஷனா இருவருக்கு  ஒரு கட்டத்தில் காதல்  மலர்கிறது.

கதாநாயகன் ஷியாம் செல்வனை விரும்புவதாக தன் தாத்தா பாரதிராஜாவிடம் கதாநாயகி ரக்ஷனா கூறிவிடுகிறார்.

தாத்தா பாரதிராஜா இருவரும் முன்று வருடம் கல்லூரி படிப்பை முடித்த பின்பு நானே திருமணம் நடத்தி வைக்கிறேன் இருவரும் சந்தித்து பேசவும் பார்க்கவும் கூடாது எனக் கூறி கண்டிஷன் போடுகிறார்.

அதன்பின் கதாநாயகன் ஷியாம் செல்வன் கதாநாயகி ரக்ஷனா இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.

இரண்டரை வருடம் கழித்து கதாநாயகி ரக்ஷனாவை சந்திக்க கதாநாயகன் ஷியாம் செல்வன் அந்த ஊருக்கு வருகிறார்.

கதாநாயகி ரக்ஷனாவின் தோழியிடம் கதாநாயகன் ஷியாம் செல்வன் என் குடும்ப கஷ்டத்திற்காக நான் துபாய் வேலைக்காக செல்ல இருப்பதால் தொலைபேசியில் கதாநாயகி ரக்ஷனாவிடம் உன்னை ஒரு முறை சந்தித்தே ஆக வேண்டும் என கூறுகிறார்.

கதாநாயகன் ஷியாம் செல்வன் துபாய் வேலைக்கு சென்றாரா? செல்லவில்லையா? கதாநாயகன் ஷியாம் செல்வன் கதாநாயகி ரக்ஷனா இருவரும் காதலில் வெற்றி பெற்றார்களா? காதலில் வெற்றி பெறவில்லையா? என்பதுதான் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மார்கழி திங்கள் திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஷியாம் செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

வினோத் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஷ்யாம் செல்வன் உணர்வுகளை தருவதில் மிகவும் பின் தங்கி விடுகிறார்.

என்னதான் முதல் திரைப்படமாக இருந்தாலும் கொடுத்த கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒரளவு நியாயம் சேர்க்க வேண்டாமா?

இந்த மார்கழி திங்கள் திரைப்படத்தில் புதுமுக நடிகை ரக்ஷனா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கவிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  புதுமுக நடிகை ரக்ஷனா காதல் காட்சிகளில் மிக அழகாகவும் இறுதி காட்சியில் தனது காதலனை கொலை செய்த கொலையாளிகளை பழிவாங்கும் காட்சிகளில் மிகவும் அருமையாகவும் எமோஷனலாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரக்ஷனாவின் தோழியாக நடித்திருக்கும் நக்ஷா சரண் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் குரலில் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும் தாத்தா கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்.

தாத்தாவாக நடித்திருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்க்கு மட்டும் வயது ஆகவில்லை அவருடைய நடிப்புக்கும் வயதாகிவிட்டது என அப்பட்டமாக தெரிகிறது.

சில காட்சிகளில் வயது மூப்பு காரணமாக முடியாதவரை வம்பு பண்ணி நடிக்க வைத்தது போல் தெரிகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவில் கூட இந்த தாத்தா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

அதேபோல் கதாநாயகி ரக்ஷனாவின் தாய் மாமனாக நடித்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

அப்புகுட்டி அவருடைய கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் தியாகுவின் மிக அருமையாக படத்தொகுப்பு பாரட்ட தக்கது.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் அவர் வாசித்த அவருடைய பாடல்களில் இருந்து எடுத்த இந்த திரைப்படத்தில் வாசித்து இருக்கிறார்.

காதல் சாதி ஆணவ படுகொலைகளை மைய்யப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மனோஜ் கே பாரதிராஜா.

மொத்தத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் சாதிய வெறிக்கு தண்டணை கொடுக்கும் திரைப்படம்.

error: Content is protected !!